Verse
201
ஆச்சப்பா
இன்னம் ஒரு குருவைக் கேளு
அடங்காத வேடமொடு உலகோர் போலும்
பேச்சப்பா
மிகநயமாகப் பேசுவார்கள்
பேச்சுவாய் குத்தமிட்டுப் போம் என்பார்கள்
காய்ச்சுவார்
ஓர் முகத்தில் சூளைத் தீபோல்
கலக்குவார் ஆனை குளம் கலக்கினாப் போல்
பேச்சப்பா
அரை விசேஷம் முன்னே சொல்வார்
போட்டுவிட்டு நேர்மை இனி புகலுவாரே
Translation:
Alright Son, hear about another
guru
Uncontrollable, in the garb of the wordly
They will speak very pleasantly
Any mouth that blames them will faulted
They will burn (others) like the
fire in the furnace
They will stir like the elephant
stirring the pond
They will speak of that which is
half important first
Leaving it they will speak the
truth later
Commentary:
Agatthiyar is continuing about
another guru who seems to be embodiment of anger. He looks like a common person engaged in
worldly life. He will speak very
pleasantly. However, he will have the
anger like the fire burning in the furnace.
This anger may be to weed out the evil qualities of the disciple. “He will stir like the elephant stirs the
pond” may mean that he will turn everything that all the crud, evil qualities,
will be routed out of their evil corners.
He will generaly speak not-so-important things but when the time comes
they will reveal the truth.
அகத்தியர்
இப்பாடலில் மற்றொரு குருவைப் பற்றிக்கூறுகிறார்.
சாதாரண உலக மக்களைப் போலத் தோற்றமளிக்கும் இந்த குரு இனிமையாகப் பேசுவார்,
ஒருவராலும் அவரைக் குத்தம் சொல்ல முடியாது.
ஆனால் அவரது கோபமோ சூளையைப் போல தகிக்கும். சூளையில் உள்ள நெருப்பு மெதுவாக எரிந்து மண்
கலவையை செங்கல்லாக மாற்றுகிறது. இதேபோல்
இவர்களது கோபம் நிதானமாக சீடனிடம் உள்ள தீய குணங்களை நல்லவையாக மாற்றுகிறது. அவர்
யானை குளத்தைக் கலக்குவதைப் போல கலக்கி சீடனுள் இருக்கும் எல்லா தீய குணங்களையும்
இடம்பெயரச் செய்து அவற்றை வெளியேற்றுவார்.
பெரும்பாலும் சாதாரணமாகப் பேசும் அவர்கள் சமயம் வரும்போது உண்மையை
உரைப்பார்.
No comments:
Post a Comment