Tuesday 2 September 2014

358. Listen about mental worship of Vishnu

பாவி என்று பேர் எடுத்து அலைந்திடாமல்
பஞ்சை என்று நூல் தேடிக் கெஞ்சிடாமல்
சாவி என்று பயிரிட்டோன் நொந்திடாமல்
தங்கை என்ற சொல் மறந்து புணர்ந்திடாமல்
ஆவி நடு அலையாமல் அடக்கி டாமல்
ஐம்பேதைச் சொல் கேட்டு அலைந்திடாமல்
வாவி என்று திரியாமல் வாமி யாகி
மானதமாம் விஷ்ணுவின் பூசை கேளே

Translation:
Without roaming getting a bad name as sinner
Without begging for the book getting the name, lowly,
Without the planter lamenting as chaff
Without having sex, forgetting the relationship as the sister 
Without controlling the breath in the middle banning its movement
Without roaming around listening to the words of the supremely ignorant
Without roaming seeking the water fall, becoming the vaami
Listen to the mental worship ritual for Vishnu

Commentary:
Agatthiyar is listing all the wasteful ways in which one may spend his time.  Vaami is Kundalini sakti.  He tells Pulatthiyar that he will be explaining the mental worship ritual for Vishnu.  Vishnu is the deity of the svadhistana cakra, the locus for the water principle.  Hence, Agatthiyar is rhyming vaami with vaavi or the waterfall.

ஒருவர் எவ்வாறெல்லாம் தனது நேரத்தை விரயமாக்கக் கூடாது என்று கூறும் அகத்தியர் தான் இப்போது விஷ்ணுவின் மானச பூஜையை விலக்கப்போவதாக புலத்தியரிடம் சொல்கிறார்.  விஷ்ணு சுவாதிஷ்டான சக்கரத்தின் அதிபதி.  இந்த சக்கரம் நீர் தத்துவத்தைக் குறிக்கிறது.  அதனால் அகத்தியர் வாமி என்று குண்டலினி சக்தியை அழைத்து அந்த சொல்லை வாவி என்பதுடன் செர்ந்திசையச் செய்கிறார்.  

No comments:

Post a Comment