Sunday, 10 August 2014

326. Gait of Devi

Verse 326
அதிரவே ஐவரும் திடுக்கிட்டாட
அர அரா சின்மயத்தை நீறு பூசி
அதிரவே மகாலோகம் சத்த தேவர்
அருகில் இரு புறமும் அவர் கட்டியம்  கூற
அதிரவே ஜெகம்மயக்கத்திலர்தம் இட்டாள்
அஷ்ட சித்தி அஷ்ட துர்க்கி அஷ்ட நாகம்
ஆதரவே கம்பமணி சிலம்பு கொஞ்ச
அன்னம்போலவே கலகலென வந்தால் காரே

Translation:
Reverberating, with the five dancing with shock,
Ara araa!  Adorning the chinmaya with sacred ash
Reverberating, the great world, and the seven Devas
With them remaining on both sides and announcing the presence
With the world reverberating,  She placed those who are free from delusion
The eight siddhis, eight Durgi and eight snakes
The help is the jewel of the pillar/movement, with her anklets tinkling
She came like a swan.  Cherish it.

Commentary:
The arousal and subsequent ascendence of Kundalini is an explosive process that overwhelms the person who is going through it.  Agatthiyar indicates this by saying, everything was reverberating, shaking.  The five dancing may be means the five states of consciousness or five organs of knowledge. This process leaves the person in a state of enchantment.  The ashta siddhi are anima, lagima, parakaya pravesha etc. Ashta Durgi is not clear.  It may mean the minor deities who serve as guardians for Devi.  Ashta naagas are Anantha, Vasuki, Thakshaka, Karkotaka, Shankha, Gulika, Padma and Mahapadma.  They are considered guardians of the world.   Agatthiyar says that Devi came to him like a swan with her anklets tinkling.  Swan or Hamsa is the name given to yogins of highest order.  Here it represents a beautiful lady whose gait is said to resemble that of a swan.


குண்டலினியின் எழுச்சியும் அதன் பயணமும் மிக்க ஆரவாரத்துடன் இருக்கும். அதை அனுபவிக்கும் யோகியை அதன் சக்தி திகைக்கச் செய்யும் என்பதைக் காட்ட அகத்தியர் அனைத்துலகங்களும் அதிருவதாகக் கூறுகிறார்.  ஐவர் நடனமாடுவதாகக் கூறுவது என்பது ஐந்து விழிப்புணர்வு நிலைகள் அல்லது ஐந்து ஞானேந்திரியங்களைக் குறிக்கலாம். அஷ்ட சித்தி என்பவை அணிமா, லகிமா, முதலியவை என்று முன்னமே பார்த்தோம்.  அஷ்ட துர்க்கி என்பது தெளிவாகத் தெரியவில்லை.  தேவியின் காவலாக இருக்கும் தெய்வங்களைக் குறிக்கிறதோ என்று தோன்றுகிறது.  அஷ்ட நாகங்கள் என்பவை அனந்தன், வாசுகி, கார்க்கோடகன், தக்ஷ்கன், ஷங்கன், குளிகன், பத்மன், மற்றும் மகாபத்மன் என்பவர்கள்.  அவர்கள் இவ்வுலகைக் காப்பதாகக் கருதப்படுகிறது.  தேவி தனது கால் சலங்கை கிணுகிணுக்க அன்னத்தைப் போல நடந்து தன் அருகில் வந்தாள் என்கிறார் அகத்தியர்.  அன்னம் என்பது ஹம்சம் என்னும் பறவை.  யோகிகளின் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களை பரம ஹம்சம் என்று அழைப்பது வழக்கம். 

Saturday, 9 August 2014

325. Devi cuts the maya with her sixteen hands

Verse 325
கட்டினாள் தீக்ஷை எட்டும் திகிரி எட்டும்
காத்திரமாம் பதினாறு கோணம் எட்டும்
எட்டினாள் மண்டலங்கள் மூன்றுங் கையால்
எல்லோரும் சோடசமாம் கையைக் காண
வெட்டினாள் வாளுருவி மாய்கை எல்லாம்
வீசினாள் சராசரங்கள் மண் விண்ணாட
கொட்டினாள் தனைஓசை அண்ட கோளம்
குருநமசி மாடம் அதிரத் தானே.

Translation:
She tied the eight initiations, the eight peaks,
The solid, sixteen angles, eight,
She reached the three realms through her hands
For everyone to see her sixteen hands
She cut the maya unsheathing the sword
She threw away the universes for the earth and sky to dance
She sounded the spheres
With the gurunamasi pedestal reverberating.

Commentary:
Agatthiyar in his paripoorna sutram has listed the Siva deekshan and Sakthi deeksha.  He is probably referring to those here when he says eight deeksha.  The eight wheels correspond to the eight cakras.  The sixteen angles may be referring to the vishuddhi cakra or a Devi cakra with sixteen angles.  The three realms are the candra mandala, surya mandala and the agni mandala.  The sixteen hands of Sakthi correspond to the five elements, five prana, five jnanendriya and the manas.  With the help of these sixteen Devi cuts away the influence of Maya.  Maya operates through these sixteen factors.  Agatthiyar says that Devi cut the maya and threw it in such a way that the universes, the earth and the sky will shake.  The manifested world is created by these sixteen factors.  He further adds that this made the “gurunamaci maadam” to shake.  We have already seen that among the five letters of namacivaya, the namaci are represented by the earth element at muladhara, the water element at svadishtana and the fire element in the manipuraka.  The soul’s karma are said to be stored at svadishtana which operates through the muladhara and manifest as the world through the manipuraka cakra.  By saying that these three sites will shake Agatthiyar is indicating that the manifested universe created by one’s karma will be chased away.


இப்பாடலில் கூறியுள்ள எட்டு தீட்சை என்பது அகத்தியர் தனது பரிபூரண சூத்திரம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ள சிவ தீட்சை சக்தி தீட்சைகளச் சேர்ந்ததாக இருக்கலாம்.  எட்டு திகிரி என்பது எட்டு சக்கரங்களைக் குறிக்கும்.  பதினாறு கோணங்கள் என்பது விசுத்தி சக்கரத்தைக் குறிக்கலாம்.  மூன்று மண்டலங்கள் என்பவை அக்னி மண்டலம் சூரிய மண்டலம் சந்திர மண்டலம் என்பவை.  தேவி எந்த மூன்று மண்டலங்களையும் எட்டினாள் என்பது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்துக்கு வருவதைக் குறிக்கும். ஏனெனில் இந்த மூன்று மண்டலகளும் மூலாதாரத்திலிருந்து தலையின் மேல் வரை உள்ளன.  தேவி தனது பதினாறு கைகளால் வாளை உருவி மாயையை வெட்டினாள் என்கிறார் அகத்தியர்.  வாள் என்பது ஞானம் அது அக்ஞானம் என்ற உரையால் மூடப்பட்டுள்ளது.  அந்த உரையிலிருந்து வாளை உருவி மாயையின் தாக்குதலை வெட்ட வேண்டும்.  தேவியின் பதினாறு கைகள் என்பவை ஐம்பூதங்கள், ஐந்து பிராணன்கள், ஐந்து ஞானேந்திரியங்கள் மற்றும் மனம்.  இவற்றைக் கொண்டே ஒருவர் மாயையின் தாக்கத்தை அறுக்கவேண்டும்.  இவ்வாறு வெட்டியா மாயையை தேவி விண்ணும் மண்ணும் அதிர வீசினாளாம்.  அதாவது புலன்களால் உணரப்படும் உலகத்தை இல்லை என்று ஆக்கினாள்.  அவள் அவ்வாறு வீசி எறிந்தது குருநமசிமாடத்தை அதிரச் செய்தது என்கிறார் அகத்தியர்.  நமசிவாய என்னும் ஐந்தெழுத்தில் நமசி என்பது மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிபூரக சக்கரங்களைக் குறிக்கும்.  ஒருவரது கர்மங்கள் சுவாதிஷ்டானத்தில் சேமிக்கப்பட்டு மூலாதாரத்தின் மூலம் செயல்படும்.  அவை மணிபூரக சக்கரத்தின் மூலமாக அவர் அனுபவிக்கும் உலகமாகப் பரிமளிக்கும்.  தேவியின் இந்த செயல் ஒருவரது கருமத்தைக் கட்டறுத்து அவர் புலன்களால் காணும் உலகத்தையும் அழித்துவிருகிறது என்று இங்கு பொருள்படுகிறது. 

Thursday, 7 August 2014

324. She makes a resolution

 சுடரோனு மதியானு மணிகளாலும்
சூழ்ந்த அண்ட புவன ஈரேழு நாலும்
அடரான அண்ட சரா சரங்களாலும்
ஆதிமறை சாத்திரங்கள் பாடலாலும்
படரான வேதாந்த நூல்களாலும்
பரமசிவன் முனியாலும் ரிஷிகளாலும்
இடராக எவராலும் கம்பக் கூற்றில்
எதிர்பாறோ வென்று கச்சை கட்டினாளே

Translation:
The sun, the moon and the jewels-
The fourteen universes surrounded
By the dense universes, mobile and immobile
By the eternal Veda, sastra and songs
By the detailed books on Vedanta
By Paramasiva, Muni and Rishis
By everyone, in the dance of the pillar/movement
She resolved, to expect

Commentary:
“kambbakkootthu” or the dance of the sushumna, the ascendence of consciousness is filled with all the experiences, the worlds, the knowledge systems, the sun, the moon, the jewel of the soul and great souls.  The last line is not clear.  “kacchai kattinaal” generally means taking a resolution.  It means tying up one’s clothes tightly before embarking on a work.


கம்பத்துக்கூத்து அல்லது சுழுமுனையில் நடனம் பல்வேறு அனுபவங்களை உள்ளடக்கியது.  அண்ட சராசரங்கள், அறிவு நூல்கள், சூரியன், சந்திரன், ஆத்ம ஜோதியான மணி, உயர் ஆத்மாக்களான பரமசிவன் முதல் ரிஷி முனிகள் வரை அனைத்தும் அதனுள் அடங்கும்.  கடைசி வரி தெளிவாக இல்லை.  கச்சை கட்டுவது என்பது ஒன்றைச் செய்தே தீருவேன் என்று முனைவது.  

323.Action of Manonmani

Verse 323
பதுமைஎன்றீர் என் குருவே அமிர்த வாழ்வே
பார் உலகெலாம் நிறைந்த மாது கோலம்
சதுர்மறையும் சாத்திரங்கள் ஆறும் வாரம்
தனியேழும் இவள் கொலுவே என்று சொன்னீர்
கதுமை என்ற வாலை மனோன் மணியின் செல்வம்
காட்டி நீர் கம்பமணிக் கூற்றாட்டந்தான்
அதியோகம் மாமுகத்தாள் ஆட்டம் தன்னை
ஐவருக்கும் காணவடா சுடர்விட்டேனே

Translation:
You said Doll, my Guru, the life of amrit
The form of the Lady who pervades all the worlds
The four Vedas, Sastras six, the week,
The unique seven are her assembly- you said so.
The sharp lady, vaalai, Manonmani’s wealth
You are showing it, the dance of the jewel of the pillar/movement, verily, its dance
The supreme yoga, the dance of the lady with glorious face
I exuded the flame so that the five can see it.

Commentary:
This verse seems to have started as Pulatthiyar’s conversation and ends as Agatthiyar’s statement.  Pulatthiyar eulogises Agatthiyar and acknowledges that Agatthiyar showed that the lady, Manonmani has scriptures and time as her wealth and that everything is her dance.  It is the supreme yoga of Manonmani.  In the last line Agatthiyar says that he has brought out the flame so that “the five beings” can see it.  The five may be the five states of consciousness, the five senses or sense organs.


புலத்தியரின் உரையாடலாகத் தொடங்கும் இப்பாடல் அகத்தியரின் வார்த்தைகளாக முடிகிறது.  அமிர்த வாழ்வே என்று அகத்தியரைப் புகழும் புலத்தியர் எல்லா நூல்களும் காலமும் மனோன்மணித்தாயின் செல்வம், அனைத்தும் அவளது ஆட்டத்தின் விளைவு  அவளது அதியோகம் என்று புலத்தியர் கூறுகிறார்.  கடைசி வரியில் அகத்தியர் தான் சுடரை வெளிவிட்டதற்குக் காரணம் “ஐவர்” அதைக் காண்பதற்கே என்கிறார்.  ஐவர் என்பது ஐந்து விழிப்புணர்வு நிலைகளைக் குறிக்கலாம் அல்லது ஐம்புலன்களைக் குறிக்கலாம். 

Wednesday, 6 August 2014

322. Fragrances that Sakthi adorns

நத்துக்கு முத்தணிந்தாள் வாசம் கட்டி
நல்ல சந்தன களப மாலை சாந்து
சுத்துக்கே கதம்பபொடி தூநீர் பன்னீர்
சுகந்த மண முல்லை இருவாக்ஷி  தும்பை
சித்துக்கே எழுலோகம் யுகங்கள் நூலும்
சிவ சிவா மும் மூர்த்தி தேவர் தானும்
பத்திக்கே வந்தவரைத் தேடித் தேடி
பார்த்தலுத்துக்கொள்ளுமிவள் பதுமை தானே.

Translation:
She adorned for the nose ring, the pearl, for fragrance
Good pieces of sandwood garland, paste
The fragrant powder mix for spreading around, along with fragrant water
The fragrant mullai, iruvaatchi, thumbai,
For the toe ring, the seven worlds and the four eons,
Siva Sivaa!  The holy triad
Looking for those who approach with devotion
The one who gets fatigued is She, the Doll.

Commentary:
This verse describes the fragrances that Sakthi adorns on herself.  Sandalwood paste confers coolness.  The “kadhamba powder” is either a mixture of powders or the powder of the fragrant shrub.  The fragrant water, “panneer” also brings coolness.  Mullai and Iruvaatchi are types of jasmin, thumbai is a small white flower used predominantly for worshipping Ganesha.  Sitthu, generally, means the ring worn in the second toe, on both feet.  It is said to press certain points in the body and confer calmness.  For her toe ring Sakthi is adorning the seven worlds, the four eons or yuga.  The verse says "noolu", it seems to be a scribal error, and this should be "naalu".  Even the holy triad are her adornment.  She is busy looking for those who approach her with devotion.  She is fatigued not finding anyone so.  “padumai” means a doll.


இப்பாடலில் அகத்தியர் அம்மன் பூண்டுள்ள வாசனை திரவியங்களைப் பட்டியலிடுகிறார்.  அவளது உடலை சந்தனமும், கதம்பப் பொடியும் பன்னீரும் குளிர்விக்கின்றன.  அவள் முல்லை, இருவாட்சி தும்பைப் பூக்களை அணிந்துள்ளாள்.  சித்து என்பது கால் விரலில் அணியும் ஆபரணம்.  அவளது சித்தாக இருப்பவை ஏழு உலகங்கள், நான்கு யுகங்கள் மற்றும் மும்மூர்த்திகள்.  இப்பாடலில் நாலு என்பதற்கு பதில் நூலு என்று உள்ளது.  யுகங்கள் நாலு என்பது யுகங்கள் நூலு என்பதைவிட பொருத்தமாகத் தோன்றுகிறது.  அவளே பரதெய்வம்.  யாராவது தன்னை பக்தியுடன் அணுகுகிறார்களா என்று பார்த்து அலுத்துக்கொள்ளும் அவள் ஒரு பதுமை என்கிறார் அகத்தியர். 

Monday, 4 August 2014

321. Description of Amman's face

Verse 321
முகத்தில் இரு பிறமு முத்து மணிகள் பூண்டாள்
முழுப்பச்சை தமனியத்தில் பதக்கம் பூண்டாள்
அகத்தில் இரு செவித்தொட்டில் அணிந்தாள் அம்மன்
அர அரா நாகமணி ஓலை பூண்டாள்
உகத்திருகு கொம்பணிந்தாள் முருகு சாந்து
ஓ ஓ ஓ சின்மயத்தை மாலை சூடி
எகத்தில் ஒரு தொட்டியப் பெண் முகத்தில் அம்மன்
எழுந்து மின்னல் சுடர்மணியை நத்துமுத்தே
                                 
Translation:
On both sides of the face she adorned pearls and gemstones
She adorned a necklace with a center piece of green stone
On both ears she adorned the danglers, Mother,
Ara araa!  She adorned the earring of naagamani/ruby,
She adorned the earring ‘kombu’ and the beautiful, fragrant paste
O!O!O! She adorned the chinmaya as the garland
Within me, the Mother with the face of a lady of “thottiya” tribe
Rising like a lightening, the flame, the jewel as the pearl ornament on the nose ring.

Commentary:
Agatthiyar continues his beautiful description of Mother, Sakthi in this verse.  He says that Sakthi adorned the pearls on either side of her face.  These may be referring to minor cakras on either side of the face, at the temples.  She has a beautiful necklace with the center piece made of green stone.  This corresponds to the anahata cakra.  “sevitthottil” seems to be danglers that women wear on their ears.  Kombu is an earring for pierced ears.  She has also adorned the “naagaratna Olai” in her ears.  Calling the earring Olai is very common in Karnataka. These are some ancient ornaments common in South India.  Her garland is chinmayam, the embodiment of chith.  Mother has her face as that of a lady from “thottiya”tribe.  This is one of the ancient tribes of South India, common in Karnataka, Andra Pradesh.  They are called thottiya naayakars.  Several famous chieftans including Krishnadevaraya, Veerapandiya Kattabomman belong to this tribe.  They are primarility Sakthi worshippers.  Some of their deities are Jakkamma, Renuka amma and Meenakshi amma. Mother’s nose is decored by the “natthu” made of lightning-like flame, jewel.  This ornament is worn at the bottom of the nose bridge between the two nostrils.  It is said to regulate the breath.  This practice is still seen in several tribes.  A “natthu” of diamond or pearl is said to be beneficial to health as the in-going breath carries their good qualities inside the body.


அகத்தியர் சக்தியைப் பற்றிய தனது அற்புதமான வர்ணனையை இப்பாடலில் தொடருகிறார்.  சக்தி அல்லது அம்மன், தனது முகத்தின் இருபுறமும் முத்துகள் அணிந்துள்ளாள்.  இது முகத்தின் இருபுறமும், குறிப்பாக நெற்றிப் பொட்டில் உள்ள சிறிய சக்கரங்களைக் குறிக்கும்.  அவளது நெஞ்சை ஒரு அழிய பச்சைப் பதக்கம் கொண்ட ஹாரம் அலங்கரிக்கிறது.  இது அனாஹத சக்கரத்தைக் குறிக்கும்.  அவளது காதுகளில்  செவித்தொட்டிலும் கொம்பும் காணப்படுகின்றன.  செவித்தொட்டில் ஜிமிக்கியைப் போன்றது. கொம்பு என்பது காதுத் துளையில் அணியும் ஆபரணம்.  மேலும் அவள் காதுகளில் நாகமணி ஓலையை அணிந்துள்ளாள்.  காதணிகளை ஓலை என்று அழைக்கும் வழக்கம் இன்றும் கர்நாடகத்தில் உண்டு.  அது சுருள் வடிவமான மணிகள் பதித்த காது ஆபரணம்.  அவளது மாலை சின்மயம்.  அவளது முகம் “தொட்டியப் பெண்” போல உள்ளது என்கிறார் அகத்தியர்.  தொட்டிய நாயக்கர்கள் என்பவர்கள் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திராவில் உள்ள பழங்குடியினர்.  அவர்கள் காப்பு என்ற குலத்தைச் சேர்ந்தவர்கள்.  அவர்கள் தமிழும் தெலுங்கும் கலந்த ஒரு மொழியைப் பேசுவார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயர் முதலியோர் இந்த தொட்டி நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.  இவர்கள் பெரும்பாலும் சக்தியை அல்லது அம்மனை வழிபடுபவர்கள்.  அவர்களது சில முக்கிய தெய்வங்கள் ஜக்கம்மா, ரேணுகா அம்மா, மீனாட்சி அம்மா முதலியோர்.   இவ்வரியில் காணப்படும் “எகத்தில்” என்பது என்னுள் என்று பொருள்படும்.  அந்த அம்மனின் மூக்கில் மின்னலைப் போன்ற சுடர்மணி நத்தாக உள்ளது.  நத்து என்பது இரு நாசித் துவாரங்களினிடையேயும் அணிவது.  இந்த வழக்கம் இன்றுகூட பழங்குடியினரிடம் காணப்படுகிறது.  அது மூக்கில் சுவாச ஓட்டத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.  வைரம், முத்து போன்ற நத்துக்களை அணிவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது ஏனெனில் சுவாசம் அவற்றின் தன்மைகளை உடலுள் எடுத்துச் செல்கிறது என்று கருதப்படுகிறது. 

Saturday, 2 August 2014

319/ 320. Description of Sakthi-1

Verse 319
………………….. சபையில் காட்டக்
கனகமணி கரிமேவி ஆட்டித்தானே

verse 320
ஆடவே ஆகாசம் இடையாய் நின்றாள்
அர அரா உலகமெல்லாம் உடையாய்ப் பூண்டாள்
சூடவே நவமணிகள் ஒட்டியாணம்
சோடசமும் கங்கணமும் வளையல் பூண்டு
மூடவே மாய்க்கையது ரவிக்கை பூண்டாள்
....... .......... ........

ரவிக்கை பூண்டாள் முழுவயிரம் முத்துமணி

Verse 320
Dancing, she remained with the sky as her waist/as the middle
Ara araa!  She adorned the whole world as her raiment
With a waist belt with nine gemstones
With the sixteen (types of ornaments) bracelet and bangles
To cover, she adorned the maya as her blouse
She adorned the blouse, fully complete with diamonds, pearls and gems.

Commentary:
One cannot help reiterate how unfortunate it is to have lost the above four verses as Agattthiyar is describing the Mother.  He concludes the previous verse saying she was shaking it pervading the ‘kanaka mani giri’.  This term refers to the sahasrara.  Siddhas call the sahasrara by various names, the circular house, the chitrambalam are a few. In the next verse Agatthiyar describes the form of Mother.  She has the akasha as the ‘idai’  This term is interesting.  It means both, waist and middle.  If it is interpreted as middle then the vishuddhi cakra is the middle.  It is in between the material world and the world of consciousness.  The letter that represents the vishuddhi cakra is yang or the space element, akasha.  Next, Agatthiyar says that Mother adorned all the worlds as her dress.  The worlds represent the prakruti.  The soul is covered by the five koshas or sheaths and has three types of bodies- all material in nature.  Hence, Agatthiyar says that Mother or Sakthi has the worlds as her raiment.  The the nine jewels are her waist belt, the sixteen, the bracelet and the bangle are her ornaments.  The manipurka cakra at the waist or navel means ‘replete with mani’.  Thus her waist belt is navamani.  Shodasa means sixteen.  They are the sixteen kalaas.  Kankanam and bangle are hand ornaments.  Minor cakras are present in the arms the locations of which are indicated by the sacred ash that is adorned on the arms or the “namam” adorned by the Vaishnavas.  Agatthiyar says that the Mother covers herself with a blouse of maya.  Mother is none other than consciousness.  The consciousness covers itself with maya thus losing the knowledge of its own nature.  Next line is missing.  The verse concludes with ‘the blouse of multitude of jewels, diamonds, pearls and other gemstones’.  Agatthiyar describes the Mother elaborately in the following verses too.


முந்தைய நான்கு  பாடல்களும் தொலைந்த துரதிர்ஷ்டத்தை மீண்டும் இங்கே நினைவுகூராமல் இருக்க இயலவில்லை.  பாடல் 319 தின் கடைசி இருவரிகள் சபையில் காட்ட கனகமணி கிரிமேவி ஆட்டித் தானே என்று முடிகின்றன.   கனக கிரி என்பது சஹாஸ்ராரத்தைக் குறிக்கும்.  வட்ட வீடு, சிற்றம்பலம் என்பது போன்ற பல பெயர்களில் சித்தர்கள் சஹஸ்ராரத்தை அழைக்கின்றனர். பாடல் 320ல் அகத்தியர் சக்தியை விவரிக்கத் தொடங்குகிறார்.  சக்தி, “ஆகாசம் இடையாய் நின்றாள்” என்கிறார் அகத்தியர்.  இடை என்பது இடுப்பு என்றும் நடுவு என்றும் பொருள்படும். அதை மத்தி என்று பொருள்கொண்டால் விசுத்தி சக்கரத்தைக் குறிக்கிறது.  விசுத்தி சக்கரம் உடல்சார்ந்த மனிதத் தன்மைக்கும் தூய விழிப்புணர்வு நிலைக்கும் மத்தியில் உள்ளது.  அதைக் குறிக்கும் பீஜ அக்ஷரம் ஆகாய தாதுவத்தின் யங் ஆகும்.  இடை என்பதை இடுப்பு என்று கொண்டால் மணிபூரக சக்கரத்தைக் குறிக்கும்.  மணி பூரகம் என்றால் மணியால் நிரம்பியது என்று பொருள்.  அடுத்த வரியில் அகத்தியர் சக்தியின் ஒட்டியாணம் நவமணிகள் என்கிறார்.  சக்தியின் ஆடை உலகங்கள் அனைத்தும்.  உலகம் என்பது பருப்போருளால் ஆனது.  ஆத்மா பஞ்ச கோசங்கள் மூவித சரீரங்கள் என பருப்பொருள் அல்லது பிரகிருதியால் மூடப்பட்டுள்ளது.  அதனால் அகத்தியர் சக்தியின் ஆடைகள் உலகங்கள் என்கிறார்.  அவளது ஆபரணங்கள் சோடசமும் கங்கணமும் வளையலும் என்கிறார் அகத்தியர்.  சோடசம் என்பது பதினாறு கலைகளைக் குறிக்கும்.  கையாபரணங்களான வளையலும் கங்கணமும் கைகளில் உள்ள சக்கரங்களைக் குறிக்கின்றன.  இந்த சக்கரங்களின் இடங்கள் சைவர்களால் விபூதியினாலும் வைணவர்களால் நாமத்தினாலும் காட்டப்படுகின்றன.  இவ்வாறு ஆபரணங்களைப் பூண்ட சக்தி தன்னை மாயை என்ற ரவிக்கையால் மறைத்துக்கொள்கிறாள் என்கிறார் அகத்தியர்.   சக்தி என்பது விழிப்புணர்வு.  விழிப்புணர்வு தன்னை மாயையால் மறைத்துக்கொண்டு தனது உண்மை சொரூபம் வெளிப்படாமல் இவ்வுலகில் இருக்கின்றது.  சக்தியின் ரவிக்கை முழுவதும் வைரம், முத்து, மணிகளால் ஆனது என்று இந்தப் பாடலை அகத்தியர் முடிக்கிறார்.