Verse
330
தண்டு
தனைத் துண்டு துண்டாய் மாய்கை எல்லாம்
தரித்துவிட்டாள்
நல்வினை தீ வினைகள் ரெண்டும்
கடுதனை
அற்பர்களும் மெச்சி நிற்க
கரணம்
ஓர் மூன்று செய்தாள் கம்பம் மீது
கொண்டு
நின்று அறியோடு சித்திரியும் ஆகி
குருநம
சிவாய சிங்காரத்தோடு
பண்டு
தனை ரீங்காரம் ஐவர் ஓடு
பரியாசம்புல்லவடா
கிலி ஓம் என்றாள்
Translation:
She
cut the maya into pieces in the stem
And
adorned the two, good and bad actions
With
even the cheap ones praising her
She
tumbled thrice on the pillar
Going
there and remaining as ari and chitri
Along
with gurunamacivayam singaaram
With
the ancient reenkaaram along with the five
She
said let us engage in physical union, klee, om.
Commentary:
Devi
cut away all the maya, the delusion. She
absorbed the fruits of both good and bad actions. Both the good and bad actions are bad for
spiritual progress. They are gold and
iron shackles. Even the idiots
who do not know her greatness will appreciate the speed with which she performs
the above actions. Agatthiyar says that
Devi tumbled thrice over the pillar. The
sushumna nadi is said to be composed of three more concentric tubes one within
the other. These tubes are vajrini- for
rajas, chitrini for sattva and brahma for consciousness. Agatthiyar refers to
this in line 5. This process brings up
various sounds. The mantra mentioned
here are the namacivaya, sing, reem, kleem and om. The “aivar” are the five deities, pancha kartha who represent the chakras. Thus the mantra is om aim kleem
reem sing namacivaya. The term “pariyaasam
pullavadaa” is not clear. It may mean pariyangaasanam for physical union.
மாயை
அனைத்தையும் தேவி துண்டு துண்டாக வெட்டி நல்வினை தீவினை என்ற இரண்டையும் தான்
ஏற்றுக்கொண்டாள். நல்வினை என்பது
பொன்விலங்கு தீவினை என்பது இரும்பு விலங்கு.
அவை இரண்டும் ஆன்மீக முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பவை. அவளது இந்த
செய்கையின் வேகத்தை அற்பர்களும் மெச்சுவார்கள் என்கிறார் அகத்தியர். இதற்குப் பிறகு தேவி மூன்று முறை கரணமிட்டாள் என்கிறார்
அவர். இது சுழுமுனை நாடியில் உள்ள மூன்று
உள் நாடிகளைக் குறிக்கலாம். அவை ரஜோ குணத்தைக் குறிக்கும் வஜ்ரிணி, சத்துவ
குணத்தைக் குறிக்கும் சித்ரிணி மற்றும் விழிப்புணர்வைக் குறிக்கும் பிரம்ம
நாடிகளாகும். இந்தச் செயல் பலவித ஒலிகளை எழுப்பும். இப்பாடலில் குறிப்பிடும் மந்திரம் நமசிவாய சிங்
ரீம் க்லீம் ஓம் என்பவையாகும். ஐவர் என்று
குறிப்பிடுவது ஐம் என்று இருக்குமோ என்று தோன்றுகிறது. “பரியாசம் புல்லவடா” என்பது புரியவில்லை.
No comments:
Post a Comment