Tuesday, 2 September 2014

Thank You

Dear Readers,
Thanks for enjoying the journey through the Agatthiyar Meijnana kaviyam with me.  Unfortunately we are blessed with only 360 verses of the total of 1000 verses.  If any of you have more verses in the original, kindly pass it along so that all of us may enjoy them.  Thanks for all your support and encouraging words.  This was a wonderful experience for me.  Hope you all enjoyed the verses too.

This book will be loaded at scribd.  Hope you will continue your support for the Subramanyar Jnanam 500 as well.

Om Agattheesaaya namaha.

360. May be svadishtana cakra

Verse 360
கேளடா பிறைவந்துஐங் கோணம்தான்
கெணதமுடன் கோணம் அஞ்சில் எழுத்தைக் கேளு
வாளடா ஐஞ் செழுத்து வளையம் போட்டு
வரிசையுடன் பிறை நடுவில் மகாரம் போட்டு
மீளடா அதனிடத்தில் விரியப் போட்டு
வேதாந்த பூசை விதிப் படிக்குச் செய்து
ஏளடாமந்திரமும் எட்டெழுத்தைத் தாக்கி
இருந்திடு நீ சித்திரம்போல் குறிப்பைப் பாரே

Translation:
Listen son, the partial moon and the pentagon
Listen to the letters in the five points
Drawing the circle add the five letters
Add a partial moon in the middle and the Makara
Place it expansively there and recover
Performing (worship) as per the instructions of the Vedantic method
Piercing the mantra, the eight letters
You remain there like a painting.

Commentary:
Agatthiyar seems to be describing the svadhishtana cakra as it contains the partial moon within.  The central letter is also makra there.  Some systems say that the central letter is makara for the manipuraka cakra.  

இப்பாடலில் அகத்தியர் சுவாதிஷ்டான சக்கரத்தைப் பற்றிப் பேசுவதைப் போல உள்ளது.  இந்த சக்கரத்தின் மத்தியில் பிறைச் சந்திரனும் மகாரமும் உள்ளன.  ஆனால் அவர் நடுவில் ஐங்கோணம் உள்ளது என்றுஇந்த சக்கரத்தில் கவனத்தைக் குவித்து அசையாமல் சித்திரத்தைப் போல இருக்கவேண்டும் என்கிறார் அகத்தியர். 

359. General cleansing, asana and pranayama for Vishnu puja

Verse 359
கேளப்பா கால்முகங்கள் சுத்தி பண்ணி
கெணிதமுடன் விபூதி உத்தளமாய்ப் பூசி
வாளப்பா இந்திரன்தன் திசையை நோக்கி
வலக்காலை இடக்கால் மேல் மடித்துப் போட்டு
கோளப்பா ரேசக பூரகமும் பண்ணி
குருபுத்திரன் என்றுறுத்திக் கும்பகத்தில்
தாளப்பா கண் மூடி நாபி பற்றி
சக்கரத்தைக் கீறுகிற வரிசை கேளே

Translation:
Listen son, cleaning the face and feet
Adorning the sacred ash as a powder
Facing the direction of Indra (east)
Placing the right foot over the left
Performing the inhalation and exhalation
Holding it in kumbaka as the son of guru
Closing the eye and holding at the navel
Listen to the way of piercing the cakra.

Commentary:
Agatthiyar is describing the way in which the mental worship of Vishnu is performed.  One should clean the face and feet, adorn the sacred ash, sit facing east with the right leg on the left, perform inhalation and exhalation along with kumbaka holding it at the navel.  This is the method for piercing the svadhishtana cakra.


அகத்தியர் இப்பாடலில் எவ்வாறு விஷ்ணுவின் மானச பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.  முகம் கால்களைக் கழுவி, விபூதியை பூசிக்கொண்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து வலது காலை இடது காலின் மேல் இட்டு ஆசனத்தில் அமர்ந்து உள் மூச்சு, வெளி மூச்சு இடையில் நிறுத்துதல் என்ற பிராணாயாமத்தை நாபியில் கவனத்தை வைத்து செய்யவேண்டும்.  இவ்வாறு செய்தால் சுவாதிஷ்டான சக்கரத்தை துளைக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  

358. Listen about mental worship of Vishnu

பாவி என்று பேர் எடுத்து அலைந்திடாமல்
பஞ்சை என்று நூல் தேடிக் கெஞ்சிடாமல்
சாவி என்று பயிரிட்டோன் நொந்திடாமல்
தங்கை என்ற சொல் மறந்து புணர்ந்திடாமல்
ஆவி நடு அலையாமல் அடக்கி டாமல்
ஐம்பேதைச் சொல் கேட்டு அலைந்திடாமல்
வாவி என்று திரியாமல் வாமி யாகி
மானதமாம் விஷ்ணுவின் பூசை கேளே

Translation:
Without roaming getting a bad name as sinner
Without begging for the book getting the name, lowly,
Without the planter lamenting as chaff
Without having sex, forgetting the relationship as the sister 
Without controlling the breath in the middle banning its movement
Without roaming around listening to the words of the supremely ignorant
Without roaming seeking the water fall, becoming the vaami
Listen to the mental worship ritual for Vishnu

Commentary:
Agatthiyar is listing all the wasteful ways in which one may spend his time.  Vaami is Kundalini sakti.  He tells Pulatthiyar that he will be explaining the mental worship ritual for Vishnu.  Vishnu is the deity of the svadhistana cakra, the locus for the water principle.  Hence, Agatthiyar is rhyming vaami with vaavi or the waterfall.

ஒருவர் எவ்வாறெல்லாம் தனது நேரத்தை விரயமாக்கக் கூடாது என்று கூறும் அகத்தியர் தான் இப்போது விஷ்ணுவின் மானச பூஜையை விலக்கப்போவதாக புலத்தியரிடம் சொல்கிறார்.  விஷ்ணு சுவாதிஷ்டான சக்கரத்தின் அதிபதி.  இந்த சக்கரம் நீர் தத்துவத்தைக் குறிக்கிறது.  அதனால் அகத்தியர் வாமி என்று குண்டலினி சக்தியை அழைத்து அந்த சொல்லை வாவி என்பதுடன் செர்ந்திசையச் செய்கிறார்.  

357. Like the cloth placed on a stone, like an arrow released from a bow

Verse 357
சொல்லுவேன் புலத்தியனே நன்றாய்க் கேளு
சூக்ஷமடா மருந்துரைக்கத் துலையா தப்பா
கல்லு மேல் வேட்டிவைத்த வாறு போலக்
கசடர் முதல் யாவருக்கும் காணச் சொல்வேன்
வில்லில் நாண் ஏற்றிசரம் விடுத்தாப் போல
விரும்புவேன் மெய் விரும்பும் மௌனத் தோர்க்கு
இவ்விடத்தில் இருந்தால்என் மலை போனால் என்
இன்னதென்று அறியாத பாவிதானே

Translation:
I will say Pulatthiyar, listen well,
It is very subtle, it will not leave even if a medicine is prescribed for it
Like placing the waist cloth on a stone
I will say it in such a way that
even the faulty can see it
It will as pointed as if releasing an arrow from the bow
I will tell this to the silent ones who prefer the truth
It does not matter if one remains here or goes to the mountains
One who does not know this is a sorry one.

Commentary:
Agatthiyar says that he will reveal this knowledge to Pulatthiyar in such a clear fashion that it will be as if washing the lower cloth by placing it on a stone.  Clothes are traditionally washed by beating them on a stone so that the dirt leaves it.  Agatthiyar revealing this knowledge will remove the faults like the stone removing the dirt.  The manner in which will reveal this knowledge will be so focused, pointed as if an arrow is released from a bow.  It will hit the target accurately.  Unless one knows what Agatthiyar is teaching it does not matter whether one remains as a householder or a renunciate retired to the hills for penance.


புலத்தியரிடம் அகத்தியர் தான் இந்த அறிவை தெளிவாகக் கூறுவதாகவும், அது கல்லின் மேல் இட்ட வேட்டியைப் போல் இருக்கும் என்றும் கூறுகிறார்.  கல்லில் இட்டு தோய்த்த வேட்டி அழுக்கற்று இருக்கும்.  அகத்தியர் அளிக்கும் ஞானமும் அவ்வாறே உள்ளத்து அழுக்கைக் களையும்.  அது வில்லிலிருந்து விடுத்த அம்பைப் போல தனது இலக்கை சரியாகச் சென்று அடையும்.  இந்த அறிவை ஒருவர் பெறவில்லை என்றால் அவர் இல்லத்தவராக இருந்தாலும் கவலையில்லை, மலைக்குச் சென்று தவம் புரிபவராக இருந்தாலும் கவலையில்லை, அவர் ஒன்றும் அறியாத பாவிதான் என்கிறார் அகத்தியர். 

356. Please reveal this like just milked milk

Verse 356
திறந்திட்டேன் என்றுரைத்தீர் குருவே ஐயா
திரளாத கன்னி அவள் வயிற்றில் பிள்ளை
பிறந்திட்டான் என்று சொன்ன கதைபோல் ஆச்சு
பிள்ளைக்கு இவ்வார்த்தைச் சொல்லப் போமோ
கறந்திட்டப் பாலதுபோல் இன்ன தென்று
காட்டுவீர் கடைவிரித்துச் சரக்கைக் காட்டி
அறைந்திட்டுப் போனானே சரியாம் என்று
அங்கங்கும் தாமுரைத்தீர் அருள் சொல்வீரே

Translation:
My guru!  Sir, you said that you revealed everything explicitly
This is like saying
"A child in the womb of the maiden who had not attained maturity"
Can you say these to the child?
You please reveal this
Like the just milked milk,
You please show this as if spreading the shop
About all the components
He announced it as correct and went away
You talked about so many, please reveal the grace.

Commentary:
Pulatthiyar is telling Agatthiyar that his words are as inapt as saying that a maiden who had not attained maturity birthed a child.  Hence, Agatthiyar should explain this clearly as Pulatthiyar claims that he has not reached the mental maturity required to understand these concepts.  He requests Agatthiyar to explain as clealy as just milked milk, in a form that is easily consumable even by a child.  Someone, probably Siva, has announced that this knowledge is correct.  Hence, Agatthiyar should grant this grace- says Pulatthiyar.


புலத்தியர் அகத்தியரிடம் இந்த அறிவை இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி கூறுமாறு வேண்டுகிறார்.  மனமுதிர்ச்சியடையாத தனக்கு இந்த அறிவைக் கொடுப்பது, தகுந்த பருவமடையாத கன்னி ஒருத்தியின் வயிற்றில் பிள்ளை பிறந்தது என்று கூறுவதைப் போல உள்ளது.  அதனால் கறந்த பாலைப் போல குழந்தையும் எளிதாக ஜீரணிக்கும் விதத்தில் இவற்றைத் தனக்கு விளக்க வேண்டும் என்று புலத்தியர் அகத்தியரிடம் கூறுகிறார்.  இந்த அறிவை யாரோ ஒருவர், சிவனாக இருக்கலாம், சரி என்று அறைந்து கூறிவிட்டுச் சென்றுள்ளார் அதைத் தனக்கு அருளுமாறு அகத்தியர் வேண்டுகிறார். 

355. Nature of the senses

Verse 355
பார்த்தபடி ஏதென்றால் சொல்லக் கேளு
பாவம் ஏது பஞ்சை கட்கோ பயந்தேன் அப்பா
காற்றாடி கற்பூரம் கரைந்து போகும்
கரணம் போல் ஜீவகளை இருப்பு மைந்தா
கோத்தபடி ஏதென்றால் சொல்லக் கேளு
கூற்றுவன் தான் ஆர் என்றால் வாத ராசன்
சோத்தடைக்க வல்லோர்க்கு ஜீவன் முத்தி
சிவ சிவா நீற்கரிது திறந்திட்டேனே

Translation
Listen to what it is
What is sin, did I fear the weak, son,
Camphor will disappear in the wind
The existence of the senses of the souls are similar
What is that binds them together, if this is questioned
Who is the god of death- it is the king of vaadha
For those who are able to contain it within, Jivan mukhti
Siva sivaa, I opened it, that which is hard for you.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that the existence of the senses is like that of camphor.  When it is exposed to air camphor disappears.  When the senses are exposed to the vital breath, the prana, through pranayama, they also disappear.  The agent that binds them with the soul, and that which causes their death is vital breath whom Agatthiyar calls as Vaada raja or the king, the breath.  He adds that those who contain this vital breath within, (it seems as if the word sotthadaika should be setthadaikka)  attain jivan mukhti and that he has revealed everything.


இப்பாடலில் அகத்தியர் கரணங்களின் தன்மையைப் பற்றிக் கூறுகிறார்.  கரணங்கள் கற்பூரத்தைப் போல பிராணன் உயரும்போது காணாமல் போகின்றன.  அவற்றை ஜீவனுடன் பினைப்பதும் பிராணன்தான் அவற்றை இறக்கச் செய்வதும் பிராணன்தான்.  இந்தப் பிராணனை ஒருவர் உள்ளுக்குள் சேர்த்து அடைக்க அறிந்தால் அவருக்கு ஜீவன் முக்தி கிட்டுகிறது என்கிறார் அகத்தியர்.  இதைத் தான் வெளியிட்டுள்ளேன் என்று அவர் புலத்தியருக்குக் கூறுகிறார்.   

350, 354. incomplete yet interesting verses

Verse 350
வழியேது புலத்தியனே அறிவுள்ளோனே
வாள் இறங்கி வகுந்த சிரம் பொருந்துமோ தான்
ஒழி ஏது வானில் இடி சார்ந்து தானால்
உத்தமனே உயரமுமே நிற்குமோ சொல்
விழிக்கூடிச் சுழி நாடி சிக்கினோர்....

Translation:
Where is the way, Pualtthiya?  The wise one!
The head cut by a sword, will it fit again?
If thunder occurs in the sky, where is the relief
Will anything tall stand there?
Those who got caught in the whorl with their eyes merging…

Commentary:
This is an incomplete verse.  Agatthiyar tells Pulatthiyar that a head cut off by a sword cannot be fitted again.  Anything tall will not stand if the thunder occurs in the sky.  This is an interesting comment which shows Agatthiyar’s scientific knowledge, that anything tall will be hit by the lightning which accompanies thunder.  He continues this thought by saying that when a person gets caught in the whorl with his eyes merging. We do not know what he wished to say here.

இப்பாடல் முழுவதும் கிடைக்கவில்லை.  வாளினால் வெட்டிய தலையை மீண்டும் ஓட்ட வைக்க முடியாது என்றும் இடி இடிக்கும்போது உயரமான எதுவும் நிற்காது என்றும்  புலத்தியரிடம் உதாரணமாகக் காட்டும் அகத்தியர்,  கண்ணை நிலை நிறுத்தி சுழியில் நிறுத்தினோர் என்று எதையோ கூறத்தொடங்குகிறார். 

Verse 354
... நீயானால் ஞானத் தோடு
மின் நூலாய் அண்டாண்ட பதங்கள் எல்லாம்
மேவி நின்ற சாம்பவியைக் காண வேணும்
தென் நூல் போல் வடமொழியில் சாட்சி வைத்தேன்
செத்தாலும் மோக்ஷம் உண்டு இந்நூல் பாரே

Translation:
… you search for wisdom
As the thread like the lightning, the Sambhavi
Who remains pervading all the universes, the loci
I kept proof in Sanskrit as is in Tamil
Even if you die, there is moksha, see this book.

Commentary:
This incomplete verse is interesting.  It says that Agatthiyar has composed works in both Tamil and Sanskrit.  He says that he has displayed the proof in both the southern book and in the northern language, which is Sanskrit.  Sambhavi refers to Mother Sakti.  It may also be referring to the Sambhavi mudra which is one of the important mudhras the siddhas recommend.  It seens as if this mudra will grant vision of all the worlds, universes.


இந்தப் பாடலும் முழுவதுமாகக் கிடைக்கவில்லை.  ஆனால் இதிலுள்ள வரிகள் ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகின்றன.  அண்டங்களைஎல்லாம் ஆளும் சாம்பவியை ஒருவர் காணவேண்டும் என்று தொடரும் அகத்தியர், இதற்கான சாட்சியை தான் தென்மொழியில் அதாவது தமிழில் எழுதிய நூலிலும் வடமொழி நூலிலும், அதாவது சமஸ்கிருதத்தில் எழுதிய நூலிலும் வைத்துள்ளதாகக் கூறுகிறார்.  இதனால் அகத்தியர் வடமொழி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நூல்களை இயற்றியுள்ளார் என்று தெரிகிறது.  ஞானத்தைத் தேடும் இந்த முயற்சியில் பாதியிலேயே மடிந்துபோனாலும் மோக்ஷம் கிடைக்கும் அதனால் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை கவனமாகப் பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.