Wednesday 27 August 2014

345. "These words are like those of Kannan" says Agatthiyar

Verse 345
சொன்னதோர் இந்நூல் போல் ஒரு நூல் இல்லை
சூதாடும் திருடருக்கு நூலீயாதே
அன்னை திரு மாதுமையாள் பாதம் நம்பி
அறிவித்தார் சதுர்முகத்தோன் பூண்மையாலே
கன்னனது சொல்போல் ஞானக் கூறு
காட்டினேன் வெளி திறந்து மெய்யோர்க்காக
பண்ணினேன் வேதாந்தத் திருட்டை எல்லாம்
பார்த்தறிந்து இந்நூலில் பதித்திட்டேனே

Translation:
There is no other book like this one revealed
Do not give the book to those who gamble and thieve
Trusting the sacred feet of the lady, the auspicious mother, Uma
The four-faced one announced it with grace
These are words of wisdom like those uttered by Kannan (Krishna)
I revealed this, explaining it explicitly, for the good ones
Knowing all that, which was stolen by Vedanta
I have recorded them in this book.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that there is no other work which is as detailed as this meijnanam and that this was revealed by the four-face after paying obesience to the sacred feet of Sakti, Uma.  Among the five faces of Siva, the fifth face is not supposed to be visible.  May that is why Agatthiyar is calling him four-faced one.  It may also be Brahma, the dispenser of knowledge.

An interesting line in this verse is, “these are words of wisdom like that of Kannan”  Agatthiyar is referring to Krishna’s Bhagavat Gita.  For those of us who wonder about the time of this composition, this should explain that it is after the the time of Bhagavat Gita, after the Mahabharata war.  One wonders whether Agatthiyar was reminded of the Mahabharata war when he instructed Pulatthiyar previously to not share it with those who gamble!

Agatthiyar adds that he has recorded all the esoteric knowledge even the Vedanta did not explain explicitly.  Thus, this work is more complete than the Vedanta and more beneficial for good souls who seek liberation.

அகத்தியர் புலத்தியரிடம் இந்த நூலைப்போல விளக்கமான நூல் வேறு இல்லை என்றும் இதை திருடர்களுக்கும் சூதாடிகளுக்கும் கொடுக்கக் கூடாது என்றும் கூறுகிறார்

இந்த நூலில் உள்ளவற்றை நான்முகன் தெய்வீக மாது, தாய் உமாவின் பாதத்தைப் பணிந்து நான்முகன் அளித்தார் என்கிறார் அகத்தியர்.  சிவனின் ஐந்து முகங்களில் ஐந்தாவது முகம் கண்ணுக்குத் தெரியாது என்று கூறுவது வழக்கம்.  அதனால் ஒருவேளை அகத்தியர் சிவனை நான்முகன் என்று கூறுகிறாரோ?  சிவன், சக்தி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சதாசிவன் ஈஸ்வரன் என்பதே சுத்த வெளிப்பாட்டின் முறையாகும்.  இவ்வாறென்றால் சக்திக்குப் பின் தோன்றிய பிரம்மன் சக்தியின் பாதத்தைப் பணிந்து இந்த அறிவை உலகுக்கு அளித்திருக்கலாம்.

இதனை அடுத்து அகத்தியர் ஒரு முக்கியமான வரியை எழுதியுள்ளார்.  அது, இந்த நூல் கண்ணனின் வார்த்தைகளைப் போல ஞானம் பொதிந்தது என்பது.  அவர் இங்கே கண்ணனின் பகவத் கீதையை நினவிகூருகிறார்.  இந்த நூலின் காலம் என்னவாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு குறிப்பை அளிக்கிறது, அதாவது, இந்த நூல் பகவத் கீதையின் காலத்துக்கு, மகாபாரத்தத்தின் காலத்துக்கு பிற்பட்டது என்பது.  முந்தைய வரிகளில் சூதாடிகளுடன் இந்த நூலைப் பகிரவேண்டாம் என்று அகத்தியர் கூறியது அவருக்கு மகாபாரதத்தை நினைவுபடுத்தியதோ?


தான் இந்த நூலில் வேதாந்தம் மறைத்தவற்றையும் வெளிப்படையாகக்  கூறினோம் என்ற அகத்தியரின் வார்த்தைகள், இந்த நூல் வேதந்தத்தைவிட பூரணமானது, உண்மையான தேடலை உடையவர்களுக்குப் பயனளிக்கக் கூடியது என்பதைக் காட்டுகின்றன. 

4 comments:

  1. அம்மா எனது சந்தேகத்துக்கு விடை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


    பகவத் கீதையை சொன்ன கண்ணன் என்பவர் உண்மையிலேயே யார்? அவர் கடவுளா?? அகத்தியர் பெருமான் கண்ணன் பற்றி என்ன கூறியுள்ளார்?

    ReplyDelete
  2. கண்ணனைப் பற்றி அவர் கீதை என்ற ஞான நூலை எழுதினர் என்பதைத் தவிர வேறு ஏதும் அகத்தியர் கூறியதாக நான் இதுவரை அறியவில்லை.
    உண்மையின் கண்ணன் என்பவர் யார் என்பதற்கு நீங்கள் shambala, an oasis of light என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். அதை நான் இப்போது தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறேன். கற்பகம் பதிப்பகம் வெளியிடும்போது உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதில் அவதாரங்கள் எப்படி ஏற்படுகின்றன. எப்போது ஏற்படுகின்றன என்று ஆசிரியர் ஆண்ட்ரூ தாமஸ் என்பவர் கூறுகிறார். நமது சாதாரண நிலையைவிட உயர்ந்த ஆத்மாக்கள் அநேக நிலையில் உள்ளனர். திருமந்திரத்தில் திருமூலர் அவர்களை சகலர், பிரளயாகலர் என்று பல்வேறு நிலைகளில் இருப்பவராகப் பிரிக்கிறார். இந்த ஆத்மாக்கள் தமது உயர் நிலையிலிருந்து உலகை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதர்மம் எங்கே மிகுகிறதோ அங்கே தாமே வருகின்றனர் அல்லது தமது தூதுவரை அனுப்புகின்றனர். கடவுள் என்பவர் ஒரு உருவத்தை ஒரு குணத்தை உடையவர் என்று கொள்ளாமல் அதை ஒரு நன்மையான பரிபூரணமான சக்தி என்று எடுத்துக்கொள்வோம். அதைத்தான் சித்தர்கள் சிவம் என்கின்றனர். சிவன் வேறு சிவம் வேறு என்று இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.
    அதனால் கண்ணன் என்பவர் அந்த உயர்சக்தியின் ஒரு வெளிப்பாடு, நம்மால் புரிந்துகொள்ளக் கூடிய நிலையைக் கடந்த நிலை என்று ஏற்றுக்கொள்வோம்.நமது நாட்டில் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட தத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் ஒரு மனிதரைப் பற்றி பதிவு செய்வதைவிட அவர் கூறியதாக பதிவு செய்யப்படுபவை உண்மைக்கு அருகில் இருக்கின்றன.

    ReplyDelete
  3. தெளிவான விளக்கம்,மிக்க நன்றி அம்மா

    ReplyDelete
  4. Please write tamil verse 345

    ReplyDelete