Thursday, 21 August 2014

335. Yantra for worshipping Muladhara

Verse 335
பூசை என்ற அடிமூலம் பூசை கேளு
பொருளான வட்டமடா மண்ணின் மேலே
ஆசையுடன் முக்கோணம் அதனுள் போடு
அர அரா அதின் உள்ளே ஓம்காரம் தான்
நேசமுடம் ஓம்காரம் உள்ளே இட்டு
நிஜமான வட்டம் மேல் இதழுமிட்டு
பூசிதமாய் நாலுதிக்கும் இதழ் நாலாகும்
பொருந்திரண்டு இதழிலும் ஸ்ரீகாரம் தானே

Translation:
Listen to the worship of the bottom terminus/muladhara
Draw a circle over the earth
Draw a triangle within it with interest
Ara araa!  It is omkara within that
Drawing the omkara with care
Drawing the petals over that
The petals are four for the four directions
In the two petals it is Srikaara

Commentary:
Agatthiyar seems to be describing the muladhara cakra but the letters on the petals are different from what he said before while describing the cakra. The muladhara represents the earth principle.  He tells that a triangle should be drawn which is enclosed by four petals for the four directions, north, south, east and west.  Within the triangle is drawn the omkara and on two petals the letter shri.

In the previous verse where he described the muladhara cakra Agattiyar has mentioned that the letter nakaara is the letter for this cakra which represents the earth element and the letters on the four petals are sa varga and vang.  One wonders whether this diagram is for a special puja as he is describing a puja method.

மூலாதார சக்கரத்தை விளக்குவதாக உள்ள இப்பாடல் முன்பு அகத்தியர் விளக்கிய மூலாதார சக்கரக் குறிகளைவிட வேறுபடுகிறது.  பூமி தத்துவத்தைக் குறிக்கும் இந்த சக்கரத்தைப் பூஜிக்க ஒரு வட்டத்தை வரைந்து அதனுள் முக்கோணமிட்டு அதனுள் ஓம்காரத்தை எழுதி அதனைச் சுற்றி நான்கு இதழ்களை வரைந்து அவற்றில் இரண்டினுள் ஸ்ரீ என்று எழுதுமாறு அவர் கூறுகிறார்.


மூலாதரத்தை விளக்கிய முந்தைய பாடலில் அவர் நாற்சதுரமும் அதனுள் நகாரமும் இதழ்களில் ச வர்க்க எழுத்துக்களையும் இடுமாறு கூறியிருந்தார்.  இங்கே அவர் விலக்குவது ஒரு பூஜை முறைக்கு என்று தோன்றுகிறது.

2 comments:

  1. இங்கு கூறிப் பிடப்படுவது யந்திரம் அல்ல.மூலாதாரத்தின் வடிவத்தை பற்றி கூறிப்பிடுகிறார்.

    ReplyDelete
  2. மூலாதாரத்தின் இதழ்களில் இருப்பது ஸ்ரீ அல்ல, ச, ஷ, ஸ மற்றும் வ அல்லது வங்

    ReplyDelete