Thursday, 21 August 2014

333. Learn the Vaalai panchatcharam through a guru

Verse 333
எண்ணவே ஞானக் கம்பம் ஆடித் தீர்ந்தேன்
எவ்வளவும் பிசகாது எழுத்தும் சொன்னேன்
கண்ணவே வாலை பஞ்சா க்ஷரமும் சொன்னேன்
காட்டினேன் குருமுகமாய்க் கண்டு கொள்ளும்
பண்ணவே இக்கூத்துக் கொள்ளை போலப்
பாடின நூல் யாரும் இல்லை கண்டு தேறு
உண்ணவே பூரணத்தை உண்டு பாரு
ஒருவருக்கும் கிடையாது மோனம் தானே

Translation:
To think, I danced the dance of jnana
I uttered all the words without missing anything
I said the vaalai panchaksharam
I showed it, see it through a guru
To perform this dance with vigor,
No one who has sung so
To consume the fully complete, consume it and see
No one gets it, verily it is the silence.

Commentary:
This is a continuation of the prevous verse.  Agatthiyar says that he has described the vaalai panchaksharam and advises Pulatthiyar to learn it through a guru.  One has to read this book to realize the Divine, the fully complete.


முற்பாடலின் தொடர்ச்சியான இப்பாடலில் அகத்தியர் தான் கூறியுள்ள வாலை பஞ்சாட்சரத்தை குருவின் மூலமாகக் கேட்டு அறியுமாறு புலத்தியருக்குக் கூறுகிறார்.  தான் எல்லா விஷயங்களையும் கூறியுள்ள இந்த நூலைப் படித்து பூரணமான இறைவனை அனுபவிக்குமாறும் கூறுகிறார். 

No comments:

Post a Comment