Tuesday, 13 May 2014

223. The concept of Muppaazh

Verse 223
கேளும் என்றான் மார்க்கண்டன் சிவன்தான் அப்போ
கிருபையுடன் இவ்வளவும் அறிவை யோடா
ஆளுகின்ற ஈசனும் நான் அறியோம் இந்த
அருமைதனை நீ அறிந்தே அருமைப் பிள்ளாய்
கோளு கண்டு மாயோனே சொல்வீர் என்றார்
குறிஏது நீ அறிந்து வாரும் ஏது
பாளுகின்ற முப்பாடும் தாண்டி நின்ற
பரஞான சின்மயமின் பகிர்ந்திட்டீரே

Translation:
Markandeyan said, “Listen Sir."  Then Siva
Said with mercy, “Do you know all these son!
Even I, the ruling Isa, do not know this.
You knew this greatness! dear son,
Seeing the signs Mayon (Vishnu) you tell.”
“See the signs, tell who knows about this
The Parajnana chinamaya who remains
Beyond the triple paazh please explain.”

Commentary:
Siva, lovingly, praises Markandeya for his knowledge about the dissolution and bids Vishnu or Mayon, the lord of Maya, to tell him in detail about it.   Siva asks Vishnu to tell the signs and scenes during the deluge, about those who have witnessed it and have knowledge about it while praising him by addressing him as the Supreme wisdom, the embodiment of consciousness who remains beyond the triple paazh.  The term paazh needs further elaboration here. 

This term is found in several Siddha songs.  It is generally interpreted as supreme space.  However, Dr. T.N. Ganapathy interprets it differently, in fact more specifically, by quoting Bhogar’s verses and Tirumular’s verses on this topic. (our idea differs slightly from his conclusions)

In jnanasaaram 100 Bhogar says the following:
"In the bodham of aam the nirgunam paazh, Within that is the space of light which is paazh,
In the effulgent paazh of Om the outer paazh occurs, Becoming the param for that, within the param, Becoming the I, the Sivam.  Becoming Sakti,Within that Sivam.  Becoming bindu within that Sakti, Within the bindu of nada becoming the nada, The nada is interested in Sadasiva, listen to this."
This verse seems to explain creation.  The outermost paazh seems to be the consciousness which is attribute-free.  Within this paazh is the space of effulgence.  Siddha verses that eulogise the Divine as ‘light’ may be referring to this space which is within the nirguna state.  Within the space of light is the space of creation.  Manifestation occurs in this space.  In this space remains para.  The Divine is said to be in the three states, formless(apara), in the formless-form (paraapara), and with form (para).  From this description of the three paazh or spaces we can guess that the nirguna paazh stands for the apara form, the space of effulgence indicates the paraapara and the creative space the para form.  This seems to be in line with Bhogar’s philosophy as he says the parai remains within the third paazh.  From para occurs the Sivam, the state of I-consciousness.  This consciousness leads to the vimarsha or the sakti. Following the sakti there is the seed of primordial sound from which sound is born.  From this sound the first manifestation, the Sadasiva state.

In his upadesa jnanam 156 verse 124 Bhogar explains the attainments of a yogi who crosses these three paazh.  The one who crosses the first and innermost paazh will be an expert in vaada.  This means that he will be an expert in transforming the body made of the five elements. He says  that the first paazh contains elements and their qualities.  When a yogin crosses this paazh he transforms his material body into oli deham or body of light.  When a yogi crosses the next paazh, that of light, he will be an expert of the sixty four siddhis.  When one transcends the third paazh one will know the point from which the vital breath or vaasi emerged.  Prana is not mere air that comes in and goes out.  Prana is the life force that comes in with the breath and goes out.  Hence, Siddhas devised methods to retain this life force within the body, the loss of which would lead to deterioration of the body and the eventual death.  Experts who have crossed the three paazh are called Jiva muktas.  They have gone beyond the control of time, space and causation.  Their will is the will of the Divine. 

Tirumular has dedicated an entire section in the eighth Tantra for the concept of muppaazh.  Some of the verses that explain this concept are 2483, 2825, 2834, 2495, 2496)
(Dr.T.N.Ganapathy Amman Darsanam Tamil edition June and July 2012).  In the verse 2495 he explains the three spaces or paazh.  The first one is that of the seven effects, the space of maya.  They are the five organs of action, organs of knowledge, elements, their subtle qualities, triple qualities of sattva, rajas and tamas, the the modifications of the mind and five vital airs.  This is the space of manifested world.  The next space is the bodha paazh or the cause of the previous maya paazh.  This is also seven in number.  They are Siva, Sakti, iccha (niyathi), kriya (kala), jnana (vidya), ananda (raaga), chit sakti (kaala).  These are the causes of the maintainance of the universe.  The third is the paazh of upasantha or quiescence that is beyond the cause and effects, the previous two spaces.

 In the verse 2496 he says that the maya paazh represents the Jiva, the vyoma paazh is the paran or the cause for the Jiva and in the third paazh, the upasantha paazh, the Jiva going back to Siva Sakti or laya and loses its limited nature.  He adds that the terminal state is the pure form where the word (manifested universe) ends. This is line with Yoga vasista’s three prakarana- the srushti, sthithi and upasantha prakarana.  Thus the muppaazh seems to be the spaces of creation, sustenance and dissolution.  Tirumular says that if one is able to hold on to the triple paazh without any attachment, to rid oneself of the triple faults of aanavam, karma and maya, then one would become sat chith ananda or attain the turiya svaroopa. 

சிவன் அன்புடன் மார்க்கண்டேயரை, அவருக்கு எவ்வளவு தெரிகிறது என்று ஆச்சரியப்படுபவராக, தனக்கு அவையெல்லாம் தெரியாதே என்று ஒரு தந்தை தனது குழந்தையிடம் அதை உயர்த்திக் கூறுவதைப் போல கூறி பாராட்டுகிறார்.  பிறகு அவர் மாயோனை, விஷ்ணுவை நோக்கி, “உனக்கு இந்த விஷயங்களுக்கான குறிகளும் அவற்றை அறிந்தவர் யார் என்பது தெரிவதால, முப்பாழையும் கடந்த பரஞான சின்மயமாக இருக்கும் நீ இவரை விளக்கவேண்டும்” என்று கூறுகிறார்.
இப்பாடலில் சித்தர்களில் பெரும்பான்மையானோர் பாடிய முப்பாழ் என்ற ஒரு முக்கியமான சொல் தோன்றுகிறது.  இந்த சொல்லுக்கு பொதுவாக வெட்டவெளி அல்லது ஆகாயம் என்று பொருள் கூறுவர்.  ஆனால் திருமூலரின் திருமந்திரன் மற்றும் போகரின் பாடல்களைக் காணும்போது இந்த சொல் ஒரு உட்பொருளை, சூட்சுமமான ஒரு தத்துவத்தை விளக்குகிறது என்று தி. த.ந. கணபதி அவர்கள் (அம்மன் தரிசனம் ஜூன், ஜூலை 2012) இதழ்களில் விளக்கியுள்ளார்.
போகரின் ஞான சாரம் 100 பாடல் 1ல் அவர், “ஆம் என்ற போதத்தின் நிர்குணப்பாழ், அதனுள் ஒளிப்பாழ், அதனுள் ஓம் என்னும் வெளிப்பாழ்.  அது பரையாகி, பரை சிவமாகி, சிவம் சத்தியாகி, சத்தி நாதத்தின் பிந்துவாகி பிறகு நாதமாகி அந்த நாதத்தின் நாட்டம் சதாசிவன்” என்று கூறுகிறார்.  இந்தப் பாடல் உலகம் எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்குவதாக உள்ளது.  இறைவனின் மூன்று நிலைகளான அருவ நிலை (அபரா), அருவ உருவ நிலை (பராபரா), உருவ நிலை (பரா) என்பதில் பரா அல்லது பரை என்பதே கண்ணால் காணும் உலகமாகிறது. 

தனது உபதேச ஞானம் பாடல் 124 ல் அவர் இந்த முப்பாழ்களையும் கடக்கும் ஒரு யோகி பெறும் சித்திகளைக் கூறுகிறார்.  முதல் பாழான மாயப்பாழைக் கடப்பவன் வாத சித்தியை அடைகிறான்.  வாத சித்தி என்பது சாதாரண தேகத்தை ஒளி தேகமாக மாற்றுவது.  இதற்கு ஒருவர் இயற்கையின் செயல்பாட்டை நன்கு உணர்ந்திருக்கவேண்டும்.  இந்த பாழை அடுத்த ஒளிப்பாழைக் கடக்கும்போது ஒருவர் அறுபத்து நான்கு சித்திகளையும் பெறுகிறார்.  இதற்கு இயற்கையைக் கட்டுப்படுத்தும் சக்திகளைப் பற்றிய அறிவு தேவை, இதையே போதப்பாழ் என்கிறார் அவர்.  இதனை அடுத்த பாழ் அதனைக் கடக்கும் ஒருவருக்கு எங்கிருந்து பிராணன் தோன்றுகிறது என்ற அறிவைக் கொடுக்கும் என்கிறார் போகர்.  பிராணம் என்பது வெறும் மூச்சுக் காற்று அல்ல. அது உயிர்ச்சக்தி, அந்த சக்தி மூச்சுடன் உடலினுள் வருகிறது போகிறது.  அதைத் தக்கவைத்துக்கொள்ளவே சித்தர்கள் பிராணாயாமப் பயிற்சிகளைப் பரிந்துரைக்கின்றனர்.  இந்த முப்பாழையும் கடக்கும் ஒருவருக்கு மரணமில்லை என்கிறார் போகர். இவர்களே ஜீவன் முக்தர்கள் எனப்படுபவர்.

திருமூலர் தனது திருமந்திரம் எட்டாம் தந்திரத்தில் ஒரு பகுதியை இந்த முப்பாழ் என்னும் தத்துவத்துக்காக ஒதுக்கியுள்ளார். பெரும்பான்மையான சித்தர் பாடல்களில் இந்த முப்பாழ் என்ற கருத்து தோன்றினாலும் பாடல்கள் 2483, 2825, 2834, 2495, 2496 லில் அவற்றை குறிப்பாகக் காணலாம்.   

பாடல் 2495 ல் முதலாவதான மாயப்பாழ் ஏழு வகையான காரியப் பாழ் (கர்ம, ஞான இந்திரியங்கள், பூதங்கள், அவற்றின் தன்மைகள், மூன்று குணங்களான சத்துவம், ரஜஸ், தமஸ், புருஷன் பிரகிருதி என்று உலகில் காணப்படுபவை), இதனை அடுத்த ஒளிப்பாழ் ஏழு காரணங்களால் (சிவன், சக்தி, இச்சா-நியதி, கிரியா-கலா, ஞான-வித்யா, ஆனந்த-ராகம் மற்றும் சித்-காலம் சக்திகள்) ஆனது.  மூன்றாவதான உபசாந்தப் பாழ் காரிய காரணங்களைக் கடந்தது என்று திருமூலர் கூறுகிறார்.


பாடல் 2496ல் மாயப்பாழ் ஜீவனையும் வ்யோமப் பாழ் அதன் காரணமான பரனையும் மூன்றாம் உபசாந்தப் பாழ் ஜீவன், சிவசக்திகளை அடைந்து எல்லையற்ற நிலையை அடைவது என்றும் அவர் இந்த முப்பாழை விளக்குகிறார்.  மேலும் இந்த உபசாந்தப்பாழின் எல்லை தூய சொரூபம், அங்கு சொல் (கண்ணால் காணும் உலகம்) முடிகிறது என்கிறார் அவர். இது யோகவாசிஷ்டத்தில் உள்ள ஸ்ருஷ்டி, ஸ்திதி உபசாந்தம் அல்லது படைப்பு, காப்பு, லயம் என்னும் மூன்று பிரகரணனங்களை ஒத்திருக்கிறது.  அதாவது மாயப் பாழ் காப்பையும் போதப் பாழ் படைப்பையும் உபசாந்தப் பாழ் லயத்தையும் குறிப்பதைப் போல உள்ளது.  இந்த முப்பாழ்களையும் கடந்தவர் மும்மலங்களையும் கடக்கின்றனர், சத் சித் ஆனந்த ரூபமான துரிய நிலையை அடைகின்றனர் என்கிறார் திருமூலர். 

No comments:

Post a Comment