Saturday 9 August 2014

325. Devi cuts the maya with her sixteen hands

Verse 325
கட்டினாள் தீக்ஷை எட்டும் திகிரி எட்டும்
காத்திரமாம் பதினாறு கோணம் எட்டும்
எட்டினாள் மண்டலங்கள் மூன்றுங் கையால்
எல்லோரும் சோடசமாம் கையைக் காண
வெட்டினாள் வாளுருவி மாய்கை எல்லாம்
வீசினாள் சராசரங்கள் மண் விண்ணாட
கொட்டினாள் தனைஓசை அண்ட கோளம்
குருநமசி மாடம் அதிரத் தானே.

Translation:
She tied the eight initiations, the eight peaks,
The solid, sixteen angles, eight,
She reached the three realms through her hands
For everyone to see her sixteen hands
She cut the maya unsheathing the sword
She threw away the universes for the earth and sky to dance
She sounded the spheres
With the gurunamasi pedestal reverberating.

Commentary:
Agatthiyar in his paripoorna sutram has listed the Siva deekshan and Sakthi deeksha.  He is probably referring to those here when he says eight deeksha.  The eight wheels correspond to the eight cakras.  The sixteen angles may be referring to the vishuddhi cakra or a Devi cakra with sixteen angles.  The three realms are the candra mandala, surya mandala and the agni mandala.  The sixteen hands of Sakthi correspond to the five elements, five prana, five jnanendriya and the manas.  With the help of these sixteen Devi cuts away the influence of Maya.  Maya operates through these sixteen factors.  Agatthiyar says that Devi cut the maya and threw it in such a way that the universes, the earth and the sky will shake.  The manifested world is created by these sixteen factors.  He further adds that this made the “gurunamaci maadam” to shake.  We have already seen that among the five letters of namacivaya, the namaci are represented by the earth element at muladhara, the water element at svadishtana and the fire element in the manipuraka.  The soul’s karma are said to be stored at svadishtana which operates through the muladhara and manifest as the world through the manipuraka cakra.  By saying that these three sites will shake Agatthiyar is indicating that the manifested universe created by one’s karma will be chased away.


இப்பாடலில் கூறியுள்ள எட்டு தீட்சை என்பது அகத்தியர் தனது பரிபூரண சூத்திரம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ள சிவ தீட்சை சக்தி தீட்சைகளச் சேர்ந்ததாக இருக்கலாம்.  எட்டு திகிரி என்பது எட்டு சக்கரங்களைக் குறிக்கும்.  பதினாறு கோணங்கள் என்பது விசுத்தி சக்கரத்தைக் குறிக்கலாம்.  மூன்று மண்டலங்கள் என்பவை அக்னி மண்டலம் சூரிய மண்டலம் சந்திர மண்டலம் என்பவை.  தேவி எந்த மூன்று மண்டலங்களையும் எட்டினாள் என்பது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்துக்கு வருவதைக் குறிக்கும். ஏனெனில் இந்த மூன்று மண்டலகளும் மூலாதாரத்திலிருந்து தலையின் மேல் வரை உள்ளன.  தேவி தனது பதினாறு கைகளால் வாளை உருவி மாயையை வெட்டினாள் என்கிறார் அகத்தியர்.  வாள் என்பது ஞானம் அது அக்ஞானம் என்ற உரையால் மூடப்பட்டுள்ளது.  அந்த உரையிலிருந்து வாளை உருவி மாயையின் தாக்குதலை வெட்ட வேண்டும்.  தேவியின் பதினாறு கைகள் என்பவை ஐம்பூதங்கள், ஐந்து பிராணன்கள், ஐந்து ஞானேந்திரியங்கள் மற்றும் மனம்.  இவற்றைக் கொண்டே ஒருவர் மாயையின் தாக்கத்தை அறுக்கவேண்டும்.  இவ்வாறு வெட்டியா மாயையை தேவி விண்ணும் மண்ணும் அதிர வீசினாளாம்.  அதாவது புலன்களால் உணரப்படும் உலகத்தை இல்லை என்று ஆக்கினாள்.  அவள் அவ்வாறு வீசி எறிந்தது குருநமசிமாடத்தை அதிரச் செய்தது என்கிறார் அகத்தியர்.  நமசிவாய என்னும் ஐந்தெழுத்தில் நமசி என்பது மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிபூரக சக்கரங்களைக் குறிக்கும்.  ஒருவரது கர்மங்கள் சுவாதிஷ்டானத்தில் சேமிக்கப்பட்டு மூலாதாரத்தின் மூலம் செயல்படும்.  அவை மணிபூரக சக்கரத்தின் மூலமாக அவர் அனுபவிக்கும் உலகமாகப் பரிமளிக்கும்.  தேவியின் இந்த செயல் ஒருவரது கருமத்தைக் கட்டறுத்து அவர் புலன்களால் காணும் உலகத்தையும் அழித்துவிருகிறது என்று இங்கு பொருள்படுகிறது. 

No comments:

Post a Comment