Wednesday 13 August 2014

329. Appreciated by Devas, she climbs with the plaintain bark shaking, with a camphor sword

Verse 329
மீதேறி வானவரும் தேவர் காண
மெய்ஞ்ஞானச் சின்மயமும் மகிழ்ந்து மெச்சு
மீதேறி நின்றிலங்கும் வடம் தள்ளாட
வாள் உருவி வாழையது தண்டில் பாய்ந்தாள்
சூதேறி ஆடுகின்ற சூத்திரத்தை
சோதிக்க ஆராலும் சொல்லொண்ணாது
காதேறி நின்றிலங்கும் தச நாதத்துள்
கற்பூர வாள் வாங்கி வாழைத்தண்டே

Translation:
Climbing up with the celestials and Devas witnessing it
With the true wisodom the embodiment of consciousness praising it
With the rope on which ascended shaking
Drawing the sword she charged at the bark of the plantaintree
The principle that ascends the secret
No one can test it or describe it
Within the ten types of sound that climb to the ears
Receiving the sword of camphor, the plantain tree bark.

Commentary:
This verse describes the ascent of the force of Kundalini.  Agatthiyar says that he ascent was praised by celestials and Devas.  These are souls at higher states of consciousness.  Souls are classified as vijnaana kalaa, pralayakalaa and sakala depending on how many of the triple faults, egoity (aanava), action (karma) and delusion (maya) are active.  The Devas are souls that belong to the category of pralaya kalaa, those who have the egoity and action functioning.  Through yoga they reach the supreme state of Sivam.  As these souls are in the process of evolution they understand the mighty power of Kundalini and hence they praise her.  The ascent is so powerful that the channel or nadi that it flows through shakes by the force.  Agatthiyar calls the nadi as the bark of the plaintain tree.

Unlike other trees the plaintain tree bark does not branch out.  It is smooth, straight and ends at the top where the leaves, flower and fruit emerges.  Kundalini ascends similarly.  It reaches the sahasrara, the top, where it becomes fruitful.  Agatthiyar says that this process is beyond description.  When the kundalini sakthi ascends through the cakras it transmutes specific principles there, the result of which emerges as sounds.  This is the dasa nadha or the ten types of sound that the yogin experiences.  No one can clearly define these sounds.  To give us a clue about them the yogins have named them as the sound of the bell, the drum, the singanadh or that of the buzzing bee.  These are only place values for the sounds, not the actual sounds.  Agatthiyar says that Sakthi has the sword of camphor.  Camphor is known for its smoke and brilliant light.  In the end it disappers without a trace.  The kundalini appears as a smoke in the anahata cakra, as the brilliant light at the ajna and disappears when the consciousness merges with the supreme consciousness , beyond the sahasrara.


இப்பாடல் குண்டலினி சக்தியின் எழுச்சியை விளக்குகிறது.  அகத்தியர் குண்டலினியின் எழுச்சியை தேவர்களும் முனிவர்களும் பாராட்டுகிறார்கள் என்கிறார்.  மும்மலங்களான ஆணவம், கர்மம், மாயை என்பவற்றில் எவை செயல்படுகின்றன என்பதைப் பொருத்து ஆத்மாக்கள் விஞ்ஞானகலா, பிரளயகலா, சகலா என்று மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றனர்.  இவற்றில் பிரளயகலா என்னும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தேவர்கள்.  அவர்கள் யோகத்தின் மூலம் மும்மலங்களையும் துடைத்து சிவ சித்தன் நிலையை அடைய முயல்பவர்கள்.  இந்த பயிற்சியில் ஈடுபட்டிருப்பதால் அவர்களுக்குக் குண்டலினியின் சக்தி புரிகிறது அதன் மகத்துவம் தெரிகிறது.  அதனால் அவர்கள் அவளை மிக மெச்சுகின்றனர்.  குண்டலினியின் எழுச்சி மிக சக்தி வாய்ந்ததாக வார்த்தைகளால் விளக்க முடியாததாக உள்ளது என்கிறார் அகத்தியர். அதன் சக்தியால் அது பாயும் நாடி, வாழைத்தண்டு, தள்ளாடுகிறது. 

மற்ற மரங்களைப் போலல்லாமல் வாழை மரத்தின் தண்டு கிளை விடுவதில்லை.  ஒரே சீராக வளர்ந்து உச்சியை அடைந்து அங்கே இலைகள், பூக்கள், காய்கள் என்று காணப்படுகிறது.  குண்டலினி சக்தியும் அவ்வாறே ஒரே சீராக உச்சியை அடைந்து அங்கே பழுக்கிறது.  குண்டலினி சக்தி சக்கரங்களின் ஊடே பாயும்போது அது பல தத்துவங்களைத் தன்னுள் லயிக்கச் செய்கிறது.  இந்த லயம் பல சத்தங்களாக வெளிப்படுகின்றது.  இந்த சத்தங்களை வார்த்தைகளால் விளக்க இயலாது.  அதைப் பற்றி ஒரு எண்ணம் தோன்றுவதற்காக யோகிகள் அதை மணியின் ஓசை, சிங்க நாதம், வண்டின் ரீங்காரம் என்று அழைக்கின்றனர்.  இவை உண்மையில் அவ்வாறு இல்லை.  வண்டின் ரீங்காரம் எவ்வாறு இருக்கும் என்று நமக்குத் தெரிவதால் இந்த ஓசை எவ்வாறு இருக்கும் என்று ஓரளவு கற்பனை செய்து பார்க்க முடிகிறது. 


சக்தியின் வாள் கற்பூர வாள்.  கற்பூரம் புகையுடன் எரியும் பிரகாச வெளிச்சம் முடிவில் எவ்வித தடயத்தையும் விடாமல் மறைந்துபோகிறது.  குண்டலினியும் அதைப் போல அநாஹதத்தில் புகையாகவும் ஆக்னையில் ஆத்ம தீபமாகவும் தோன்றி சஹாஸ்ராரத்தில் பரவுணர்வுடன் கலக்கும்போது எவ்வித தடயமும் இல்லாமல் மறைந்து போய்விடுகிறது.

No comments:

Post a Comment