Tuesday 12 August 2014

120. A true disciple

Verse 120
இன்னொருவன் செய்கை என்ன குருவே என்று
எந்நேரம் அது கவனமாகத் தேடி
அன்னொருவன் குருவென்று வந்தானானால்
அடியற்ற பனை போல தெண்டம் செய்து
தன் இருகைவாய் பொத்தி அன்னம் ஈந்து
சந்தோஷம் குருகேட்டதெல்லாம் ஈந்து
உன் இருகையுடன் பொருளும் ஆவி மூன்றும்
உகந்துனக்கு தாரை என்னும் ஞானம் தானே

Translation:
Action of another.  If he comes seeking
Guru, after searching for him carefully for a long time,
If he comes saying, “Guruve!”
Falling at his feet like a palm tree without a base,
Covering his mouth with both palms, offering food
Happily offering everything that the Guru asks for
The Guru will grant wisdom to such a person
Who offers, with both hands, his material possessions and soul.

Commentary:
Agatthiyar says that sometimes a disciple will seek a Guru for a very long time and come to the right one seeking wisdom.  He will fall at the feet of the Guru, as an act of supplication, like a palm tree that has no base.  He will happily offer the Guru, food and anything he asks for. For such a disciple who offers his material possessions, his body and soul, the Guru will grant wisdom.


சில சமயம் ஒரு சீடன் வெகுநாட்களுக்கு ஒரு குருவைத் தேடிவிட்டு தகுந்த குருவிடம் வருவான்.  அவரிடம், “குருவே!” என்று சரணடைந்து அவர் கால்களில் விழுந்து வணங்கி, கை கட்டி வாய் பொத்தி அவருக்கு உணவும் அவர் கேட்பவற்றையும் சமர்ப்பிப்பார்.  இவ்வாறு தனது உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் சமர்ப்பிப்பவருக்கு குருவும் ஞானத்தை வழங்குகிறார்.

No comments:

Post a Comment