Verse 331
ஓம் என்றே ஆடி நின்றாள் கம்பம் மீது
உலகமெலாமாம் என்றே கம்பம் ஆகி
ஊம் என்றே உலகம் எல்லாம் அடங்கித் தென்றாள்
ஓ ஓ ஓ துர்க்கை யவள் ஆடும் கூத்தை
தாம் என்றாள் ஆடி நின்றாள் ஒழியாக் கூத்து
சங்கல்பம் விகல்பம் என்ற சட்டை நீக்கி
ஆம் என்றால் கூத்து விட்டு வார தெப்போ
அடி முடியில் நின்றோர் முன் அருள் செய்வாளே
Translation:
She remained
dancing on the pillar as Om
As the pillar
of the entire world/as pillar of "aam"/aham
She said,
“all the worlds abided as oom”
O O O The
dance of her, Durga
She said
"self"/taam, she danced, the dance that never terminates
Removing the
two shirts, sankalpa and vikalpa
When is the
time to come away from the dance, if it is aam?
She will
grace this information in front of those who remain at the top and bottom
termini.
Commentary:
This is an
interesting verse where Agatthiyar calls Kundalini Sakti as
Durga. The term Durga means “one who is invincible” and also one who
removes difficulties. Navadurga are the nine forms of Durga are worshiped
during navaratri. Due to their association with the cakras in the body
Agatthiyar is mentioning her here while talking about ascension of Kundalini
sakthi. According to scriptures, Durga incarnates as Sarasvati, Lakshmi
and Kali. Each of them manifest into three more forms and thus there are
totally nine Durgas or nava durga.
The first
form of the nine Durga is Shilaputri. She is worshipped on the first day
of Durga Puja. She represents the muladhara cakra. As the daughter of
Daksha, the muladhara, where our “not easily shakable” karma, the rock, is
stored, she is called Shilaputri or the daughter of the rock.
Her second
form is called Brahmacharini. She represents the svadishtana cakra in
this form. Svadishtana or sva+adhishtana means the locus of the
Self. Karmas are usually stored in the muladhara and they operate through
the svadishtana. Durga who represents Svadishtana, where the kundalini
who is not “married” to Siva resides, is the Brahmacharini. She remains as the one who contemplates on the Brahmam.
In her third
form she is Chandrakhaanta representing the manipuraka cakra. Chandra
represents consciousness. Chandrakaantha means one who adores the supreme
consciousness. The limited soul held in the concealed state at the
muladhara and svadhishtana starts its journey of breaking free from its fetters,
desiring (kaantha) the state of supreme consciousness, the chandra.
Kooshmanda
Durga represents the fourth cakra, the anahata. This term means “one who
brings a little warmth to the universe”.
A warm heart means a heart filled with love. Tirumular has referred to this as “ambe sivam”
The
Skandamata, the fifth form of Durga, represents the Visuddhi cakra. At the
vishuddhi cakra the base qualities or animalistic tendencies start their
transformation into Divine qualities. Hence, this place is called
"kanda" or the meeting point. The union of Siva and Sakti or
the universal and limited consciousness starts from this cakraa. Hence,
she is Skandamata, the mother who will birth Skanda.
Katyayani
Durga represents the ajna cakra. Devi Kanyakumari is a form of Katyayani
Devi.
Kaalaraatri
Durga, Maha Gauri and Siddhi Daatri correspond to the three cakras above the
ajna. They could be the bindu cakra, the sahasrara and the dvadasantha or
the bindu, guru and sahasrara cakra. The kundalini sakthi flows through
the sushumna nadi until the ajna cakra. After ajna it flows through
several channels, goes through the indu cakra at the back of the head, the guru
cakra at the entrance of the sahasrara and then reaches the pinnacle, the
sahasrara. Thus the path of kundalini beyond ajna is very fierce,
unknown, dark and the Durga who represents it is Kaalaratri. Also, the
concept of time stops at ajna where only soul consciousness exists. Thus,
this form of Durga “kills time”. Beyond Kaal ratri is Maa Gauri, the
benevolent mother, the guru who takes us to Siva at the sahasrara. At
Sahasrara she is Siddhi daatri or granter of Siddhi.
Siddhi Daatri
was the first Durga or Devi who emerged from Siva at the time of
creation. Thus she represents the state of supreme consciousness.
The
ascendance of wisdom is said to a state of complete effulgence, koti surya
prakasa. This state is represented by Kashmunda.
Thus the nine
forms of Durga are nothing but Kundalini Sakti in various forms and navaratri
puja is actually a puja for kundalini sakthi.
Now going
back to the verse- aam means aham or the sense of Self. In Nandikesakaasika
it is said that the first letter of the sanskrit alphabet a joins with the last
letter ha and becomes aham. Thus it encompasses all the tattva, all the
entities within it. Oom represents the Self in action. The "aaam
enra kampam oom enru aagi" means, the actionless state has a ripple in it,
kampam means slight movement, and becomes the world, the oom. This ripple
is the dance of Durga, the dance of Self. It is the self with
distinctions as "I" and "that". The two shirts
sankalpa and vikalpa means will and imagination. These are two actions of
maya that operates through the mind. sankalpa is will that controls the
prana. Hence, the Raja yogis consider the will or the mind to be greater
than the prana or the breath. vikalpa is imagination. Swami
Sivananda says that maya plays havoc through this vikalpa. Imagination or
visualization is both good and bad. Siddhas recommend visualization as a
technique to break away from limitedness. It is also the cause for bondage
as the mind imagines without any limit. Hence, these two should be
removed, that is, influence of the mind should be removed to reach the supreme
state. One has to even go beyond the aham the state of consciousness as
there is still the split of "me and my consciousness" or Siva and
Sakti, to reach the paraveli or the state of supreme consciousness. Durga
or Self reveals how to do so for those who are practising kundalini yoga by
being aware of the top and bottom termini, the sahasrara and muladhara, the
unmanifested state and completely manifested state.
இப்பாடலில் அகத்தியர் சக்தி, குண்டலினியை துர்கா என்று
அழைக்கிறார். துர்கா என்றால் “துக்கத்தை
அறுப்பவள்”, “யாராலும் வெல்ல முடியாதவள்” என்று பொருள். நவ துர்கா என்பது துர்கையின் ஒன்பது நிலைகளைக்
குறிக்கும். துர்கையின் இந்த ஒன்பது
உருவங்கள் நவராத்ரியின்போது வழிபடப்படுகின்றன.
துர்கையின் இந்த நிலைகள் நம் உடலில் உள்ள சக்கரங்களுடனும் குண்டலினி
சக்தியுடனும் தொடர்பு கொண்டிருப்பதால் அகத்தியர் இப்பாடலில் துர்கையைப் பற்றிப்
பேசுகிறார். துர்கையே சரஸ்வதி, லட்சுமி,
காளி என்ற மூன்று உருவங்களாகத் தோன்றுகிறாள் என்று நூல்கள் கூறுகின்றன. இந்த மூவரும் இன்னும் மூன்று நிலைகளில் இருந்து
நவதுர்கையாகக் காட்சியளிகின்றனர்.
இவர்களில் முதலாமவர் சிலாபுத்ரி என்று அழைக்கப்படுகிறார். அவர் நமது மூலாதாரத்தைக் குறிக்கிறார். சிலா என்பது பாறையைக் குறிக்கும். பாறையைப் போன்ற கடினமான நமது கர்மங்களும்
சம்ஸ்காரங்களும் மூலாதாரத்தில் சேர்த்துவைக்கப்பட்டுள்ளன. அவையே பாறையைப் போல நமக்கு ஆதாரமாக
இருக்கின்றன. தட்சன் என்று குறிப்பது இந்த
தத்துவத்தைத்தான். இவ்வாறு துர்கா
தட்சனின் புத்ரி, இங்கிருந்து தோன்றுபவள்.
குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து எழுவதை இது குறிக்கிறது.
இந்த நிலையை அடுத்து இருபது பிரம்மச்சாரிணி. இது சுவாதிஷ்டானத்தைக் குறிக்கும். சுவாதிஷ்டானம் ஆத்மாவின் இடத்தைக்
குறிக்கும். சுவாதிஷ்டான சக்கரமும்
மூலாதார சக்கரமும் சேர்ந்த ஒரு பிறப்பாக விளங்குகின்றன. இந்த நிலையில் விழிப்புணர்வு, பரவுணர்வுடன்
சேரவில்லை, அவள் பிரம்மசாரியாக இருக்கிறாள்.
பிரம்மத்தை அறிய முயல்பவளாக, அதைப் பற்றி எண்ணுபவளாக இருக்கிறாள்.
துர்கையின் மூன்றாவது நிலை சந்திரகாந்தா. இது மூன்றாவது சக்கரமான
மணிபூரக சக்கரத்தைக் குறிக்கும். சந்திரன்
என்பது பரவுணர்வு நிலையை,விழிப்புணர்வைக் குறிக்கும். சந்திரகாந்தா என்பது இந்த விழிப்புணர்வை விரும்பும்
நிலை. கர்மங்களால் மூடப்பட்டு இருந்த
ஆத்மா விழிப்புணர்வை விரும்பி தனது மேல்நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறது.
கூஷ்மாண்டா என்ற நான்காம் துர்கா இதயத்தில் உள்ள அனாகத சக்கரத்தைக்
குறிக்கிறாள். இந்த சொல் அண்டத்துக்கு சிறிது
கதகதைப்பைத் தருபவள் என்று பொருள்படும். கதகதப்பான
இதயம் என்பது அன்பான இதயம். இதையே
திருமூலர் அன்பே சிவம் என்கிறார்.
இதனை அடுத்த துர்கா ஸ்கந்தமாதா.
இவள் கழுத்தில் உள்ள விசுத்தி சக்கரத்தைக் குறிக்கிறாள். இங்குதான் மிருக குணங்கள் தேவ குண்டங்களைச்
சந்திக்கின்றன. அதனால்தான் கழுத்து கண்டம்
எனப்படுகிறது. விழிப்புணர்வு இந்த சக்கரத்துக்கு
மேலே ஏறி உச்சியை அடையும்போது ஸ்கந்தம் அல்லது பரவுணர்வுடன் கூடிய நிலை
பிறக்கிறது. இதனால் இங்கு இருக்கும்
துர்கா ஸ்கந்தனின் தாயாவாள்.
இதனை அடுத்து இருப்பது காத்யாயனி.
தேவி கன்யாகுமரி இந்த காத்யாயனி தேவியைக் குறிக்கிறாள். இவள் இருப்பது ஆக்ஞா சக்கரத்தில்.
இவளை அடுத்து இருப்பது காளராத்ரி, கெளரி மற்றும் சித்தி தாத்ரி. இவர்கள் ஆக்ஞாவுக்கு மேலே இருக்கும் மூன்று
சக்கரங்களான பிந்து, குரு மற்றும் சஹாஸ்ராரதைக் குறிக்கும். ஆக்ஞையில் இடை பிங்களை சுழுமுனை என்ற மூன்று
நாடிகள் முடிவுறுகின்றன. இதற்கு மேல்
குண்டலினியின் பயணம் பெரும் சக்தியுடன் பல கிளைகளில் நடக்கிறது. பிந்து சக்கரம் என்பது நமது தலையின் பின்புறம்
இருக்கும் சக்கரம். குரு சக்கரம்
சஹாஸ்ராரத்தின் வாயிலில் இருப்பது. இந்த
சக்திமிக்க பயணத்தைக் குறிப்பவள் காளராத்ரி.
அவளை அடுத்து இருக்கும் மா கெளரி அன்புடன், மென்மையாக நம்மை சஹாஸ்ராரத்துக்கு
அழைத்துச் செல்கிறாள். இவளது அடுத்த நிலை
சித்தி தாத்ரி அல்லது எல்லா சித்திகளையும் அருளுபவள். இவர் அனைவருக்கும் மேலே இருப்பவள் கஷ்முண்டா
அல்லது பரிபூரண ஜோதி. அவளே கோடி
சூரியப்பிரகாசத்துடன் இருப்பவள். இதுவே ஆன்மாவின் உச்ச நிலை, பரவுணர்வு நிலை.
இவ்வாறு
நவதுர்கைகளும் குண்டலினி சக்தியின் ஒன்பது நிலைகளைக் குறிக்கின்றனர்.
Excellent...
ReplyDeleteAmazing isn't it! Guruve Saranam.
ReplyDelete