Verse
321
முகத்தில்
இரு பிறமு முத்து மணிகள் பூண்டாள்
முழுப்பச்சை
தமனியத்தில் பதக்கம் பூண்டாள்
அகத்தில்
இரு செவித்தொட்டில் அணிந்தாள் அம்மன்
அர
அரா நாகமணி ஓலை பூண்டாள்
உகத்திருகு
கொம்பணிந்தாள் முருகு சாந்து
ஓ
ஓ ஓ சின்மயத்தை மாலை சூடி
எகத்தில்
ஒரு தொட்டியப் பெண் முகத்தில் அம்மன்
எழுந்து
மின்னல் சுடர்மணியை நத்துமுத்தே
Translation:
On
both sides of the face she adorned pearls and gemstones
She
adorned a necklace with a center piece of green stone
On
both ears she adorned the danglers, Mother,
Ara
araa! She adorned the earring of
naagamani/ruby,
She
adorned the earring ‘kombu’ and the beautiful, fragrant paste
O!O!O!
She adorned the chinmaya as the garland
Within me, the
Mother with the face of a lady of “thottiya” tribe
Rising like a
lightening, the flame, the jewel as the pearl ornament on the nose ring.
Commentary:
Agatthiyar continues
his beautiful description of Mother, Sakthi in this verse. He says that Sakthi adorned the pearls on
either side of her face. These may be
referring to minor cakras on either side of the face, at the temples. She has a beautiful necklace with the center
piece made of green stone. This
corresponds to the anahata cakra.
“sevitthottil” seems to be danglers that women wear on their ears. Kombu is an earring for pierced ears. She has also adorned the “naagaratna Olai” in
her ears. Calling the earring Olai is
very common in Karnataka. These are some ancient ornaments common in South
India. Her garland is chinmayam, the
embodiment of chith. Mother has her face
as that of a lady from “thottiya”tribe.
This is one of the ancient tribes of South India, common in Karnataka,
Andra Pradesh. They are called thottiya
naayakars. Several famous chieftans
including Krishnadevaraya, Veerapandiya Kattabomman belong to this tribe. They are primarility Sakthi worshippers. Some of their deities are Jakkamma, Renuka
amma and Meenakshi amma. Mother’s nose is decored by the “natthu” made of
lightning-like flame, jewel. This
ornament is worn at the bottom of the nose bridge between the two
nostrils. It is said to regulate the
breath. This practice is still seen in
several tribes. A “natthu” of diamond or
pearl is said to be beneficial to health as the in-going breath carries their
good qualities inside the body.
அகத்தியர்
சக்தியைப் பற்றிய தனது அற்புதமான வர்ணனையை இப்பாடலில் தொடருகிறார். சக்தி அல்லது அம்மன், தனது முகத்தின்
இருபுறமும் முத்துகள் அணிந்துள்ளாள். இது
முகத்தின் இருபுறமும், குறிப்பாக நெற்றிப் பொட்டில் உள்ள சிறிய சக்கரங்களைக்
குறிக்கும். அவளது நெஞ்சை ஒரு அழிய
பச்சைப் பதக்கம் கொண்ட ஹாரம் அலங்கரிக்கிறது.
இது அனாஹத சக்கரத்தைக் குறிக்கும்.
அவளது காதுகளில் செவித்தொட்டிலும்
கொம்பும் காணப்படுகின்றன. செவித்தொட்டில்
ஜிமிக்கியைப் போன்றது. கொம்பு என்பது காதுத் துளையில் அணியும் ஆபரணம். மேலும் அவள் காதுகளில் நாகமணி ஓலையை
அணிந்துள்ளாள். காதணிகளை ஓலை என்று
அழைக்கும் வழக்கம் இன்றும் கர்நாடகத்தில் உண்டு.
அது சுருள் வடிவமான மணிகள் பதித்த காது ஆபரணம். அவளது மாலை சின்மயம். அவளது முகம் “தொட்டியப் பெண்” போல உள்ளது
என்கிறார் அகத்தியர். தொட்டிய நாயக்கர்கள்
என்பவர்கள் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திராவில் உள்ள பழங்குடியினர். அவர்கள் காப்பு என்ற குலத்தைச்
சேர்ந்தவர்கள். அவர்கள் தமிழும்
தெலுங்கும் கலந்த ஒரு மொழியைப் பேசுவார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன்,
கிருஷ்ணதேவராயர் முதலியோர் இந்த தொட்டி நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் சக்தியை அல்லது அம்மனை
வழிபடுபவர்கள். அவர்களது சில முக்கிய
தெய்வங்கள் ஜக்கம்மா, ரேணுகா அம்மா, மீனாட்சி அம்மா முதலியோர். இவ்வரியில்
காணப்படும் “எகத்தில்” என்பது என்னுள் என்று பொருள்படும். அந்த அம்மனின் மூக்கில் மின்னலைப் போன்ற
சுடர்மணி நத்தாக உள்ளது. நத்து என்பது இரு
நாசித் துவாரங்களினிடையேயும் அணிவது. இந்த
வழக்கம் இன்றுகூட பழங்குடியினரிடம் காணப்படுகிறது. அது மூக்கில் சுவாச ஓட்டத்தை கட்டுப்படுத்த
உதவுகிறது. வைரம், முத்து போன்ற
நத்துக்களை அணிவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது ஏனெனில் சுவாசம் அவற்றின்
தன்மைகளை உடலுள் எடுத்துச் செல்கிறது என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment