Sunday, 4 May 2014

205. They consider other lives as their own...(வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்...)

Verse 205
காணப்பா எவ்வுயிரும் தன்  உயிரைப் போல
கரிசனங்கள் படுவார்கள் வதை காணார்கள்
பூணப்பா இக்குருவைக் கண்டாயானால்
பொற்பூவால் அர்ச்சித்துப் பூசை பண்ணு
தோணப்பா அவர் இடத்தில் தொண்டு செய்தால்
சுவர்க்க கைலாயமதில் தொண்டுக்கொக்கும்
ஊணப்பா வார்த்தை அவர் எடுத்தா.....

(இதனைத் தொடர்ந்து நான்கு பாடல்கள் ஓலைச்சுவடியில் இல்லை)

Translation
See son, they will consider all lives as their own
They cannot see others suffer
Son, If you see this guru,
Worship him with golden flowers
Consider son, that if you serve such a guru
It is like serving in the Kailayam
Focus Son, if they start speaking….

(rest of this verse and the following four verses are missing in the manuscript)

Commentary:
Agatthiyar praises the good guru in verse.  He says that this category of gurus will consider all lives as their own and will not tolerate to see any soul suffering.  One is reminded of Saint Ramalingar’s expression “vaadiya payiraikkandapothellaam veedinen’ in Tiruvarutpa where he says he swooned whenever he saw crops that were drooping, his heart panicked whenever he saw simpletons who could not satiate their hunger through begging for food and when he saw people suffering from diseases.  Worst of all he become emaciated whenever he sees those who, with dignity, starve without begging or seeking help from others.  This Tiruvarutpa verses captures the emotions that Agatthiyar says that a good guru possesses.  Agatthiyar further adds that when one sees such a guru one should worship him sincerely and service to him is like service to Lord Siva himself.


ஒரு நல்ல குருவைப் பற்றி இப்பாடலில் மேலும் தொடருகிறார் அகத்தியர்.  இத்தகைய குருக்கள் தன் உயிர் போல் பிற உயிர்களைக் கருதுவர்.  இது ராமலிங்க அடிகளாரின் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்னும் திருவருட்பா பாடலை நினைவுக்குக் கொண்டுவருகிறது.  அப்பாடலில் அடிகளார் நீரில்லாமல் துவளும் பயிரைக் கண்டால் தானும் துவளுவதாகவும் இரந்து பெற்ற உணவாலும் பசியடங்கா மக்களைக் கண்டபோதும் நோயால் துன்புறுபவர்களைக் கண்டபோதும் தமது உள்ளம் பதைத்தது என்றும் ஏழைகளாக இருந்தாலும் மானிகளாக வாழ முனைந்து இளைத்தவர்களைக் கண்டு தானும் இளைத்ததாகவும் கூறுகிறார்.  இத்தகைய மனப்பான்மையை உடைய குருக்களைக் கண்டால் அவரைப் பொன்னால் செய்த பூவால் அர்ச்சனை செய்யவேண்டும், அதாவது மிக உயர்ந்த பெருமையை அளிக்கவேண்டும் என்றும் அவருக்குச் செய்யும் தொண்டு மகேச்வரனுக்குச் செய்யும் தொண்டைப் போன்றது என்றும் அகத்தியர் கூறுகிறார். 

Saturday, 3 May 2014

204. Behavior of a true guru

Verse 204
குரு நடக்கை
நிசங்கன் என்றால் இக்குருத்தான் நிசங்கன் அப்பா
நீர் வெளுத்து நின்றதென்றால் பால்தான் என்பார்
பொசுங்கன் என்ற புருடன் பெண் வேடம் பூண்டால்
பெண் இவளே சத்தியம் நான் செய்வேன் என்பார்
அசுங்கன் என்ற ஆணையைப் பூனை சென்று
அடித்ததென்று திருடர்கள் வந்துரைத்தாரானால்
நிசங்கம் என்றே எண்ணி அவர் நன்றாய்க் கேட்பார்
நேசம் உள்ளோர் சாம்பவிபோல் மறந்தார் காணே

Translation:
                                                    Behavior of a guru

The truthful one, this guru is the embodiment of truth
Even if water remains white he will say it is milk
If bhujangan adorns a garb of a woman
He will swear that he is a lady
When some thieves say that
The elephant asungan was beaten by a cat
Believing that it is true he will hear sincerely
Those who have the love will forget like the sambhavi

Commentary:
This verse talks about a guru who is child-like, trustworthy without any guile.  He will belive what he sees as truth, what he hears as truth and forget all the evil, fallacies and remains with the innocence of a child.


குழந்தையுள்ளம் படைத்த ஒரு குருவைப் பற்றி உள்ளது இப்பாடல்.  இந்த குரு வெளுத்ததெல்லாம் பால் என்பார், எல்லா வார்த்தைகளும் உண்மை என்பார்.  தீயவற்றையும் பொய் புரட்டையும் மனதில் சேமித்து வைத்துக்கொள்ள மாட்டார்.  பொதுவாக மென்மையான தன்மையை உடையவராக இருப்பார்.

Friday, 2 May 2014

203. Only the smart can identify them!

Verse 203
காரப்பா வெகுநாளாய் காக்கக் காக்க
கவடகுரு ஆனதினால் வெகுநாள் செல்லும்
சேரப்பா சமயம் வந்தால் சொல்லுவார்கள்
திறமாகச் சொல்லிவிட்டால் எல்லாம் சொல்வார்
ஆரப்பா இவருடனே படுவார் என்று
அகல நீ போய்விட்டால் சனிபோச்சென்பார்
சீரப்பா இவர் கவடம் அறிவுள்ளோர்தான்
சிவசிவ நிசக்குரு சொல்லுவேனே

Translation:
Wait with focus patiently son,
As he is an artful guru it will take many days
Join him, he will tell when the right time comes
When they say efficiently they will tell everything
“Who will put up with him!” saying so
If you leave him and go away, he will say “good riddance”
Only the smart ones can recognize his guile
Siva siva!  I will tell you about a true guru.

Commentary:
Agatthiyar is talking about a nontraditional guru here.  They remain pretending to be worldly people.  One has to wait patiently as they slyly conceal their true identity.  When they decide to talk, they will reveal everything.  However, one has to remain patiently with them.  If one gets frustrated and leaves him seeing his antics then the guru will say “good riddance” and go their way.  Agatthiyar says that only smart people can identify such gurus.  He promises to talk about a true guru next.

We have heard of several siddhas who pretend to be beggars and mad men to drive away those who are not truly interested in knowing the Divine.  Their words are harsh, methods are torturous and one has to patiently wait with them until they decide the right time to confer the wisdom.  As they are roaming around in a false garb it is hard for anyone to recognize them.

இப்பாடலில் சாதாரண மக்களைப் போல தோற்றமளிக்கும் குருவைப் பற்றி அகத்தியர் கூறுகிறார்.  அவர்கள் உலகததோரைப்போலக் காட்சியளிப்பதால் மக்களை அவர்களை எளிதாகக் கண்டுணர்வது இல்லை.  அவர்களது வார்த்தைகள் கடுமையானவையாகவும் அவர்களது முறைகள் கொடுமையாகவும் இருப்பதால் மக்கள் யாரால் எவருடன் போராடமுடியும் என்று அகன்று விட்டால் அவர்கள் “விட்டது சனியன்” என்று கவலையற்று இருப்பார்கள்.  ஆனால் தகுதியானவர்கள் வந்தால் அவர்கள் பேசலாம் என்று முடிவு செய்தால் அனைத்து அறிவையும் அந்த சீடருக்கு புகட்டுவார்கள் என்று கூறும் அகத்தியர் அடுத்து உண்மையான குருவைப் பற்றிக் கூறுவதாக புலத்தியரிடம் சொல்கிறார்.

பல சித்தர்கள் பைத்தியக்காரனைப் போலவும் பிச்சைக்காரனைப் போலவும் தோற்றத்தைப் பூண்டு அரைகுறை விருப்பத்துடனும் விசுவாசத்துடனும் தன்னிடம் வருபவர்களை கடுமையான மொழியாலும் கொடுமையான செயல்களாலும் விரட்டியடிப்பதைப் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்கிறோம்.  இந்த சித்தர்களை அறிவுள்ளோரால்தான் கண்டுணர முடியும். 

202. Wait patiently!

Verse 202
புகலுவார் இன்னம் ஒன்று சொல்லுவார்கள்
பொருந்தூரூ கேட்டாக்கால் கோபம் செய்வார்
பகலுமே இரவாகக் கதைகள் சொல்வார்
பார்த்தூரூ காத்திருந்தால் பன்னிரெண்டாண்டும்
அகலமாய்க் காத்திருந்தால் பொருள்தான் சொல்வார்
அசதி சற்றும் நடந்தாயேல் அதுவும் போச்சே
சகலமுமே அவர்க்கீய்ந்து பின்னும் காரு
தப்பி ஓர் பனிரண்டும் தள்ளிக் காரே

Translation:
They will say it and more
If questioned they will become angry
They will tells stories night and day
If waited patiently for twelve years
If waited all throughout they will talk about the entity
If you show a little fatigue you will lose that also
Offering him everything wait
Wait for the twelve years with focus.

Commentary:
This guru will wait for the right time to reveal the truth.  He will say so many things that will seem like stories.  He will do so night and day.  One has to wait patiently with him for twelve years offering everything and without fatigue.


இந்த குருவுடன் ஒரு சீடன் பொறுமையாக அசதியில்லாமல் அனைத்தையும் அவருக்கு அர்ப்பணித்துவிட்டு காத்திருக்கவேண்டும்.  நீண்ட கதைகளைச் சொல்லும் இந்த குரு இடையில் புகுந்து கேள்வி கேட்டால் கோபமடைவார்.  பொறுமையாகக் காத்திருப்பதைத் தவிர ஒருவரால் செய்யக்கூடியது எதுவுமில்லை.

201. A guru who will process you as if being cooked in a furnace

Verse 201
ஆச்சப்பா இன்னம் ஒரு குருவைக் கேளு
அடங்காத வேடமொடு உலகோர் போலும்
பேச்சப்பா மிகநயமாகப் பேசுவார்கள்
பேச்சுவாய் குத்தமிட்டுப் போம் என்பார்கள்
காய்ச்சுவார் ஓர் முகத்தில் சூளைத் தீபோல்
கலக்குவார் ஆனை குளம் கலக்கினாப் போல்
பேச்சப்பா அரை விசேஷம் முன்னே சொல்வார்
போட்டுவிட்டு நேர்மை இனி புகலுவாரே

Translation:
Alright Son, hear about another guru
 Uncontrollable, in the garb of the wordly
They will speak very pleasantly
Any mouth that blames them will faulted
They will burn (others) like the fire in the furnace
They will stir like the elephant stirring the pond
They will speak of that which is half important first
Leaving it they will speak the truth later

Commentary:
Agatthiyar is continuing about another guru who seems to be embodiment of anger.  He looks like a common person engaged in worldly life.  He will speak very pleasantly.  However, he will have the anger like the fire burning in the furnace.  This anger may be to weed out the evil qualities of the disciple.  “He will stir like the elephant stirs the pond” may mean that he will turn everything that all the crud, evil qualities, will be routed out of their evil corners.  He will generaly speak not-so-important things but when the time comes they will reveal the truth.


அகத்தியர் இப்பாடலில் மற்றொரு குருவைப் பற்றிக்கூறுகிறார்.  சாதாரண உலக மக்களைப் போலத் தோற்றமளிக்கும் இந்த குரு இனிமையாகப் பேசுவார், ஒருவராலும் அவரைக் குத்தம் சொல்ல முடியாது.  ஆனால் அவரது கோபமோ சூளையைப் போல தகிக்கும்.  சூளையில் உள்ள நெருப்பு மெதுவாக எரிந்து மண் கலவையை செங்கல்லாக மாற்றுகிறது.  இதேபோல் இவர்களது கோபம் நிதானமாக சீடனிடம் உள்ள தீய குணங்களை நல்லவையாக மாற்றுகிறது. அவர் யானை குளத்தைக் கலக்குவதைப் போல கலக்கி சீடனுள் இருக்கும் எல்லா தீய குணங்களையும் இடம்பெயரச் செய்து அவற்றை வெளியேற்றுவார்.  பெரும்பாலும் சாதாரணமாகப் பேசும் அவர்கள் சமயம் வரும்போது உண்மையை உரைப்பார்.

Thursday, 1 May 2014

200. Agatthiyar is telling us all the details that he learned from the four-faced one

Verse 200
காட்டுவார் இந்தமுறை கவடற்றேதான்
கடினமிகப் பட்டாலும் தோஷம் இல்லை
நாட்டுவார் இந்தமுறை ஞான கற்பம்
நான்முகத்தோன் உரைத்தபடி வகுத்தேன் அப்பா
காட்டிலே இருப்பார்கள் உலகத்தோடே
கலந்திருப்பார் இவர் சேவை கடினம் அப்பா
கோட்டிலே கோட்டி என்று போய்விடாதே
கொடுங்கோவம் உள்ளிடத்தே குருஉண்டாச்சே

Translation:
He will show this method without any conceit
They will establish the jnana karpam in this fashion
I classified it as the four-faced one told me
They will remain in forest or merged
Within the worldly life. Serving them is very difficult, son,
Do not go away thinking he is the worst of the worse
Where there is anger there is the guru.

Commentary:
Agatthiar says that the guru with extreme qualities will reveal the wisdom and the rules for karpam in this fashion.  He says that he is revealing all these as he heard from the four-faced one.   Usually four-faced person is Brahma.    Agatthiyar advises that even though serving such a guru is very difficult one should not leave him and go away thinking badly of him.  He says that where there is anger there is the grace of the guru also.


அதீத குணமுள்ள குரு இவ்வாறு ஞானத்தையும் கற்பவிதியையும் அளிப்பார் என்று கூறும் அகத்தியர் இந்த குருவுக்கு சேவை புரிவது மிகவும் கடினம், ஆனாலும் ஒருவர் அவரைப் பற்றி மட்டமாக எண்ணி அகன்றுவிடக்கூடாது ஏனென்னில் கோபம் உள்ள இடத்தில்தான் குருவும் உள்ளார் என்கிறார்.  தான் கூறிய இந்த கருத்துக்கள் அனைத்தையும் தனக்கு நான்முகன் கூறினான் என்கிறார்.  நான்முகன் என்பது பொதுவாக பிரம்மாவைக் குறிக்கும்.  

199. Panch deeksha, dasa diksha, ashta karma- what are these?

Verse 199
 க்ஷணத்திலே வாலை மூன்றெழுத்தும் சொல்வார்
க்ஷணத்திலே பஞ்சகண தீக்ஷை சொல்வார்
க்ஷணத்திலே தசதீக்ஷை குறித்துச் சொல்வார்
க்ஷணத்திலே இவ்வாலை எடுத்தும் சொல்வார்
க்ஷணத்திலே கர்மம் எட்டும் ஆடச் சொல்வார்
க்ஷணத்திலே கற்பவிதி தேற்றிச் சொல்வார்
க்ஷணத்திலே மனம் தேற்றிப் பத்தியில் சேர்ப்பார்
க்ஷணத்திலே சின்மயத்தைக் காட்டுவாரே

Translation:
In an instant he will reveal vaalai’s (kundalini’s) three letters
In an instant he will reveal the pancha gana deeksha 
In an instant he will reveal the dasa diksha (diksha of the ten)
In an instant he will reveal the vaalai (kundalini)
In an instant he will make the eight karmas dance
In an instant he will explain the karpavidhi
In an instant he will pacify you and join you in the group (in devotion)
In an instant he will show the embodiment of consciousness (chinmayam)

Commentary:
This verse lists the wisdom that a guru with extreme qualities confer upon his disciple in an instant.  Vaalai is another name for Kundalini Shakti who is referred to as a maiden.  The three letters of vaalai are ‘aim, kleem and sau’. 

Pancha gana deeksha is teaching the method to overcome the influence of the five elements.   This also refers to the five chakras, muladhara, svadhistanan, manipuraka, anahata and vishuddhi cakra.  They represent various principles including the five elements.  It may also refer to the five deekshas that will take a disciple through the five cakras the manas cakra, the bindhu cakra, mahanada cakra, nirvana cakra and the guru cakra that lie between the ajna cakra and the sahasrara.  This is part of the ‘yoga of the nape’ or the pidari yogam that Agatthiyar has spoke about before.  Kuruvur Siddhar gives another explanation for the this.   He says that the three letters of the vaalai, the two letters of a and u are the five that entered the world and the singlet, jiva took shape.

The dasa deeksha means ‘ten deeksha’.  This term may also be referring to two types of deekshas.  In his Agatthiyar poorna sutram, Agatthiyar talks about Siva deeksha and Sakti deeksha.  These are eleven types of mantras that are chanted sequentially, after initiation, one year each and the eleventh one in Siva deeksha is silence.  Agatthiyar may be referring to this deeksha here or to another deeksha that Karuvoor Siddhar describes as the dasa deeksha he obtained from Agatthiyar.  In his work, dasa deeksha Karuvur Siddha tells us that dasa deeksha is intiation into the esoteric philosophy of ‘a and u’ which are written as 8 and 2 in Tamil and thus together form ten.  Briefly, a refers to the Divine in the unmanifested state, the universal cause and u refers to the Divine in the manifested state.  These two letters are referred to as Siva and Sakti.  Detailed explanation of this concept is beyond the scope of this commentary, one should learn it from a guru.  Karuvur Siddhas mentions that this is the dasa deeksha.  As Agatthiyar is talking about kundalini yogam here he may be referring to this concept as dasa deeksha.

Ashta karma or the eight types of actions or accomplishments are vasyam (bringing another under one’s control), mohanam (enchanting another), aakarshanam (attracting one towards self), sthambanam (paralyzing another), ucchaatanam (causing a person to quit his place), vidvesham (creating hatred between friends), bhedanam (causing discord) and maranam (causing death).

Karpa vidhi are the prescriptions for various preparations. ‘Patthi’ may mean ‘group of aspirants’ and also bhakti or devotion.  This devotion is not the traditional ritual based worship but true love for the Divine, the concept of ‘anbe sivam’.  This mental and emotional state is right to realize the Divine, the chinmayam or embodiment of wisdom.


இப்பாடலில் முன்கூறிய அதீத குரு  தனது சீடனுக்கு அருளும் பலன்களை அகத்தியர் கூறுகிறார்.  வாலை என்பது குண்டலினி சக்தியின் மற்றொரு பெயர்.  வாலைக்கான மூன்று அட்சரங்கள் ஐம் க்லீம் சௌம் என்பவை.

பஞ்ச தீட்சா என்ற தொடர் இருவிதமான தீட்சைகளைக் குறிக்கிறது.  பஞ்ச தீட்சா என்பது நமசிவாய தீட்சையைக் குறிக்கலாம்.  நமசிவய என்ற ஐந்து எழுத்துக்கள் மூலாதாரம் முதல் மேலே உள்ள ஐந்து சக்கரங்களின் பீஜ எழுத்துக்களாகும்.  இவை ஐம்பூதங்களையும் குறிக்கும்.  பஞ்ச தீக்ஷை என்பது ஆக்ஞா சக்கரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை உள்ள முறையே மனஸ் சக்கரம், பிந்து சக்கரம், மகாநாத சக்கரம், நிர்வாண சக்கரம் மற்றும் குரு சக்கரம் ஆகிய ஐந்து சக்கரங்களிலும் விழிப்புணர்வு பயணிக்க அளிக்கப்படும் தீட்சையாகவும் இருக்கலாம்.  கருவூர் சித்தர் வாழையின் மூன்று எழுத்துக்களும் அ உ என்னும் எழுத்துக்களுமே தீட்சைக்கான ஐந்து எழுத்துக்கள், அவையே உலகமாயின என்கிறார்.

தசதீட்சை என்பது ‘பத்து தீட்சை’ என்று பொருள்படும். இதுவும் இரண்டு விதமான தீட்சைகளைக் குறிக்கலாம்.  அகத்தியர் பூரண சூத்திரத்தில், அகத்தியர் சிவனுக்கும் சக்திக்குமான பதினொருவித தீட்சைகளைக் கூறி அவற்றில் பதினொன்றாவது மௌன தீட்சை என்கிறார்.  கருவூர் சித்தர் தனது தசதீட்சை என்னும் பாடல் தொகுப்பில் அ என்பது 8, உ என்பது 2.  ஆக மொத்தம் பத்து அதாவது தசதீட்சை என்பது அ, உ பற்றிய தீட்சையாகும்.  இதனைப் பற்றிய விவரங்களை ஒருவர் குருவிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். 
      
அஷ்ட கர்மா என்பது எட்டுவிதமான செயல்கள்.  அவை வசியம் (பிறரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது), மோகனம் (பிறரை மயங்கச் செய்வது) ஸ்தம்பனம் (ஒருவரை அசையமுடியாமல் செய்வது) ஆகர்ஷணம் (ஒருவரைத் தன்னை நோக்கி இழுப்பது), உச்சாடனம் (எவரையும் நிலைகுலையச் செய்து அவ்விடத்தை விட்டு ஓடச் செய்வது), வித்வேஷணம் (நண்பர்களுக்குள் பகைமையைத் தோற்றுவிப்பது) பேதனம் (வேறுபாட்டை ஏற்படுத்துவது) மாரணம் (இறப்பை ஏற்படுத்துவது) என்ற எட்டுமாகும்.


கற்பவிதி என்பது பல்வேறு ரசாயனமுறைகள்.  பத்தி என்பது ஒரு குழு என்று பொருள்படும்.  அதை பக்தி என்பதன் திரிபு என்றும் கூறலாம்.  அகத்தியர் குறிப்பிடும் பக்தி சடங்குகளும் சம்பிரதாயங்களும் சார்ந்த பக்தி அல்ல, அது ஊன் உருகி உயிர் கலக்கும் அன்பு.  இதையே திருமூலர் அன்பே சிவம் என்றார்.  இந்த மனநிலையைப் பெற்றால் ஒருவர் சின்மயத்தை, விழிப்புணர்வின் உருவைப் பார்க்கலாம் என்கிறார் அகத்தியர்.