Tuesday 26 August 2014

344. Live the Vedantic way and learn about mental worship

கேளப்பா புலத்தியனே மானதமாம் பூசை
கிருபையுடன் சொன்னனப்பாஅறிவுள்ளோர்க்கு
வாளப்பா வேதாந்த வாழ்வே அல்லால்
மற்றதல்லாம் வாருகோல் கிட்டு வாழ்வு
கோளப்பா பழமுனி நூல் கோளே கோளு
கொட்டினார் சகல முறை மறைப்பை எல்லாம்
வாளப்பா அவர் நூலில் மாந்தமாம் பூசை
மறைத்திட்டார் அதனாலே இதைச் சொன்னேனே

Translation:
Listen Pulatthiya!  Mental worship
I told with mercy for the wise
Other than the life of Vedanta
Everything else should be swept away with a broom
Contemplate the work of the ancient muni
They revealed every method in them
Still, in his book, the mental worship
He concealed it.  Hence I am saying it here.

Commentary:
Agatthiyar is referring to some ancient work which he says tells all the methods to realize the Divine.  However, that book has not explained the mental worship ritual, it concealed it.  Agatthiyar tells Pulatthiyar that hence, he is talking about it here.  Please recall Tirumular’s verse “the heart is the great temple, the body is the locus, for the merciful one the mouth is the temple entrance, the Jiva is the Sivalinga and the hidden senses are the lamp”

Agatthiyar says another interesting thing here.  He says that a life other than that lived in the vedantic way is worthtless, it should be swept away with a broom like dust.  The philosophy of the Siddhas is the Siddhanta.  One may wonder why Agatthiyar is saying Vedanta instead of Siddhanta.  The rituals that the Siddhas prescribe may be different from the rituals that the Veda prescribes.  However, the ideas that Vedanta or the terminus of the Veda presents agree with the philosophy of the Siddhas.  Hence Agatthiyar says that one should live the life prescribed by Vedanta.  The broom mentioned here may be time. Time sweeps one’s life away unless one goes beyond mere material existence.

பழ முனிவர்கள் கூறிய நூல்களின் எல்லா முறைகளையும் கூறியுள்ளார்கள் ஆனால் மானச பூஜையை அவர்கள் விளக்கவில்லை. அதனால் தான் அதை இங்கே விளக்குவதாக அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  சித்தர்கள் வெளியில் செய்யும் பூஜையைவிட உள்ளத்தில் நடத்தும் பூசையே உயர்ந்தது என்று கூறுவர்.  திருமூலரின்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
என்ற பாடலை இங்கே நினைவுகூரவும். அகத்தியர் மேலும் மற்றொரு கருத்தை இங்கே கூறுகிறார்.  வேதாந்த வாழ்வல்லால் மற்றவை துடைப்பத்தால் பெருக்கி எறியவேண்டிய குப்பை வாழ்வு என்கிறார்.  சித்தர்களின் தத்துவம் சித்தாந்தம் அல்லவா அவர் ஏன் வேதாந்தம் என்று கூறுகிறார் என்றால், வேதாந்தம் என்பதைச் சார்ந்தே சித்தர்கள் தமது தத்துவத்தை அமைத்துள்ளனர்.  வேதாந்தம் என்பது சடங்குகள் அல்ல, அது இறைவனைப் பற்றிய அறிவு.  சித்தர்கள் கூறும் சடங்குகள் வேதம் கூறும் சடங்குகளைப் போல இல்லாதிருக்கலாம் ஆனால் அவர்கள் இறைவனைப் பற்றிக் கூறுபவை வேதத்தின் உச்சியான, முடிவான வேதாந்தத்தில் உள்ள கருத்துக்களை ஒத்துள்ளன.  இங்கு துடைப்பம் என்று கூறப்படுவது காலமாக இருக்கலாம்.  காலம் ஞானம் பெறாத வாழ்க்கையை பெருக்கி எறிகிறது

No comments:

Post a Comment