Thursday 21 August 2014

334. siva yogam is truly a mental worship

Verse 334
மௌனம் என்று வாய் மூடி இருப்பதல்ல
மடையராய் வேடமிட்டுத் திரிவதல்ல
கெவுனம் என்றால் குளியிட்டுப் போவதல்ல
கெடியாக மந்திரங்கள் செய்வதல்ல
மௌனம் என்றால் அபான வழி யோகமல்ல
பார்த்தோரை மயக்கினது வித்தை அல்ல
எவுனம் என்ற காலமே தவசுவேணும்
ஏழையாய் மானதமாம் பூசை பாரே.

Translation:
It is not remaining silent claiming it to be ‘mouna’
It is not adorning the garb of a fool
Kevunam is not travelling in the sky with the help of ‘kulikai’ (magical preparation)
It is not reciting mantra steadily
Silence is not apaana yoga (reversing the flow of air)
Deluding the spectators is not magical accomplishments
Austerities (tapas) should be maintained at all times,
Remaining humble. See the mental worship.

Commentary: In this important verse Agatthiyar explains what is vaasi yoga or kundalini yoga.  He lists what it is not as follows:  silence is not simply shutting the mouth, it not pretending to be a fool, it is not performing miraculous sky travels with the help of magical preparations (kulikai)  it is not reciting mantra incessantly.  It is not pranayama of controlling and reversing the vital breaths, it is not tricking others with siddhis.  Tapas is disciplining of the mind, body and words.  True worship is mental worship or manasa puja.

As we have seen in several verses, siddha poetry functions at all the three levels, body, mind and spirit.  Something which looks like a physical preparation will actually be a mental discipline or a spiritual austerity.  This does not mean that their medicinal preparations or alchemical methods are not fruitful.  They too function in all the three levels.  However, the real intent is not material gains or physical gains but spiritual evolution.  Hence, everything should be looked up on a mental worship procedure. 

இந்த முக்கியமான பாடலில் அகத்தியர் சித்தர் தத்துவத்தை, அவர்களது குறிக்கோளை விளக்குகிறார்.  அவர் சிவ யோகம் அல்லது வாசி யோகம் என்பது வாயால் பேசாமல் மௌனமாக இருப்பதல்ல, முட்டாளைப் போல வேடமிட்டுக்கொண்டு திரிவதல்ல, அது தொடர்ந்து மந்திரங்களை உச்ச்சரிப்பதல்ல, சித்துக்களினால் பிறரை மயக்குவதல்ல.  அது உடல், மன ஒழுக்கம், தவம் என்பது கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பதல்ல, ஒவ்வொரு நொடியும் எண்ணங்களை, சொற்களை, மாயை தோற்றுவிக்கும் தோற்றங்களை அவற்றின் உண்மையான நிலையைப் பார்ப்பது.  அது எவ்வித அலங்காரப் பூச்சுமின்றி செய்யப்படும் மானச பூஜை. 

சித்தர்களின் பாடல்கள் உடல், மனம் ஆன்மா என்ற மூன்று தளங்களிலும் செயல்படுகின்ற விஷயங்களைப் பற்றியவை.  ஒரு மருந்து தயாரிப்பாகவோ ரசவாத முறையாகவோ தோன்றும் ஒரு பாடல் மன ஒழுக்கம் அல்லது ஆன்மாவின் பரிணாம வளர்ச்சிக்கு உதவும் வழிமுறையாகவும் இருக்கும். இதனால் சித்தர்களின் பாடல்களை ஒருவர் மான பூஜை விதிகளாக அதை விளக்குவதாகக் கருதவேண்டும், அவர்களது யோக முறைகள் உண்மையில் மனதினால் செய்யப்படும் பூஜையாகும்.   

No comments:

Post a Comment