Verse 346
பதித்தனடா
இந்நூலை வெளிவிடாதே
பாவிகள்தான்
வணங்கி நின்று வாசி கேட்பார்
சதிப்பனடா
வாசிதனைச் சொல்லிவிட்டால்
தலைகீழாய்
விழுந்தவனும் மதிக்கான் உன்னை
எதித்து
உடன் வாது செய்வான்...
எவ்வளவு
போடா நீ வாடா என்பான்
குதிப்புடனே
விழுந்தவனும் அலுத்துப் பின்னும்
குறி
அறிவோம் என்று வந்து வணங்குவானே
Translation:
I
recorded son, do not reveal this book
Sinners
will stand saluting and ask for vaasi
If you
reveal vaasi they will plan deceit
Even
the one who fell head down will not respect you
He will
argue with you
“How
much? Go away, you silly”- he will talk so disrespectfully
The
one who fell with a jump will tire out and then
He will
come to salute you saying let us know the signs.
Commentary:
Agatthiyar
tells Pulatthiyar to not reveal this book to low lives. Such people will show respect only until they
learn vaasi yogam. Then they will act as
if they are supreme masters, they will start arguing with the guru himself,
negotiating and speaking to him disrespectfully. After dancing around for
sometime he will see the futility of his pride and come back asking for
more.
Agatthiyar
is advising Pulatthiyar to avoid such people in the next verse.
இப்பாடலில்
அகத்தியர் இந்த நூலை தீயவர்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவர்கள் முதலில் வணங்கி வாசியைப் பற்றி அறிந்து
கொள்வார்கள். அதன் பிறகு தாமே பெரியவர்
என்பதுபோல் குருவுடனேயே வாதம் செய்வர், மரியாதையில்லாமல் பேசுவர். அவ்வாறு சில நாட்கள் ஆடியபிறகு அலுத்துப் போய்
மீண்டும் அருகில் வந்து வணங்கி எங்களுக்கு குறிகளைக் கற்றுக்கொடுங்கள் என்று
கேட்பர். அத்தகைய மக்களைத் தவிர்க்குமாறு
அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.
No comments:
Post a Comment