Sunday, 27 July 2014

309. Agatthiyan, the one who dances in Tillai

Verse 309
செப்பினேன் என்றுரைத்தீர் எந்தன் வாழ்வே
தில்லை நடம் ஆடுகின்ற அம்பலோனே
அப்பினால் மண் பசைந்த குசவன் தன்னை
ஐந்தருவாய் பூசை பண்ணச் சொன்னீரையா
தப்பினால் மோசம் என்று எனக்குச் சொன்னீர்
தப்பாமல் ஏறும் வழி சலித்திடாமல்
கோப்பி நீர் குருவாக வந்ததாலே
குறை தீர்த்து அருள் விளங்கப் பொருள் சொல்வீரே

Translation:

My Life! You said that you uttered.
The one who dances in Thillai!
Mixing the clay with water, the potter
You told (me) to worship as the five forms
You also told me that if it is missed it is bad,
Without frustration, the way to climb
As you agreed and came as the guru
Please remove the deficiency and explain the meaning so that the grace can be understood.

Commentary:
Pulatthiyar is talking to Agatthiyar in this verse.  He is telling Agatthiyar that Agatthiyar instructed him to worship the potter, the Divine, by mixing the water and the clay. 
The expression “mixing water and clay” means creating a form. It also means raising the kundalini through the muladhara and svadishtana.
This may mean, (1) creating a form for worship for the Divine who remains in the five formless states- Siva, sakti, Sadasiva, Isa and Maheswara.  (2) worship the formless one in this body that the potter, the Divine, created by mixing the clay and soil- by invoking the karma and samskara stored in the muladhara and svadhishtana.

Pulathiyar is calling Agatthiyar as “the one who dances in Tillai”.  This expression is generally used to address Lord Siva.  Pulatthiyar means that Agatthiyan is none other than Siva.  He may be meaning this literally or as in the idea that guru is none other than god.  It may also mean that the Agattheeyan, the fire within us, the kundalini Sakti, is none other than Siva. Next, he requests Agatthiyar to tell him the way to climb, or make the kundalini ascend the sushumna, removing any deficiencies present in Pulatthiyar or any complaints that he may have so that Pulatthiyar would understand grace

இப்பாடலில் புலத்தியர் அகத்தியரிடம் பேசுகிறார்.  அகத்தியர் தன்னை மண்ணை நீருடன் பிசைந்து குயவனை, இறைவனை, ஐந்தருவாக வழிபடுமாறு கூறினார் என்கிறார் புலத்தியர்.  மண்ணும் நீரும் பிசைந்து- மண்ணும் நீரும் பிசைவது என்பது ஒரு உருவத்தைக் கொடுப்பது என்றும் மூலாதாரம், மற்றும் சுவாதிஷ்டானத்தில் குண்டலினியை எழுப்புதல் என்றும் பொருள்படும். 
உலகம் தோன்றுவதற்குக் காரணமான ஐந்து அருவ நிலைகள்- சிவன், சக்தி, சதாசிவன், மகேஸ்வரன் மற்றும் ஈசன்.  இந்த அருவ நிலையில் இருக்கும் இறைவனை ஒரு உருவில் வழிபடு, அல்லது குண்டலினி அக்னியை எழுப்பி வழிபடு என்று இதற்குப் பொருள் கூறலாம். 
இது மண்ணும் நீரும் பிசைந்து என்பதற்குப் பதில் பிசைந்த என்று கொண்டால், இவ்வுலகைப் படைத்த இறைவனான குயவனை அருவ நிலையில் வழிபடு என்பதாகவும் பொருள் கூறலாம்.
இப்பாடலில் புலத்தியர் அகத்தியரை தில்லையில் ஆடும் அம்பலோன் என்கிறார்.  இதனால் அகத்தியனும் இறைவனும் வேறில்லை, அகத்தில் உள்ள தீயான அகத்தியனே இறைவன் என்பது வெளிப்படையாகக் கூறப்படுகிறது.  இவ்வாறு அகத்தியன் என்பவர் நமது பரவுணர்வு என்பது புலப்படுகிறது. 

இவ்வாறு அகத்தியரைப் போற்றும் புலத்தியர் அவரிடம் வாசியை ஏற்றும் வழியைத் தனது குறைகளைத் தீர்த்து தனக்கு அருளுமாறு கேட்கிறார்.  

No comments:

Post a Comment