Wednesday, 23 July 2014

304. Agatthiyar's warning, a must read for all the yogis!

லகீர் இழுக்கும் வகை
விழித்து மிகப் பார்க்கையிலே பொறிதாள் வீசும்க
விவேகம் உள்ள புலத்தியனே லகிரிக்கும்
சுழித்தியிலே போகாதே சமயம் பாரு
சுருக்காகத் திரும்பி மனம் பதியில் சேரு
இழுத்ததென்று நீ கூட தொடர்ந்தாயானால்
என்னளவோ என்னளவோ திரும்பக் காணேன்
அழைத்தாலும் திரும்பாது ஜடம் பாழாச்சு
அர அரா சக்கரத்தின் ஆட்டம் தானே

Translation:
When saw with focus the sparks will fly
Pulatthiya who has discrimination!  It will make you delusional
Do not go forward in the whorl anymore, look for the opportunity,
Returning quickly come back to the locus of the mind
If you follow it saying it is pulling you
Howmuch ever I see, I do not see any return,
Even if called back it will not return, the body will be destroyed
Ara araa! This is the dance/action of the cakra.

Commentary:
Agatthiyar is talking about an interesting concept here that many of us are not aware of.  It is called the state of aananda aaspadam.  Vedanta talks about the panch kosha or five sheaths which are states created by various factors.  They are annamaya kosha, prananmaya kosha, manomaya kosha, vijnanamaya kosha and aanandamaya kosha.  When a yogi performs kundalini yoga, he reaches the aanandamaya kosha which is associated with the causal body.  This is a state of bliss attained when the consciousness reaches the sahasrara but it is not the ultimate state as it is still associated with the body.  Several great souls have lost their lives thinking this is the ultimate state.  It is a point of no return as the connection with the bhutakasam is completely cut off.  The yogin remains stuck in this state and cannot progress further or get back to the body.  (for more details please read the book Sambhavi yogam by Amarakavi Siddheswara, Hayagreeva Publications 04428444275).  Agatthiyar is talking about this state here.   He says that this state will pull one within and will not let go.  It will wait for a few seconds before pulling one inside.  Hence Agatthiyar suggests to Pulatthiyar to return quickly to the state of mind or the mano and vijnanamaya kosha so that he may return to the body.  Also the body will get destroyed if one remains in this aanandamaya kosham.  One has to cross this stage and reach the paramakasa.


இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கியமான கருத்தைப் பற்றிப் பேசுகிறார்.  அது ஆனந்த ஆஸ்பதம் என்பது.  இதை ஆனந்தமய கோசம் என்றும் கூறுவர்.  வேதாந்தம் ஆத்மாவை ஐவகைக் கோசங்கள் சூழ்ந்துள்ளன என்று கூறுகிறது.  அவை அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசம்.  இவையனைத்தும் பல்வேறு நிலைகள், பிரகிருத்தி அல்லது பருப்பொருளால் ஏற்படுத்தப்பட்ட நிலைகள்.  இவற்றில் ஆனந்தமய கோசம் என்பது காரண உடலுடன் தொடர்புடையது.  குண்டலினி யோகம் செய்யும் ஒரு யோகி சஹாஸ்ராரத்தை அடையும்போது இந்த ஆனந்தமய கோசத்தை அனுபவிக்கிறார்.  இதில் உள்ள ஆபத்து என்னவென்றால் ஒரு சில நொடிகளுக்குப் பிறகு இந்த ஆனந்த நிலை ஒரு அலையைப் போல ஒருவரைத் தன்னுள் முழுகடித்துவிடும்.  இந்த நிலையே இறுதி நிலை என்று பல யோக நூல்கள் கூறுகின்றன.  ஆனால் அது உண்மையல்ல.  இந்த நிலையைத் தாண்டி ஒருவர் மேலே துவாதசாந்தம் என்னும் நிலையை அடையவேண்டும்.  அப்போது பரமாகாசத்துடன் தொடர்பு ஏற்படுகிறது.  (ஆனந்த ஆச்பதத்தைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய அமரகவி சித்தேச்வரரின் சாம்பவி யோகம் என்ற நூலைப் படிக்கவும், அயகிரிவா பப்ளிகேஷன்ஸ் o4428444275).  இப்பாடலில் அகத்தியர் இந்த நிலையைக் குறித்துத்தான் புலத்தியரை எச்சரிக்கிறார்.  இந்த நிலையை அடைந்தவுடன் விரைவாக மனதின் பதிக்கு அதாவது மனோமய கோசம் அல்லது விஞ்ஞானமய கோசத்துக்குத் திரும்பிவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இதிலிருந்து திரும்ப முடியாது என்று அகத்தியர் கூறுகிறார்.  இந்த நிலையில் தொடர்ந்தால் உடலும் பாழாகிவிடும், அந்த யோகியால் மேல் நிலைக்கும் போக முடியாது  உடலுக்கும் திரும்பமுடியாது.  அமரகவி இந்த நிலையை “சொக்கி நிற்பார் மேல் நிலை காணார்” என்கிறார்.  இதைத் தான் அகத்தியர் லகிரிக்கும் அதாவது போதையூட்டும் என்கிறார். 

No comments:

Post a Comment