Friday, 10 November 2017

Agatthiyar Jnanam 3

அகத்தியர் ஞானம் 3


 Related image
அண்ணாக்கு உண்ணாக்குள் பத்தவேதான்
அகாரமுடன் பதினாறு மிதற்குள் ளாகும்
விண்ணாடிப் பாயுமங்கேகால் மேலோ
விழிரெண்டு நடுநெத்தி மேனிப் பாரு
கண்ணாடி நீங்குமப்போ தமர்வாசல் மேல்
கால் மாறி யாடுமங்கே கும்பி ரேசி
பண்ணாடும் ஆறுவரைக் கேறும் வாசி
பளிச் சென்று கோடி ரவி காந்தியாமே (1)

Translation:
The tongue holding the uvula
The sixteen, including akara, will be inside this
When it flows seeking the space, the breath is upwards
Focus the eyes at the middle of the forehead
The sight through the eyes (kannaadi) will go to entrance of the celestial
The breath will reverse and dance, perform kumbaka and rechakam
Vasi will rise to the six peaks
The brilliance of millions of suns, will be there.

அகத்தியர் தனது ஞானம் 1, 2 ல் எவ்வாறு பஞ்ச பூதங்களும் தன்மாத்திரங்களும் கர்ம ஞானேந்திரியங்களும் உயிரெழுத்துக்களும் மனித உடலில் சக்கரங்களாக இருக்கின்றன என்றும், குண்டலினி யோகத்தைப் பற்றியும் கூறினார்.  இந்த ஞானம் 3 ல் அவர் ஆக்ஞா சக்கரத்தைப் பற்றியும் கேசரி முத்திரையைப் பற்றியும், சாம்பவி முத்திரையைப் பற்றியும் அதனால் ஏற்படும் விசேஷ உணர்வுகள் காட்சிகள் ஆகியவற்றைப் பற்றியும் கூறுகிறார். கேசரி முத்திரை, வாசி யோகம் எனப்படும் மூச்சுப் பயிற்சியில் ஒரு முக்கியமான முத்திரையாகும்.  இதனைப் பற்றிய விவரங்களைக் கீழே பார்ப்போம்.

செயல்முறைத் தளத்தில் கேசரி முத்திரை என்பது நாக்கை உள்நாக்கு எனப்படும் அண்ணாக்கினுள் செலுத்துவது.  இதற்கு நாக்கின் அடியில் உள்ள தசையை மென்மையாக, கொஞ்சம் கொஞ்சமாக பல மாதங்களில் அறுத்து நாக்கின் நீளம் அதிகரிக்கப்படுகிறது.  நாளடைவில் நாக்கு, மூக்கும் வாயும் சேரும் இடத்தைத் தொடுமளவு நீளுகிறது.  அதன் நுனி இரு புருவங்களுக்கும் மத்திவரை சென்று அங்குள்ள சுழுமுனை, இடை, பிங்கலை ஆகியவை சேரும் புள்ளியைத் தொடுகிறது.  அப்பொழுது மூச்சின் அசைவு நிறுத்தப்படுகிறது.  யோகத்தின் உச்ச நிலையை அடைந்த யோகிகள் இந்த முத்திரையில் மூச்சின் ஓட்டம் இல்லாமல் நாற்பது நாட்கள் வரை அமர்ந்துள்ளனர்.  இதன் பலனாக pineal gland என்னும் நாளமில்லா சுரப்பியிருந்து அம்ருதம் ஊறுகிறது.  இந்த அமிர்தத்தைப் பருகியவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுகின்றனர் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.  விண்ணாடி என்ற சொல் விண்ணை நாடி என்றும் விண்ணை நோக்கிச் செல்லும் நாடி என்றும் பொருள்படுகிறது.  போதமர் வாசல் என்பது- தாமரைப் பூவாகக் காட்டப்படும் சக்கரத்தைக் குறிக்கிறது.

பட்டாசார்யர் என்பவர் “க என்பது பிரம்மாவைக் குறிக்கிறது.  சரி என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் போய் அவ்வாறு அசைவைத் தொடர்ந்து பெற்றிருப்பது என்று பொருள்படும்.  இவ்வாறு கேசரி என்பது பிரம்மாவின் செயல்பாட்டு சக்தியுடன் நகர்ந்துகொண்டே இருப்பது” என்கிறார்.  “க என்பது ஆகாயத்தைக் குறிக்கும்.  அதனால் கேசரி என்பது ஆகாயத்தில், வெளியில் சஞ்சரிப்பது என்று பொருள்படும்” என்றும் ஆன்றோர் கூறுகின்றனர்.  குண்டலினி யோகத்தைப் பற்றிப் பேசும்போது சுவாமி சிவானந்தா, முத்திரைகளில் தலையாய முத்திரை கேசரி முத்திரை என்கிறார்.  அபிநவ குப்தர் தனது தந்திராலோகா என்னும் நூலில் கேசரி முத்திரை என்பது பரவுணர்வு வெளியில் பறப்பது என்று விளக்குகிறார்.

சாம்பவி முத்திரை என்பது கண்களை மேலே நோக்கி புருவ மத்தியைப் பார்ப்பது.  அது இருநிலைப் பட்ட பார்வையை விலக்கி ஒருமைப் பார்வையை தரும் என்று கருதப்படுகிறது.  அப்போது கீழ்நோக்கி ஓடும் மூச்சு மேல் நோக்கி ஓடுகிறது.  இதையே அகத்தியர் “கால் மாறி ஆடும்” என்கிறார்.  பொதுவாக நமது மூக்கினுள் நுழையும் சுவாசத்தை மணிபூரக சக்கரம் கீழ் நோக்கி இழுக்கிறது.  அது சுவாதிஷ்டானம் வரை வந்து அங்கு மாறி மேல் நோக்கி ரேசகமாக வெளிப்படுகிறது.  இவ்வாறில்லாமல் மூச்சு சகஸ்ராரத்தை நோக்கி ஓடினால் அது உடலில் ஒரு வெப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனால் குண்டலினி சக்தி விழித்தெழுந்து மேல்நோக்கி ஓடி ஆறு சக்கரங்களையும் கடந்து ஆக்ஞையை அடைகிறது.  அப்போது அந்த யோகி சாம்பவி முத்திரையைக் கொண்டிருந்தால் அவர் கோடி சூர்யப் பிரகாசம் எனப்படும் ஒளியைத் தரிசிக்கிறார்.

Agatthiyar described how the five elements, their subtle qualities, and the indrya remain as chakra in the body, in his jnanam 1 and 2.  In this jnanam 3 he is elaborating on ajna chakra, kechari mudra, sambhavi mudra and the special scenes that one witnesses while performing
them.

Kechari mudra is an important mudra in vasi yoga.  In the practical sense it is folding the tongue inwards and directing it in the nasal cavity.  Some yogin cut the skin under the tongue over a period of time to extend the tongue so that it can be pushed upwards up to the middle of the brow and touches the point where the ida, pingala and sushumna join together.  At that point the flow of breath stops.  Advanced yogis have remained in this state up to 40 days, without any breath.  As a result of this mudra a secretion from the pineal gland descends.  Those who consume this secretion, the divine nectar, is said to live for a very long time. 

Dr. Bhatacharya says that the letter “ka” refers to Brahma and “chari” means a movement, a transition from one place to another and retaining the movement.  Thus, kechari means moving continually having Brahma’s creative power. “ka” refers to space.  Thus, kechari means roaming in the sky.  While talking about Kundalini yoga, Swami Sivananda says that kechari mudra is the most important one.  Abhinava Gupta, in his Tantralokha, says that kechari is flying in the space of divine consciousness.

Shambavi mudra is focusing the eyes at the middle of the brow.  This removes the vision of duality and grants the sense of singularity.  During this process the flow of breath which is usually downwards, from nose to the muladhara, is turned upwards, towards sahasrara.  Agatthiyar refers to this as “kaal maari aadum” or the breath will reverse and dance. When we breathe the manipuraka chakra pulls the breath downward.  The breath reaches up to the svadhishtana chakra where it splits and turns upwards to emerge as exhalation or rechakam.  When the flow of breath, instead of flowing down, flows upwards this reversal causes cessation of breathing, kumbaka.  It builds a heat in the body and the kundalini sakthi emerges from muladhara to travel upwards crossing the six chakra. It goes up to the ajna chakra where the yogin experiences the brilliance of millions of suns.  This is called “koti surya prakasham”.  


Verse 2
கண்ணாடி மேல் புருவ மையம் பாரு
காலடங்கி மேல் துண்ட முனையைப் பாரு
உண்ணாக்கு மேலேத்தி உன்னிப் பாரு
ஓடாதே உறங்காதே பிதற்றிடாதே
பெண்ணாசையால் கொண்டழுத்திடாதே
பேரின்ப வர்மத்தை மறந்திடாதே
பண்ணாரக் குலை களவு கழற் காமத்தை
பரிகரித்தா லஷ்ட கர்மம் பலிக்கும் தானே

Translation:
See the brow middle on the top
With the breath ceasing, see the tip of the splitting
Raising it to the uvula, see carefully
Do not run, do not sleep and do not blabber
Do not press it (hard), desiring the woman
Do not forget the varma of supreme bliss
Murder, thievery, desire
If you discard them the ashta karma will become fruitful.

Commentary:
Agatthiyar continues to talk about the Sambhavi mudra.  He says that the eye should be focused at the brow middle.  The breath will stop and kumbaka state will be reached.  “thunda munai” means the tip where the splitting happens.  This refers to the point where the breath turns its direction.  The svadishtana chakra is said to be place where the inhalation turns into exhalation.  Its counterpart on the top is the ajna region.  Agatthiyar is referring to the ajna here.  This is a mind boggling experience.  Hence, he is saying do not run around, blabber or fall asleep.  He also advises to not press the point too much, wishing to experience the woman, kundalini quickly.  This is a varma point and only suitable pressure should be given here to obtain the desired result, the supreme bliss. He says that if one does this practice while refraining from common sins like thievery, murder etc one will attain ashta karma or eight special powers.

Geranda Samhita says that a yogin gets the vision of the Atman through the sambhavi mudra.  The Brahman will appear as a point.  If the yogin focusses is attention at that point he will realize that he is Brahman.  The expression, “I, Maheswara, is repeating this method, for your benefit,” occurs in this book.  When the yogin practices the sambhavi mudra the five elements merge and appear with rainbow-like hue.  The Supreme Being will appear in the form of a “mani” or jewel.  When the mind is focused on the jewel it slowly disappears the Divine consciousness occurs.  This is a very powerful experience.  People generally lose their mind when this happens. 

When one attains siddhi of this mudra it confers the eight mystical powers, vasyam (attracting something towards oneself), mohanam (causing enchantment), sthambanam (arresting an action), aakarshanam (attracting a person towards oneself), ucchadanam (making a person run from that place in terror), vidveshanam (creating enmity), bedhanam (creating difference of opinion), maaranam (causing death).   These are very powerful effects.  Unless a person is disciplined he may use to hurt others.  Hence, Agatthiyar recommends that one should develop external discipline first and then attempt this practice.

இப்பாடலிலும் அகத்தியர் சாம்பவி முத்திரையைப் பற்றிப் பேசுகிறார்.  கண்களை புருவ மத்தியில் குவிப்பது சாம்பவி முத்திரை. அப்போது கும்பக சித்தி எனப்படும் மூச்சு நிற்பது ஏற்படுகிறது.  மேல் துண்ட முனையைப் பார்க்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.  துண்டம் என்பது துண்டுபட்ட மூச்சைக் குறிக்கும்.  உள்மூச்சு வெளிமூச்சு என்று சுவாசம் தனது கதியை மாற்றிக்கொள்ளும்போது அது துண்டுபடுகிறது. இது சுவாதிஷ்டான சக்கரத்தில் நிகழ்கிறது. மேலே இது நடைபெறும் இடம் ஆக்ஞை.  இவ்வாறு நோக்கும்போது ஏற்படும் அனுபவம் ஒருவரை மனப்பிறழ்வு அடையச் செய்யக்கூடியது.  தகுந்த பயிற்சியில்லாவிட்டால் அவர் ஓடுவர், பிதற்றுவார், தூக்கமிழந்து தவிப்பார் அல்லது தூக்கத்திலிருந்து மீள மாட்டார்.  இந்த புள்ளி வர்மப்புள்ளி என்பதால் குண்டலினிப் பெண்ணைக் காணவேண்டும் என்ற அவாவினால் அழுத்த வேண்டாம், அப்போதுதான் உச்ச் இன்பம் ஏற்படும் என்கிறார் அகத்தியர்.  இந்த முத்திரையை ஒருவர் வெளியொழுக்கங்களுடன் செய்தால் அவருக்கு அஷ்ட கர்மங்கள் வசப்படும் என்கிறார் அகத்தியர்.

கேரண்ட சம்ஹிதை என்ற யோக நூல், “ சாம்பவி முத்திரையை கைக்கொண்டு ஒரு யோகி ஆத்மனைத் தரிசிக்கிறார்.  அப்போது பிரம்மம் ஒரு புள்ளியாகத் தோன்றுகிறது.  அந்த யோகி தனது கவனத்தை அதில் குவித்தால் தானே பிரம்மம் என்பதை உணருகிறார்.  மகேச்வரனான நான் இந்த முறையைத் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்” என்று காணப்படுகிறது.  இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் யோகி ஆக்னையில் பல அதிசயக் காட்சிகளைக் காண்கிறார்.  அங்கு ஐம்பூதங்களும் ஒன்றாகி வானவில்லின் நிறத்தில் காணப்படும்.  பரம்பொருள் ஒரு மணியுருவில் தோன்றி ஆடும்.  அதில் மனத்தைக் குவிக்கும்போது அந்த மணி மெதுவே மறைந்து பரவுணர்வு ஏற்படுகிறது.  

இந்த பயிற்சிகளுடன் ஒருவர் யம நியமங்கள் எனப்படும் வெளி ஒழுக்கங்களையும் உள்ளொழுக்கங்களையும் பயிற்சி செய்யும்போது அஷ்ட கர்மங்கள் எனப்படும்  வசியம், மோகனம், ஸ்தம்பனம், ஆகர்ஷணம், உச்சாடனம், வித்வேஷணம், பேதனம், மாரணம் என்பவை வசப்படும்.  வசியம் என்பது ஒருவரைத் தன்னை நோக்கிக் கவருவது, மோகனம் என்பது பிறருக்கு மதிமயக்கம் ஏற்படுத்துவது, ஸ்தம்பனம் என்பது பிறரை அசையவிடாமல் கட்டுவது, ஆகர்ஷணம் என்பது பிறரைத் தன்னை நோக்கி இழுப்பது, உச்சாடனம் என்பது பிறரை நிலைகுலையச் செய்து அவ்விடத்தைவிட்டு ஓடச் செய்வது, வித்வேஷணம் என்பது நண்பர்களுக்குள் பகைமையை ஏற்படுத்துவது, பேதனம் என்பது வேறுபாட்டை ஏற்படுத்துவது, மாரணம் என்பது மரணத்தை ஏற்படுத்துவது. இந்த சித்தியைப் பெறுவதற்கு ஒருவர் கொலை, களவு, காமம் ஆகியவற்றை விட்டுவிட வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்

Verse 3
நாசியிடை பின்கலையாய் சுழிமுனையாகி
நடுவீதி போக்குவரத் தாகி நிற்கும்
வாசிதனை மேலெழுப்பி சுழினை மீதில்
மனங்குளிர நிறுத்தி மகிழ் வாசி யூத
பாசிமல திரோதாயி மயக்கம் நீங்கி
பரிசுத்த மெய்ஞ்ஞானப் பரமனாகி
காசிவெளி தனிலண்டங் கண்ணில் கண்டு
களித்திகெய நன்மனமே கருதிப் பாரே

As pingala and sushumna in the nostril
It will remain as the traffic in the middle lane
Raising the vasi up over ajna
Holding it so that the mind is cool, and blowing the vasi happily
Removing the algae of the innate impurities such as tirodhayi and maya
Becoming the fully pure meijnana paraman
Seeing the universe in the space, kasi
Good mind! Lovingly see it to become happy and be in harmony.


Commentary:
The Siddhas have talked elaborately about Vasi.  We already saw that the three energy channels, ida, pingala and sushumna are important in divine experience.  When the breath flows through the ida or the chandra kala, the body cools down.  If it flows through the pingala or the surya nadi the body become hot.  The prana or the life force rides into the body along with the breath.  This combination is called Vasi.  When the body heats up the kundalini sakti is woken up.  It is merged with mind and consciousness.  The combination along with prana and breath should be made to travel through the sushumna.  During this process, the breathing should be forceful, like blowing the bellow.  Then the kundalini sakthi travels through the chakras and reaches the ajna chakra where Divine experience occurs.  The ajna chakra is called Kasi or the city of light as the Divine is experienced as a brilliant effulgence.  This is Tamil Siddhas’ Vasi yogam.  The person performing this should have removed the innate impurities or mala.  They are five- anava, karma, maya, mayeya or product of maya and thirodhayi or the power of concealment.  Only then, like a glass cleanly wiped revealing the flame inside the lamp, the Divine effulgence will become visible. Agatthiyar refers to this in this verse.

Sivavakiyar refers to this as

Conch two, trumpet one, thin plait, hence,
The world is getting dim and dying, how many humans
If you are capable of avoiding the conches and blow the trumpet
You can live with the consort of the lady with the breasts!

And

For those who come to the effulgence, Kasi and stay there
Visvanathan, the one who has effulgence, the space as his body
The thaarakam that he utters along with the lady
Is the simple name nectar-like name of Rama.

The two conches are the ida and pingala nadi, the trumpet is the sushumna nadi.  By directing their breath through the two conches people are controlled by time, lose their strength, light and die in the end.  Unlike this if they direct the prana through the sushuman the thaarai, they will consume the divine nectar and live forever.  When this breath practice is carried out the prana and kundalini agni reach the ajna chakra.  Sivavakiyar calls that place as Kasi, the city of light.  Kasi is an important sacred site for Hindus.  The whole city is constructed in the form of a yantra.  Several important nodes in the yantra are marked with specific temples.  Sivavakiyar says that for those who reach the ajna, the Kasi, Lord Viswanatha, along with his consort Visalakshi, teach the taraka mantra, Rama nama.

The word tharakam means that which is essential to live.  It also means a boat.  Rama nama is the boat that helps the souls to cross the ocean of samsara.  The letter Ra corresponds to agni bhijma and the letter ma correspond to amrita bhija.  Thus, the word Rama burns one’s limitations and grants deathless life.  In this state the soul realizes that it nothing but the Paramatma.  It realizes its state of advaitha.  Agatthiyar tells us to reach this state and enjoy being sat chith ananda.




வாசி என்னும் மூச்சுப் பயிற்சியைப் பற்றி சித்தர்கள் விரிவாகப் பேசியுள்ளனர்.  ஆன்மீகத்தில் மிக முக்கியமான மூன்று நாடிகள் இடை, பிங்கலை சுழுமுனை என்று முன்னமே பார்த்தோம் (அகத்தியர் ஞானம் 2).  இதில் இடை என்பது சந்திரகலை என்றும் பிங்கலை என்பது சூரிய கலை என்றும் அழைக்கப்படுகின்றன.  இடை இடது நாசியில் ஓடுகிறது, பிங்கலை வலது நாசியில் ஓடுகிறது.  மூச்சை இடது நாசியில் மட்டும் போக வைத்தால் உடல் குளிரும் (சந்திரனின் குளிர்ச்சி), வலது நாசியில் பயணிக்க வைத்தால் உடல் சூடாகும் (சூரியனின் வெப்பம்).  பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி இந்த இரு கலைகளையும் ஒரு சமநிலைக்கு வைக்க முயலுவதே. 

வாசி யோகப் பயிற்சியின்போது பிங்கலையிலும் சுழுமுனையிலும் மூச்சைச் செலுத்த வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.  பிங்கலையில் மூச்சு பயணிக்கும்போது உடல் வெப்பமடைந்து குண்டலினி அக்னியை விழித்தெழச் செய்கிறது.  அப்போது குண்டலினி அக்னியின் உதவியுடன் மூச்சு, பிராணன், மனம், உணர்வு ஆகியவற்றை ஒன்றாகக் கூட்டி சுழுமுனையில் செலுத்த வேண்டும்.  இது பிங்கலை சுழுமுனை நாடிகளின் மூலம் நடைபெறுகிறது.  இவ்வாறு ஏற்றப்படும் வாசி நடுவீதி எனப்படும் சுழுமுனை நாடியில் அங்குள்ள சக்தி மையங்களான சக்கரங்களின் ஊடே பயணிக்கிறது.  இதற்கு மூச்சை துருத்தியை ஊதுவதைப் போல விசையுடன் செலுத்தவேண்டும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.  இந்த மூச்சுப் பயிற்சியுடன் உடலிலும் மனத்திலும் மாயையினால் ஏற்படும் கசடுகளையும் மயக்கங்களையும் விலக்கினால் உண்மையான ஞானம் தனது நிலை என்பது புலப்படும்.  இது காசி எனப்படும் ஆக்ஞா சக்கரத்தில் ஏற்படுகிறது. இதைத் தான் சிவவாக்கியர்

சங்கிரண்டு தாரையொன்று சன்ன பின்னல் ஆகையால்
மங்கிமாளு தேயுலகம் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டையும் தவிர்த்து தாரைஊத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே!
என்றும்
ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே
என்றும் கூறுகிறார்.


முன் பாடலில் உள்ள இரண்டு சங்கு என்பது இடை பிங்கலை நாடிகளாகும், தாரை என்பது சுழுமுனை நாடி.  இந்த இரண்டு சங்குகளிலும் மூச்சைச் செலுத்துவதால் உலக மக்கள் அனைவரும் காலத்தின் கணக்குக்கு உட்பட்டு உடல் நலிந்து சக்தியிழந்து ஒளியழிந்து நாளடைவில் மரணத்தைத் தழுகின்றனர்.  இவ்வாறில்லாமல் சுழுமுனை நாடியில் பிராணனைச் செலுத்தினால் சஹாஸ்ராரத்திலிருந்து ஊரும் அமுதத்தைப் பருகி மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்று சிவவாக்கியர் கூறுகிறார்.  இவ்வாறு மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் குண்டலினி அக்னியுடன் பிராணன் ஆக்ஞா சக்கரத்தை அடைகிறது.  ஒளி பொருந்திய இந்த இடத்தை காசி என்று சிவவாக்கியரும் அழைக்கிறார். இந்துக்களுக்கு காசி மிக முக்கியமான ஆன்மீகத் தலமாகும்.  இந்த நகரமே ஒரு யந்திரவடிவில் பல்வேறு முக்கிய புள்ளிகளில் அவற்றிற்கான கோவில்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.  அனைத்துக்கும் மத்திய புள்ளியாக இருப்பது காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மையின் கோயிலாகும்.  இந்த காசி நகரை, ஆக்னையை அடையும் உயிர்களுக்கு விச்வனாதனான, எல்லா அண்டங்களுக்கும் அதிபதியான விசுவநாதன் விசாலாட்சி மங்கையுடன் கூடியிருந்து ராம என்னும் தாரக மந்திரத்தை உபதேசிக்கிறார் என்கிறார் சிவவாக்கியர். 

தாரகம் என்னும் சொல் உயிர் வாழ மிக அத்தியாவசியமானது என்றும் ஒரு படகு என்றும் பொருள்படும்.  ரா என்ற அக்னி பீஜத்தையும் ம என்ற அமிர்தபீஜத்தையும் கொண்ட ராம நாம ஒருவரது பாவங்களை சுட்டெரித்து அமிர்த நிலையை, இறவா பெருநிலையை அருளுகிறது என்று இப்பாடலுக்குப் பொருள்.    இந்த நிலையில் ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டுபட்ட நிலை இருப்பதில்லை, பரம்பொருள் என்ற ஒரே நிலைதான் இருக்கிறது.  இது ஜீவன் அழிந்து பரம்போருளுடனோ சேர்ந்து ஏற்படும் நிலையல்ல, தானே பரம்பொருள் என்று உணரும் அத்வைத நிலை.  இவ்வாறு ஆக்னையை அடையும் ஜீவன் தானே அனைத்துமாக, எல்லா திக்குகளும் அண்டங்களுமாக இருப்பதை உணருகிறது.  இந்த இன்ப நிலையை கருத்தில் கொண்டு இதை அடைந்து களித்திருக்குமாறு,சத் சித் ஆனந்த நிலையில் இருக்குமாறு, அகத்தியர் கூறுகிறார்.




Agatthiyar Jnanam 2



அகத்தியர் ஞானம் 2
சொல்லுகிறேன் சூட்க்ஷத்தின் மகிமை கேளு
   சுருதி வெளிக் கெட்டாத சூட்சமப்பா
வெல்லுவையோ சொல்லுதற்குப் பிள்ளாய் பிள்ளாய்
   வேதாந்தப் பறையுமரை யுள்ளே நின்றாய்
அல்லுபகலற்ற மக மேரு நுனியடியில்
   ஆதித்தன் சுடரொளியில் உதித்த பரவெளியில்
நில்லு மயிர்ப் பாலம் நெருப்பாற்றுக்குள்ளே
   நேராக அகார நடுக்கொம்பு தானே (1)
Translation:
I will reveal the greatness of the subtlety, listen
It is the subtlety that cannot be reached/perceived by sruti
Son, son, will you win it if I tell you?
Stand within the Veda that talk about Vedanta and examine.
At the base/under the tip of the Mahameru where there is no night and day
In the paraveli (supreme space) that emerged in the flame of Aditya
Stand within the hair bridge and fire river
Straight. It is the middle branch, the akara.

Commentary:

The subtlety that Agatthiyar mentions here is Divine consciousness.  He describes it as something beyond the concepts revealed by Srut or Veda.  It is an experience beyond verbal description.  One has to understand its nature from Vedanta.  That is, the karma kanda of the Vedas will not describe it but the jnana kanda or the Vedanta will attempt to explain it as much as possible.

 Agatthiyar then says that it the “akara kombu” or the branch of akara.  This refers to the sushumna nadi.   Among the three nadis or energy channels, the ida, pingala and sushumna, the ukara and makara of the omkara indicate the ida and pingala while the akara indicates the sushumna.  The hair bridge refers to the sushumna which is as thin as a hair.  The river of fire refers to kundalini sakti travelling through this nadi.  The base is the muladhara chakra and the tip is the ajna.  The mythical mountain Mahameru refers to our spinal cord where these chakras are located in our subtle body.  Agatthiyar says that it is beyond night and day or the division of time.  Time is marked by our breath.  Tamil Siddhas use the number of breaths as a scale to mark days, months and years.  When Agatthiyar mentions that it is beyond night and day he is referring to the kumbaka state where there is cessation of breath.  Thus, the yogin goes beyond the confines of time when he experiences Divine consciousness. 

Notes:
In Indian literature, one word can often mean several things. Nadi is one such word.   It represents a tube with a hole in the middle.  Siddha medicine and Ayurveda claim that the human body has three types of nadi, vata, pitta and sleshma or kapha.  Jyothisham or astrology says that a nadi is 24 minutes or 360 breaths. One breath is the time taken to utter ten long vowels. This is one-sixtieth of a day and the time taken by the earth to cross 6 out of the 360 degrees in the universe. This is how the macrocosm and the microcosm are related to each other.

In yoga, nadi represents the path of kundalini Sakthi. It is indicated as a jivanadi or the river of life.  Human body is said to have 72,000 nadis.  These are not physical tubes.  They are present in the subtle body.  Siddhas call their place of origin as kanda moolam.  Agatthiyar calls this as Pothigai malai.  The Thamraparani river that descends from the Pothigai hill are the nadis.  Just as how a river splits into several branches the nadi branch throughout the body.  The kanda moolam is represents as a tortoise, four inches wide and two inches tall.  It lies horizontally.  From the mouth of the tortoise emerge two nadi, from its tail two and five from each of its feet.  Thus, twentyfour nadi emerge from the tortoise that branch throughout the body.

Among the twentyfour nadi, five are considered important for spiritual realization.  They are ida, pingala, sushumna, bala and subhala.  These are called sutra panchakam.  Bala and subhala run towards the lower part of the body.  Ayurveda says that the nadi are concentric tubes one within the other.  For example, the three nadis, vajrini, chitrini and brahma nadi are present within the sushumna nadi.  Among these sushumna nadi represents tamo guna, vajrini the rajo guna, chitrini the satva guna and brahma nadi the pure consciousness.  Prana travels in the brahma nadi, with the help of kundalini agni.  It meets the chakra or energy centers on its way.  Among these centers the six, muladhara, svadhistana, manipurakam, anahatam, vishuddhi, ajna and sahasrara are considered the primary centers.  The chakra are generally represented in the form of a down turned lotus bud that has not bloomed yet.  When kundalini sakthi travels through them, the chakras turn up and bloom.

Verse 2
Planting the branch, over the sushumna, like a plantain bunch,
At the focused triangle, in the hair bridge,
In the “para veli” where Sambhu, Haran remains with his foot lifted up
I told you about this before, know it.
The flame of bliss solidifying up to half “kaadam” (11,000 feet)
Holding the soul there, our Lord
When he stood as the arrow, and the light of the flame
It is the dance that sounds Arahara

The concept of “paraveli” is common among Tamil Siddhas.  It is the state of consciousness beyond the mala or innate impurities.  The states of consciousness are described as space in Tamil Siddha philosophy.  The supreme state of consciousness is called vettaveli or “verily space” The movement that occurs in the supreme space is Nataraja’s dance.  Kashmir Saivam calls this spanda.

Nataraja’s dance represents his five actions.  He is the Hara or destroyer of sins. He is the auspicious one, Sabhu who performs creation, sustenance, dissolution, bestowing of grace and concealment.  His form is that of bliss, it is the light that spreads to a great distance.  The term Sat-chit- Ananda that represents the Lord means existence-awareness and bliss.  Sath is existence the state of “being”.  Chith is being consciousness of himself, Self-consciousness.  Ananda is bliss.  The external manifestation of this bliss is Nataraja’s dance which appears as the universe. 

He plants the lives, souls in this world which is a solidification of his bliss.  He places the souls in this world due to his love so that they can rid themselves of their karma.  Only when these souls forget their original nature, being supreme consciousness, can they function in this world.  Thus, his power of concealment is essential for the souls to perform their action.  The tirodana sakthi or power of concealment transforms into grace and the souls merge in him.  Even after their physical death, before they attain realization, souls rest in him between births.  He grants them this reprieve so that they will lose their fatigue and get ready for the next birth.  Thus, the Lord’s love is the basis for everything.  Hence, Tirumular says, “anbe sivam” or Love is God.  The second verse describes this idea.

Tirumular says

Thaandavamaana thani ezhutthu or ezhutthu
Thaandavamaanathu anugraha thozhil
Thaandavam kootthu thani ninra tatparam
Thaandava kootthu dhamaniyanthaane

The om, the singular, primary letter dances as everything.  It can also be the akara.  The dance is the action of anugraha.  The tatparam that dances so is the singularity that remains as the great “alone”.  The dance of thandava kootthu happens in the dhamani or nadi.

Notes:
AdiSankara talks about kundalini yoga in Saundarya Lahari.  The ninth sloka,

mahim muladhare kam api manipure hutavaham
sthitam svadhisthane hrdi marutam akasam upari
mano'pi bhrumaddhye sakalam api bhitva kulapatham
sahasrare padme saha harahasi patya viharase 

Piercing the  muladhara, manipuraka, svadhishtana where the principles, earth, water and fire are placed, the anahata where air is placed, the vishuddhi where the akasha principle is placed and the ajna where the manas principle is placed you reach the lotus in the sahasrara and remain there with your consort.

In the tenth sloka that begins as “sudha dharasarai”  it talks about how Devi drenches the body with the divine nectar that ensues from her sacred feet, upon reaching the sahasrara. Then, she returns to the muladhara taking the form of a snake and sleeps there in kulakundam.  These two verses describe the ascent and descent of kundalini, its arohanam and avarohanam.  The kundalini reaching the sahasrara after crossing the six chakras is called “shat chakra nivedana” and “antharyaga”. 

Human body is divided into three realms or zones, the agni mandala, surya mandala and chandra mandala.  The agni mandala spans the zone up to the navel.  The surya mandala exists from the navel to the throat.  The chandra mandala exists from the throat to the ajna.  The agni mandala terminates in brahma granti or the knot of brahma.  It includes the muladhara and svadhistana.  The manipuraka and anahata belong to the surya mandala the terminus of which is the bishnu granti.  The vishuddhi and ajna belong to the chandra mandala and the rudra grati is present in the ajna.

The kundalini sakthi that reaches the sahasrara thus turns the chakras up.  The place where it meets the sahasrara is the meeting place of Sakti and Siva.  It is called chidagni or triangle of Sakti.  Saundarya lahari sloka 33 explains this.  Agatthiyar talks about this in the verse 2.  He says that
Sambu or Hara stands in this triangle with his foot lifted up.  Agatthiyar calls this “paraveli” or the space of param.





அகத்தியர் ஞானம் 2
சொல்லுகிறேன் சூட்க்ஷத்தின் மகிமை கேளு
   சுருதி வெளிக் கெட்டாத சூட்சமப்பா
வெல்லுவையோ சொல்லுதற்குப் பிள்ளாய் பிள்ளாய்
   வேதாந்தப் பறையுமரை யுள்ளே நின்றாய்
அல்லுபகலற்ற மக மேரு நுனியடியில்
   ஆதித்தன் சுடரொளியில் உதித்த பரவெளியில்
நில்லு மயிர்ப் பாலம் நெருப்பாற்றுக்குள்ளே
   நேராக அகார நடுக்கொம்பு தானே (1)

இப்பாடலில் அகத்தியர் கூறும் சூட்சம் என்பது பரவுணர்வு.  முதலில் அதை சுருதிக்கு எட்டாதது என்கிறார் அவர்.  சுருதி அல்லது வேதம் என்பது பல்வேறு ரிஷிகள் தாம் பெற்ற பரவுணர்வை வார்த்தைகளால் விளக்கியது.  அந்த அனுபவம் வார்த்தைகளால் வடிக்கப்பட்டபோது, ஒரு மொழியின் அளவுக்குட்பட்டமையால் அதனால் அவ்வுணர்வைப் பரிபூரணமாக விளக்க இயலவில்லை.  இதையே சுருதிக்கு அப்பாற்பட்டது என்பதால் தெரிவிக்கிறார் அகத்தியர்.  அந்த உணர்வைப் பற்றி அறியவேண்டும் என்றால் ஒருவர் வேதாந்தத்தினை ஆராய வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார். கர்ம காண்டம் ஞான காண்டம் என்று வேதம் இரு பகுதிகளைக் கொண்டது. இதில் ஞான காண்டம் வேதாந்தம்.  அது பரவுணர்வைப் பற்றி ஓரளவு விளக்குகிறது.  இதை ஒருவர் படித்து ஆராய வேண்டும் பின் தானே அந்த அனுபவத்தைப் பெறவேண்டும் என்று இதற்குப் பொருள். 

இதனை அடுத்து அகத்தியர் இந்த அனுபவம் ஏற்பட முக்கியமான நாடியைக் குறிப்பிடுகிறார்.  அந்த நாடி சுழுமுனை நாடி. அதனை அவர் அகார கொம்பு என்கிறார். பரவுணர்வைப் பெற முக்கியமான மூன்று நாடிகளான இடை, பிங்கலை, சுழுமுனை நாடிகளில் ஓம்காரத்தின் உகார மகாரங்கள் இடை பிங்களை நாடிகளையும் அகராம் சுழுமுனையையும் குறிக்கின்றன.  இங்கு மகாமேருவின் அடியில், உச்சியில் பகல் இரவற்ற இடத்தில் உள்ள மயிர்ப்பாலம் நெருப்பு ஆறு என்று அவர் கூறுகிறார். 

மகாமேரு என்பது நமது தண்டுவடம், பரவுணர்வுப் பாதையில் உள்ள சக்கரங்கள் இந்த தண்டுவடத்தில் நமது சூட்சும உடலில் அமைந்திருக்கின்றன.  அவற்றின் ஊடே இடை, பிங்கலை மற்றும் சுழுமுனை நாடிகள் பயணிக்கின்றன.  அவை மயிரைப் போல நுண்ணியவை, குண்டலினி சக்தி எனும் நெருப்பு ஆறு பயணிக்கும் பாதை என்கிறார் அகத்தியர்.

சிறுகுறிப்பு:
இந்திய கலாசாரத்தில் ஒரே வார்த்தை பல பொருள்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.  அத்தகைய சொற்களில் ஒன்று நாடி என்பது.  நாடி என்ற சொல் நடுவில் துளையுள்ள ஒரு குழாயைக் குறிக்கும்.  சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் பித்த நாடி, வாதநாடி, ச்லேசஷ்ம நாடி என்ற மூன்று நாடிகளும் உடலின் நிலையைக் கண்டறிய சோதிக்கப்படுகின்றன.   ஜோதிடத்தில் நாடி என்பது 24 நிமிடங்கள் அல்லது 360 சுவாசங்களைக் குறிக்கும்.  ஒரு சுவாசம் என்பது பத்து நெடில்களை உச்சரிக்க ஆகும் நேரம்.  இது ஒரு நாளின் 1/60 பகுதியை, கிரகங்கள் ஒரு நாளில் கடக்கும் 360 டிகிரியில்  6 டிகிரியையும் குறிக்கும்.  இவ்வாறுதான் அண்டாகாசத்திலும் பிண்டாகாசத்திலும் நேரம் கணக்கிடப்படுகிறது. 

யோகத்தில் நாடி என்பது பிராண சக்தி, குண்டலினி சக்தி, பயணிக்கும் ஒரு ஜீவநதியாக உருவகப்படுத்தப்படுகிறது.  மனித உடலில் 72,000 நாடிகள் உள்ளன.  இவை கண்ணால் காணக்கூடிய குழாய்கள் அல்ல.  இவை சூட்சும நிலையில் உள்ளவை.  இந்த நாடிகள் உடலில் நாபிக்கு நான்கு இஞ்சுக்கள் கீழே தொடங்குகின்றன.  இதைக் கண்ட மூலம் என்று சித்தர்கள் அழைக்கின்றனர்.  இதையே அகத்தியர் பொதிகை மலை என்கிறார்.  இங்கிருந்து கீழே இறங்கும் தாமிரபரணி ஆறு என்பது இந்த நாடிகளாகும்.  இவை ஒரு ஆறு பல கிளைகளாகப் பிரிந்து ஓடுவதைப் போல உடல் முழுவதும் விரவியுள்ளன.  இந்த கண்டமூலம் ஒரு ஆமையைப் போல நான்கு இன்ச் அகலமும் இரண்டு இன்ச் உயரமும் கொண்டதாக உடலின் குறுக்கே உள்ளது என்று ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன.  இந்த ஆமையின் வாயிலிருந்து இரண்டு, வாலிலிருந்து இரண்டு, ஒவ்வொரு காலிலிருந்து ஐந்து என்று மொத்தம் இருபத்து நான்கு நாடிகளாகத் தொடங்கி பலவாக விரிகின்றன.

 ஆன்மீக வாழ்க்கையில் ஐந்து நாடிகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.  சூத்ர பஞ்சகம் என்படும் அவை, இடை, பிங்கலை, சுழுமுனை, பலா, சுபலா என்பவை ஆகும்.  இவற்றில் இடை, பிங்களை மற்றும் சுழுமுனை நாடிகள் உடலில் மேல்நோக்கிச் செல்கின்றன.  பலாவும் சுபலாவும் கீழ் நோக்கிச் செல்கின்றன.  இந்த நாடிகள், ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் நான்கு குழாய்கள் என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.  உதாரணமாக சுழுமுனை நாடிக்குள் மூன்று நாடிகள் உள்ளன.  அவை வஜ்ரிணி நாடி, சித்ரிணி நாடி, பிரம்ம நாடி என்று அழைக்கப்படுகின்றன.  சுழுமுனை நாடி தமோ குணத்தையும், வஜ்ரிணி நாடி ரஜோ குணத்தையும் சித்ரிணி நாடி சத்வ குணத்தையும் பிரம்ம நாடி தூய விழிப்புணர்வையும் குறிப்பதாக யோக நூல்கள் கூறுகின்றன.  இந்த பிரம்ம நாடியில் பிராணன், குண்டலினி அக்னியின் துணையுடன் பயணிக்கிறது.  அது தனது பாதையில் சக்கரங்கள் எனப்படும் சக்தி மையங்களைச் சந்திக்கிறது.  இந்த சக்தி மையங்களில் பிரதானமாக உள்ளவை ஆறு ஆகும்.  அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சஹஸ்ராரம் என்பவை. இந்த சக்தி மையங்கள் பொதுவாக தாமரை மொட்டு வடிவில் குறிக்கப்படுகின்றன.  இவற்றின் ஊடே குண்டலினி சக்தி பயணிக்கும்போது அவை நிமிர்ந்து மலர்கின்றன.
இதைப் பற்றி வேதாந்த நூல்களான மறைகளும் கூறுகின்றன என்கிறார் அகத்தியர்.  சாதோக்கிய உபநிடதத்தில் “இதயத்தில் நூற்றியொரு நாடிகள் உள்ளன.  அவற்றில் ஒன்று சிரசை நோக்கிச் செல்கிறது.  இதன் மூலம் பயணிப்பவருக்கு மறுபிறப்பு இல்லை” என்று காணப்படுகிறது (8.6.6).  நாடிகளைப் பற்றி முண்டக உபநிடதம், பிரஷ்ண உபநிடதம், மைத்ரீ உபநிடதம் ஆகியவற்றிலும் குறிப்புக்கள் உள்ளன.  ஆனால் இந்த குறிப்புக்கள் ஒருவருக்கு குண்டலினியின் விழிப்புணர்வை அளிப்பதில்லை, அவை ஏட்டறிவு மட்டுமே.  அந்த விழிப்புணர்வை பெறுவதற்கான செயல்முறை குண்டலினி யோகம் மட்டுமே. 

பாடல் 2
கொம்பூணி சுழிமுனைமேல் வாழைத் தார்போல்
குவிந்த முனை முக்கோண மயிர்ப்பார் தன்னில்
சம்பு அரன் பதந்தூக்கி நின்றபர வெளியில்
சாற்றினேன் அறிந்திடுவாய் முன்னே தானே
இன்பமெனுஞ் சுடரிறுகியிறை யளவு காதம்
இருத்தியுயி ரூணியிடவுமெங்கள் பெருமானும்
அம்பெனவும் சுடரொளியாய் நின்ற போது
அரகரா வென முழங்கும் நடனந் தானே

பல சித்தர்கள் இந்த பரவெளியைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளனர்.  விழிப்புணர்வின் உச்ச நிலையே பரவெளி.  அங்கு ஏற்படும் அசைவே நடராஜப் பெருமானின் நடனம்.  இதையே காஷ்மீர சைவம் “ஸ்பந்தா” என்று அழைக்கிறது.

நடராஜப் பெருமானின் நடனம் அவரது ஐவகைத் தொழில்களையும் குறிக்கின்றது. பாபத்தின் ஹரனான பெருமான், சம்பு எனப்படும் மங்களகரமானவன், சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), லயம் (அழித்தல்), அனுக்ரஹம் (அருளல்), திரோதானம் (மறைத்தல்) என்ற ஐந்து தொழில்களையும் செய்கிறான்.  அந்த எம்பெருமானின் உருவம் இன்பம் என்னும் சுடர் இறுகி காத அளவு விரிந்தது என்கிறார் அகத்தியர்.  இறைவனைக் குறிக்கும் தொடர் சத் சித் ஆனந்தம் என்பது.  அதில் சத் என்பது இருப்பைக் குறிக்கும். தனது இருப்பைத் தானே உணரும் அறிவு சித் எனப்படுவது.  அந்த உணர்தலிலிருந்து எழுவது ஆனந்தம், இன்பம்.  இந்த ஆனந்தத்தின் வெளிப்பாடு நடராஜப் பெருமானின் நடனம், இந்த புலன்களால் அறியப்படும் உலகம்.  இவ்வாறு அவனது இன்பத்தின் வெளிப்பாடாகத் தோன்றிய உலகத்தில் அவன் உயிர்களை விதைத்து, ஊணி, வாழச் செய்கிறான்.  இதுவும் அவனது அன்பெனும் செயலேதான்.  ஏனெனில் உயிர்கள் இவ்வுலகில் தோன்றினால்தான் தமது கர்மத்தைத் தொலைக்க முடியும்.  அவர்கள் தமது உண்மையான இருப்பை, தான் பரவுணர்வு என்பதை மறந்தால்தான் அவர்களால் இவ்வுலகில் பல உருவங்களில் செயல்படமுடியும்.  அந்த செயல்பாடுகளுக்கும் அவனது அருள் தேவை, அவனது ஸ்திதி தேவை.  முடிவில் அந்த உயிர்கள் தமது அடுத்த பிறவிக்கு முன் சிறிது ஓய்வைப் பெற அவர்களை எம்பெருமான் தன்னில் லயமாக வைக்கிறான்.  இவ்வாறு நடைபெறும் அனைத்துச் செயல்களும் அவனாலேயே நடைபெறுகின்றன, அவற்றிற்கு அடிப்படையாக இருப்பது அவனது அன்பே.  இதைத்தான் “அன்பே சிவம்” என்கிறார் திருமூலர்.  இவ்வாறு அன்பின் உருவாய் இருக்கும் பெருமான், விழிப்புணர்வு, ஜீவாத்மாக்களுக்குள் சுடராக காணப்படுகிறது.  உடலெடுத்த உயிர்களின் செயல்பாடுகள் அவனது நடனத்தாலேயே நடைபெறுகின்றன.    இதைத்தான் அகத்தியர் தனது ஞானம் 2 என்ற தொகுப்பில் கூறுகிறார்.

இதைத் திருமூலர்
“தாண்டவமான தனி எழுத்து ஓர் எழுத்து
தாண்டவமானது அனுக்கிரகத் தொழில்
தாண்டவம் கூத்துத் தனி நின்ற தற்பரம்
தாண்டவம் கூத்துத் தமனியந்தானே”
என்கிறார்.

அகாரம்  என்னும் தனி முதல் எழுத்தே அனைத்துமாகத் தாண்டவமாடுகிறது.  இந்த தாண்டவமும் அதன் அனுகிரஹத்தினால் ஏற்படுகிறது.  இவ்வாறு தாண்டவமாடும் தற்பரம், ஒன்றையும் சாராத பரம்பொருள், தனி அம்பலத்தில் ஆடுகிறது.  இதில் தமனி என்ற சொல் அம்பலம் என்று பொதுவாகப் பொருள்படும்.  தமனி என்பது நாடிகளுக்கு மற்றொரு பெயர்!

சிறு குறிப்பு:
ஆதிசங்கர பகவத் பாதாள் சௌந்தர்யா லஹரியின் பல பாடல்களில் குண்டலினி யோகத்தை விளக்குகிறார். ஒன்பதாவது ஸ்லோகமான

“மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத மாகாச முபரி
மனோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹாஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரசே

என்னும் ஸ்லோகத்தில் “மூலாதாரம், மணிபூரகம், சுவாதிஷ்டானம் ஆகியவற்றில் பூமி, நீர் மற்றும் அக்னி தத்துவங்களையும், அனாகதத்தில் காற்றுத் தத்துவத்தையும், விசுத்தியில் ஆகாய தத்துவத்தையும் ஆக்னையில் மனோதத்துவத்தையும் கடந்து தேவி சகஸ்ராரத்தை அடைந்து அங்கே தனது துணைவருடன் கூடி மகிழ்கிறாள் என்கிறார் பகவத்பாதர் .

இதனை அடுத்த ‘ஸுதா தாராஸாரை’ என்று தொடங்கும் ஸ்லோகத்தில் அவ்வாறு சஹஸ்ராரத்தை அடைந்த அம்பாள் தனது திருவடிகளிலிருந்து பெருகும் அமிர்ததாரையால் உடலில் உள்ள நாடிகள் அனைத்தையும் நனைக்கிறாள்.  அதன் பிறகு தான் இருக்கும் சந்திர மண்டலத்திலிருந்து தனது இருப்பிடமான மூலாதாரத்துக்குத் திரும்பி பாம்பைப் போல குண்டல உருவை எடுத்துக்கொண்டு சிறு துவாரத்தையுடைய குலகுண்டத்தில் உறங்குகிறாள் என்று கூறுகிறார். இது குண்டலினி சக்தியின் ஆரோகண ஆரோகணத்தைக் குறிக்கும்.   மூலாதாரத்திலிருந்து புறப்படும் சக்தி சஹஸ்ராரத்தை அடைந்து அங்கு பொழியும் அமிர்தத்தால் உடலை நனைத்து, அதற்கு அழியாத தன்மையை அருளி மீண்டும் மூலாதாரத்துக்குத் திரும்புகிறது.  இவ்வாறு குண்டலினி ஆறு ஆதாரங்களையும் கடந்து சஹாஸ்ராரத்தில் சமாதி எய்துதல் “ஷட்சக்ரவேதனா” என்றும் ‘அந்தர்யாகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.  நமது உடல் அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்று மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது.  மூலாதாரமும் சுவாதிஷ்டானமும் அக்னி மண்டலத்தைச் சேர்ந்தவை.  அவற்றின் மேல் இருப்பது பிரம்ம கிரந்தி என்ற முடிச்சு.  மணிபூரகமும் அனாஹதமும் சூரியமண்டலத்தைச் சேர்ந்தவை.  அவற்றிற்கு மேல் இருப்பது விஷ்ணு கிரந்தி.  விசுத்தியும் ஆக்ஞாவும் சந்திர மண்டலத்தைச் சேர்ந்தவை ஆக்ஞாவில் இருப்பது ருத்ர கிரந்தி. 

இவ்வாறு பல சக்கரங்களைக் கடந்த விழிப்புணர்வு அடையும் சுழுமுனையின் உச்சியில் கவிழ்ந்த வாழைத்தாரைப் போல இருக்கும் சஹாஸ்ராத்தின் மீது சக்தி சிவனைச் சேரும் இடம் சிவாக்னி அல்லது சக்தி முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது.  சௌந்தர்ய லகரி ஸ்லோகம் 33 ல் இதற்கான விளக்கம் உள்ளது.  இந்த முக்கோணத்தை அகத்தியர் இத்தொகுதியில் உள்ள இரண்டாம் பாடலில் குறிப்பிடுகிறார்.  இந்த முக்கோணத்தின் மீது சம்பு, ஹரன் தனது பாதத்தைத் தூக்கி நிற்கிறார்.  அது பரவெளி என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.


Thursday, 9 November 2017

Agatthiyar Jnanam 1

அகத்தியர் ஞானம் 1

கம்பத்து எழுத்தோ  கடையெழுத்தோ
          காலமெல்லாம் கடந்த எழுத்தோ
உம்பர்க்குரிய உயிரெழுத்தோ
          ஒருகால் இருகால் உயிரெழுத்தோ
செம்பொற் குறியைச் சேர்ந்தெழுத்தோ
          சேர்ந்தோர்க்கு என்றும் அருள் புரியும்
அம்பத்தோ ரட்க்ஷரத்தை ஒருமா அய்யா
          அகர முதல் அவ்வெழுத்தென்பார்

Translation:
Is it the letter of the pillar/movement? Is it the last letter?
Is it the letter that is beyond time?
Is it the letter for the celestials
Is it the one leg, two leg/ short and long vowels?
Is it the letter that belongs to the golden sign?
That which graces those who associate with it
The great fifty one letters, sir
Starting from akara- they say.

The collection of songs titled Agatthiyar jnanam have increasing order of verses, from one onwards.  For example, jnanam 1 has one verse, jnanam 2 has two verses and so on.  Agatthiyar talks about the fifty-one letters of the Sanskrit alphabet.  As they represent the various principles that constitute our body and the universe.  The sound we hear is the manifestation of nadha or primordial sound.  The letters represent the total manifestation and thus the universe.
“kambam” means pillar or movement.  The pillar represented here is the sushumna nadi.  When kundalini sakthi flows through it, it appears as the pillar of fire which represents the primordial entity, the Divine.  It is represented by akara.  If kambam is taken as movement then it represents the primal movement or self-awareness.  The primordial entity sath, becomes self-aware of chith and expands as the universe.  The akara represents this process, the expansion of the nadha into the world.  It is the first letter in any alphabet.
Thus, along this line, the last letter is ha or hung which refers to the sky principle.  Hence, Nandikesakasika mentions that the manifested universe is contained between the letters, a and ha, and together as aham they represent Self. 
When the akara joins with e the chithkala it becomes ukara or the soul.  Agatthiyar calls them as umbar or celestials, those who are represented by um. 
The akara is the first letter in manifestation.  It is the last letter in dissolution.  Thus the last letter could be akara also.
“kaal” means leg, air or time scale.  Thus, saying oru kaal iru kaal means inhalation and exhalation or short and long vowels.  Agatthiyar mentions the vowels instead of the consonants because in Sanskrit or Tamil for that matter, the consonants cannot be sounded without the vowels.  Thus, they are the soul letters that animate the consonants.
The golden sign refers to chin mudra.  Joining together of the thumb and index finger represents the circle of birth and death, the life process of the universe.  The three fingers extended out represent the three principles, satva, rajas and tamas that form the basis of the universe.  They also represent the triad, pasu, pathi and pasa or the relationship.  Thus, the fifty one letters indicate the chin mudra.
These letters grant grace to those who associate with them.  They offer the worldly benefits and the beyond as the mantras that are uttered to obtain the benefits are composed of these fifty one letters.

Short notes:

Letters-  what they represent (From nandikesa kashika)
A         - form of brahman-  this is the short vowel, the long vowel is the short one with Sakti in it
E          - chith kala (kama bhijam)
U         -Isvara (combination of a and e)
Ru       -paramatma
Lru      -maya
K         - world- this is ik the one without a added to it, made by the combination of ru+lru
A,O     - shows the relationship between maya and the Lord- sounds like first English alphabet
Ai, au   - show that everything is contained within the Lord (ai-aa+ee, au-aa+oo)
           

Ha       -space
Ya       -air
Va       -water
Ra        -fire
La        -earth and semen
Nja      - sabdha
Ma       -sparsha
Nga     -rupa
Na       -rasa
na        - smell
jha       -mouth - karmendriya
bha      -hand  
gha      -leg
Dha     -sexual organ
dha      -organ for excretion

jnanendriya (third letters)
ja,ba, ga,Da, da

five types of prana (second letters)
kha, cha, pha, Ta, tha

first letter
cha-manas
ta- buddhi
tha- ahamkara

ka- purusha
pa- prakriti

sha- rajas
Sha-tamas
Sa-satva
 Ha- the last expression of the Lord
A+ha:- aham or Self


அகத்தியர் ஞானம் என்னும் பாடல் தொகுப்பில் அகத்தியர் ஒன்று, இரண்டு, மூன்று என்று ஏறுமுகமாக பாடல்களை அளித்துள்ளார். உதாரணமாக, அகத்தியர் ஞானம் 1 என்னும் இந்த நூலில் ஒரு பாடல் உள்ளது, ஞானம் 2 ல் இரண்டு பாடல்கள் உள்ளன.  இப்பாடலில் அகத்தியர் சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஐம்பத்தொரு அட்சரங்களைப் பற்றிக் கூறுகிறார்.   நாம் கேட்கும் ஓசைக்கு அடிப்படையாக இருப்பது நாதம்.  இந்த நாதத்தின் முதல் வெளிப்பாடு எழுத்துக்கள்.
கம்பம் என்றால் தூண் மற்றும் அசைவு என்று பொருள்.  இங்கு தூண் எனப்படுவது சுழுமுனை நாடி.  அதில் குண்டலினி சக்தி பாயும்போது அது தீக்கம்பமாக இருக்கிறது.  இந்தத் தீக்கம்பம் குறிப்பது ஆதி வஸ்துவை.  அதன் எழுத்து அகாரம். கம்பம் என்பதை அசைவு என்று எடுத்துக்கொண்டால் அது பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த முதல் அசைவை, சித்தைக் குறிக்கிறது.  சத்தாக இருந்த ஆதி வஸ்து சித்தைப் பெற்று உலகமாக விரிந்தது.  இதைக் குறிக்கும் எழுத்து அகாரம்.  அதுவே எழுத்துக்களில் முதலெழுத்து.   இந்த ஆதி வஸ்து காலத்தைக் கடந்தது. 
அகத்தியர் ஐம்பத்தொரு எழுத்துக்கள் என்று கூறுவதை சம்ஸ்கிருத எழுத்துக்கள் என்று எடுத்துக்கொண்டால் கடை எழுத்து அல்லது கடைசி எழுத்து ஹங் என்பதாகிறது. ஹ என்பது வெளிப்பாடு நிலை ஹங் என்பது சக்தி நிலை.   இங்கு சம்ஸ்கிருத எழுத்துக்களைக் குறிப்பதற்குக் காரணம் அவை நமது உடலாகவும் பிரபஞ்சமாகவும் விரியும் தத்துவங்களைக் குறிக்கின்றன.  குண்டலினி சக்தியின் பாதையில் உள்ள சக்கரங்களின் இதழ்களில் இந்த எழுத்துக்களைக் குறிப்பது அந்த சக்கரங்கள் எந்த தத்துவங்களைக் குறிக்கின்றன என்பதைக் காட்டத்தான். உதாரணமாக, லம் என்பது நிலத்தைக் குறிக்கிறது.  இவ்வாறு அகரத்துக்கும் ஹகாரத்துக்கும் இடையில் பிரபஞ்சம் இருக்கிறது என்றும் அஹம் என்பது ஆத்மா அல்லது “தான்” என்பதைக் குறிக்கிறது என்றும் நந்திகேச காசிகா என்ற நூல் கூறுகிறது.
ஆதிவஸ்து பிரபஞ்சமாக விரியும்போது முதலெழுத்தாக இருக்கும் அகாரம் லயமடையும்போது கடைசி எழுத்தாக இருக்கிறது.  இந்த அகாரம் இ என்னும் சித்கலாவுடன் சேரும்போது உகாரம் என்றாகிறது.  உம்பர் அல்லது உயராத்மாக்களின் எழுத்து உகாரம் என்கிறார் அகத்தியர். 
ஒரு கால் இரு கால் என்பது உள்மூச்சு வெளி மூச்சு என்றும் மாத்திரை என்ற கால அளவை எடுத்துக்கொண்டால் குறில் நெடில்களையும் குறிக்கும்.  மெய்எழுத்துக்களைக் கூறாமல் உயிரெழுத்துக்கள் என்று கூறுவதற்குக் காரணம் உயிரெழுத்துக்கள் இல்லாவிட்டால் மெய் எழுத்துக்களை உச்சரிக்க முடியாது.  இவ்வாறு மெய் அல்லது உடல் எழுத்துக்களுக்கு உயிரை, இருப்பைக் கொடுப்பது உயிரெழுத்துக்களே.

செம்பொற்குறி என்பதைச் சின்முத்திரை என்று கொண்டால் அது நாதம் என்னும் தத்துவத்தையும் உலகம் எவ்வாறு நாதத்திலிருந்து தோன்றி மறைகிறது என்பதையும் குறிப்பதாகிறது.  கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்திருப்பது ஒரு வட்டத்தை, உலகம் தோன்றி மறைவதைக் குறிக்கிறது.  வெளிப்பட்டிருக்கும் மூன்று விரல்கள் சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற, உலகம் தோன்றுவதற்கு ஆதியாக இருக்கும் முக்குணங்களையும் உலகம் என்பது பசு, பதி, பாசம் என்பதால் ஆனது என்பதையும் இன்னும் பிற தத்துவங்களையும் காட்டுகிறது.  இவ்வாறு செம்பொற்குறி ஐம்பத்தொரு அட்சரங்களைக் குறிக்கிறது. இந்த எழுத்துக்கள் தம்மைச் சேர்ந்தவர்க்கு பெரும் அருளைத் தருகின்றன,  அவை இக பர சுகங்களாக இருக்கலாம், ஞானமாக இருக்கலாம் ஏனெனில் பல நன்மைகளை அளிக்கும் மந்திரங்கள் இந்த எழுத்துக்களால் ஆனவையே. 

ஐம்பத்தொரு எழுத்துக்கள் என்பது நமசிவய என்றும் சிலர் கூறுகின்றனர்.  அ என்பதை 1 என்று கொண்டால் ந- 9 ம-11 சி- 4 வ- 15 - 12  என்பதன் கூட்டுத்தொகை ஐம்பத்தொன்றாகிறது. 

சிறு குறிப்பு:
எழுத்துக்களும் அவை குறிப்பவையும் (நந்திகேச காசிகாவிலிருந்து)
அ- பிரம்மத்தின் உருவம்
இ- சித்கலா அல்லது காம பீஜம் படைக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பம்
உ- அ+இ- ஈஸ்வரன்
லு- பரபிரம்மம்
ல்ரு- மாயை
க்- உலகம் (லு+ல்ரு)
எ,ஓ- இறைவனுக்கும் மாயைக்கும் உள்ள தொடர்பு
ஐ, ஔ- அனைத்தும் இறைவனுள் அடக்கம் (ஐ=ஆ+ஈ, ஔ=ஆ+ஊ)

ஹ-ஆகாயம்
ய- காற்று
வ- நீர்
ர- நெருப்பு
ல- நிலம், ஆணின் சுக்கிலம் இதிலிருந்து தோன்றுகிறது
ஞ-சப்தம்
ம-ஸ்பர்சம்
ங-ரூபம்
ண- ரசம்
ன- கந்தம்
கர்மேந்திரியங்கள் (நான்காம் எழுத்துக்கள்)
ஜ-வாய்
ப- கை
க- கால்
ட- பிறப்புறுப்பு
த- கழிவை வெளியேற்றும் உறுப்பு

ஞானேந்திரியங்கள் (மூன்றாம் எழுத்துக்கள்)
ஜ,ப,க,ட,த
ஐவகை பிராணன்கள் (இரண்டாம் எழுத்துக்கள்)
க,ச,ப,ட,த
முதல் எழுத்துக்கள்
ச-மனஸ்
ட-புத்தி
த-அகங்காரம்
க-புருஷன்
ப- பிரகிருதி
ச- ரஜஸ்
ஷ- தமஸ்
ஸ-சத்வம்
அ+ஹம்- அஹம்- ஆத்மா



Agatthiyar jnanam series

With Agatthiyar Aiya's blessing we will be enjoying some of his short compositions as jnanam series in the coming days.  These verses were collected by Dr. T.N. Ganapathy and his team of researchers from various libraries in India.  The amazing but arduous task was sponsored by

http://www.babajiskriyayoga.net/english/ashram-india.htm

Babaji's Kriya Yoga Order of Acharyas in Quebec.  They are available in the form of a CD and a book that gives a summary of each of the compositions.

http://babajiskriyayogastore.in/index.php?main_page=product_info&cPath=73&products_id=244


We seek your continued support and suggestions in this endeavor.

Om Agatheesaaya namaha