Friday, 25 July 2014

306. Pillar of the Lady, the kula nool

பலுக்கெல்லாம் இந்நூலில் படியப் போட்டேன்
பல நூலில் ஒளித்ததெல்லாம் பாடிப் போட்டேன்
குலுக்கெல்லாம் குளநூலில் குலுக்கிச் சொன்னேன்
கொட்டினேன் மனோன்மணியாள் கொலுவின் முன்னே
பிலுக்கெல்லாம் இதில் உரைத்தேன் இனிமேல் என்ன
பேசுவேன் துரைச்சி சிவ கம்பக் கூற்று
அலுக்கெல்லாம் அலுக்கி விட்டேன் இனிஎன் சொல்வேன்
அரகரா இது ஞானம் அரிது தானே

Translation:
I have explained everything in this book
All those that were concealed in several books, I sang here
I told everthing in this book of kula/pond
I piled them in front of manonmani’s presence
I will speak about the Lady’s Pillar/movement of Siva
I have told everything, more more will say,
Araharaa!  This is wisdom, rare isn’t it?

Commentary:
Agatthiyar says that he has described all the concepts in this book, meijnanam.  He says that he has spoken about the ‘duraicchi siva kammba koorru’. ‘Duraicchi’ means the lady who weilds power. ‘Siva kammbam’ means the pillar of Siva as well as movement of Siva or consciousness.  Sakthi is the active part of Siva, the cause for the manifested universe.  The third line as an interesting word ‘kula nool’ ‘kula’ means the kaula marga or the path of vaamai, kula kundalini.  The three main principles of this path are Sakti, Siva and Guru.  This is the family, kulam, into which the yogin is initiated. Agatthiyar says that he has revealed it all in the court of manonmani or consciousness and that this is the rarest knowledge of all.


அகத்தியர் தான் எல்லா கருத்துக்களையும் மிக விரிவாக இந்த மெய்ஞ்ஞான நூலில் விளக்கியுள்ளதாகவும் தான் “துரைச்சி சிவ கம்பகூற்றை” பேசியிருப்பதாகவும் இப்பாடலில் கூறுகிறார்.  துரைச்சி என்பது சக்தி வாய்ந்த பெண் அனைவரையும் ஆள்பவள் என்ற பொருளில் வருகிறது.  சிவ கம்பம் என்பது சுழுமுனை நாடியான குண்டலினியின் பாதை என்று ஒரு பொருள் படும்.  கம்பம் என்பதற்கு அசைவு என்றொரு பொருளும் உண்டு.  அப்பொருளைக் கொண்டால், அகத்தியர் தான் சிவத்தின் அசைவு நிலையான சக்தியைப் பற்றிப் பாடியுள்ளதாகக் கூறுகிறார் எனலாம்.  மூன்றாவது வரியில் “குளநூலில்” என்று வருகிறது.  அவ்வரியில் வரும் பிற சொற்களைப் பார்த்தோமானால் இது குல நூல் என்று இருக்குமோ என்று தோன்றுகிறது.  அவ்வாறென்றால் இந்நூல் சக்தி, சிவன், குரு என்ற மூன்று பேர் கொண்ட குலத்தைப் பற்றிப் பேசுவதாகப் பொருள்படும்.  கௌல மார்க்கம் என்பது குண்டலினியை முக்கியமான பிரதம சக்தியாகக் கருதும் மார்க்கம்.  இவ்வாறு கூறிவிட்டு இந்நூலில் இருப்பதுதான் ஞானம், அது மிக அரியது என்று அகத்தியர் சிலாகிக்கிறார்.

No comments:

Post a Comment