Verse
220
எங்கே
என்ற மார்க்கண்டன் எடுத்துச் சொல்லி
என்சொல்வார்
ஏகவெளிச் சிவனை நோக்கி
கங்கைதனைப்
பூண்டோனே கடவுளோனே
காரணமே
பூரணமே கண்ணே மின்னே
சங்கை
இனி ஏதறியேன் மகுடச்சோதி
சந்திரனைப்
பூண்டிருந்து தவம் பெற்றோனே
மங்கை
இடப் பாகம் வைத்த மகுடத்தோனே
மகாமுனிகள்
ரிஷிகள் சித்தர் அறிவார் தானே.
Translation:
When
Markandan said so
He said
to Siva, “The Singleton! The Supreme space!
The
one adorned the Ganga! The Lord!
The
Universal Cause, the Fully complete, the beloved, the lightning,
I do not have any
doubt, the flame in the crown,
The austere one who
adorned the moon,
The one who kept the
lady on the left (ida), the crown Lord,
Supreme saints,
rishis and Siddhas will know, isn’t it.”
Commentary:
The conversation in
this verses continues in the next. We
see in the next verse that the person who is speaking is Vishnu. Following Markandeya’s request Vishnu eulogises
Isa as follows:
The Singleton- the
ekam means the only one or the first one.
Tamil Siddhas also use the term, tani oru mudhalvan. Tirumular calls the Lord “the great aloneness”
in his verse 2450 of Tirumandiram. Tani-
because there is none in this world other than him, everything is his form, oru-
singleton, the universal cause.
The supreme space-
this space is not the conventional space we see around us. The Lord is addressed as Supreme space because
the space lacks any specific identity, it is all pervading and all
encompassing. The Divine is also present
as everything and everywhere, it is nirguna or one who cannot be characterized to
have a specific quality. The term ‘nirguna’
does not mean it is free of qualities.
It means it encompasses all the qualities such that one cannot say that
it has this quality but not the other.
River Ganga on Siva’s
head represents the descending of grace. The story of Bhagiratha, that Siva
tied the Ganga’s raging waters in his hair and let down only a small portion of
it means the disciple is generally not able to handle the force of the Divine
grace in its entirety. A guru regulates it and gives the right amount to the
disciple. Here Siva is the Adiguru.
The universal cause
and being fully complete- The world emerged in its current form because of
Divine will, that it will become many.
The Divine is fully complete, it lacks nothing.
The flame in the
crown- the Divine is the supreme consciousness that is seen as a flame at the
sahasrar.
The one who adorns
the moon- moon represents the mind. Adorning
the moon means one’s mind is under one’s control. The waxing and waning of the
moon represents time. By adorning moon
Siva shows that he is beyond time.
Having the lady on
the left- this refers to Ardha nareeswara, Siva’s form with Sakti as a part of
his body. There is also another
interpretation for the term ‘ida bhaagam’.
Ida means left as well as the nadi ida.
When the omkara manifests as a, u and ma, a is identified with sushumna,
u with ida and ma with pingala. U indicated Sakti and a indicates Siva. Thus,
the akara has ukara at the ida nadi. The
Sanskrit work Ananda nandini has the following verse: “you, mother in the form
of ida nadi is the ukara”.
Vishnu remarks that
great souls know about these.
இப்பாடலின்
கருத்துக்கள் அடுத்த பாடலிலும் தொடருகிறது.
இங்கு பேசுபவர் விஷ்ணு என்று நாம் அடுத்த பாடலிலிருந்து
தெரிந்துகொள்கிறோம். விஷ்ணு ஈசனைக் கீழ்க்கண்டவாறு
துதிக்கிறார்.
ஏகம்-
இந்த சொல், ஒன்று என்றும் முதல் என்றும் பொருள்படும். பல சித்தர்கள் தனி ஒரு முதல்வன் என்று இறைவனை
அழைக்கின்றனர். இவ்வுலகம் இறைவனின்
வெளிப்பாடு, இதற்கும் இறைவனுக்கும் வித்தியாசம் இல்லை. அதனால் இங்கு அவனன்றி வேறு எதுவும் இல்லை, அவன்
ஒருவனே இருக்கிறார். அவனே முதல், ஆதி
காரணம்.
பரவெளி-
இங்கு வெளி என்பது நாம் கண்ணால் காணும் ஆகாயம் அல்ல. வெளி என்பதற்கு ஒரு குணம் ஒரு பெயர்
இல்லை. அது எல்லா இடத்திலும்
எக்காலத்திலும் உள்ளது. இறைவனும் அவ்வாறு
இந்த குணத்தை மட்டும் உடையவன் என்று சுட்டிக் காட்ட முடியாதவனாக எங்கும் எப்பொழுதும்
இருப்பவனாகத் திகழ்கிறான். அதனால்தான்
இறைவனை சித்தர்கள் வெளி என்று அழைக்கின்றனர்.
கங்கையை
அணிந்தவன்- விண்ணிலிருந்து கங்கை
இறங்குவது என்பது இறைவனின் அருள் ஜீவாத்மாவை நோக்கி இறங்குவதைக் குறிக்கிறது. கங்கையின் வெள்ளப்போக்கைத் தன் தலையில் தாங்கி
உலகுக்கு சிவபெருமான் அளிக்கிறார் என்பது பெருவெள்ளமாக இறங்கும் இறையருளை
சீடர்களால் தாங்கமுடியாததால் ஒரு குரு அதைத் தான் தாங்கி அவனுக்குத் தகுந்த அளவு
அளிக்கிறார் என்பதைக் குறிக்கிறது.
அதனால்தான் சிவன் ஆதிகுரு எனப்படுகிறார்.
காரணன்
பூரணன்- இவ்வுலகம் தோன்றியதற்குக் காரணம்,
“நான் பலவாகக் கடவேன்” என்ற இறைவனின் இச்சையே.
அதனால் அவனே ஆதி காரணம். அவனுக்கு
எவ்வித தேவையுமில்லை அவனிடம் எவ்வித குறையும் இல்லை.
மகுட
ஜோதி- இறைவனின் உருவ அருவ நிலையைக் குறிப்பது ஜோதி. விழிப்புணர்வு சஹஸ்ராரத்தை அடையும்போது ஜோதி
தரிசனம் ஏற்படுகிறது.
பிறையை
அணிந்தவன்- சந்திரன் என்பது மனத்தைக் குறிக்கும்.
சந்திரனை அணிந்திருப்பது என்பது மனத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதைக்
குறிக்கிறது. சந்திரன் வளர்தல் தேய்தலை
உடையது. சந்திரனை அணிந்திருப்பது இந்த
காலத்தின் கட்டுப்பாட்டைக் கடந்திருப்பதைக் குறிக்கும்,
மங்கை
இட பாகத்தன்- இது இறைவனின் அர்த்த
நாரீஸ்வர உருவத்தைக் குறிக்கிறது. இடை
என்பது உடலில் இட பாகத்தையும் இடா நாடியையும் குறிக்கிறது. ஓம்காரம் அ உ ம என்று பிரியும்போது அ என்னும்
அகாரம், சுழுமுனையில் சிவனையும் உகாரம் என்னும் சக்தியை இடை நாடியிலும் ம என்னும்
மகாரத்தை பிங்கலை நாடியிலும் அடையாளப்படுதுகிறது.
ஆனந்த நந்தினி என்ற நூல், “தாயே நீ இடை நாடியில் இருக்கும் நீ உகாரமாக
இருக்கிறாய்” என்று கூறுகிறது.
மேற்கூறிய
கருத்துக்களை முனிவர்களும் சித்தர்களும் ரிஷிகளும் அறிவர் என்று விஷ்ணு
கூறுகிறார்.
No comments:
Post a Comment