Verse
244
இடப்பாகம்
இருந்தவளும் இவளே மூலம்
எல்லோரைஈன்றெடுத்த
திவளே மூலம்
துடக்காக
நின்றவளும் இவளே மூலம்
சூக்ஷம்
எல்லாம் கற்றுணர்ந்த துரைச்சி மூலம்
அடக்காக
அடக்கத்துக் கிவளே மூலம்
ஐவருக்கும்
குருமூலம் ஆதி மூலம்
கடைக்கோடி
கொம்புமேல் நின்ற மூலம்
கன்னி
அவள் சிறுவாலைக் கன்னி தானே
Translation:
She is the one who remained in the left side, in the ida. She is the origin/muladhara
The
one who birthed everyone is She, the origin/muladhara
The
one who remains as religious impurity is She, the origin/muladhara
The
Ladyship who is an expert of all the subtleties, origin/muladhara
The
one who has the mental poise is She, the origin/muladhara
The
gurumulam for the five, the Adi mulam (primal origin)
The
origin that remains on top of the stick, in the terminus, the muladhara
She,
the maiden, verily the young vaalai maiden.
Commentary:
Pujandar
joyously describes the lady he spoke about in the previous verse. He chooses words in an interesting
fashion. He calls her ‘mulam’ or
origin. This term also means ‘the muladhara’. Pujandar says that she is the young maiden,
vaalai who remains in the ida part. We
have already seen that this word means both the left side as well as the ida
nadi. This form of Siva is called Ardhanariswara where he is depicted as
sharing half his body with Sakti. This
imagery describes the union of the male and female principles into one
entity. It also indicates the separation
of the primary Divinity, Paramasiva, into Siva and Sakti, the consciousness and
bliss, the prakasha and vimarsha.
Pujandar calls her the mother who gave birth to the manifested world. This process is followed by religious
impurity or thudakku. This term is
commonly used in Srilanka to indicate the time that follows a birth or a death
in the family or coming of age/maturity when the person is not allowed to go to
temples or sacred sites. She is in this
state eternally as she constantly
gives
birth to new lives and is witnessing the death of lives that end their current birth. Siddhas have talked about this state of
impurity a lot. It is called ‘thoomai’
in Tamil. Sivavaakkiyar says
தூமை
தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான
பெண்ணிருக்க தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல
மூழ்கிவந்து அநேக வேதம் ஓதுறீர்
தூமை
திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே (49)
Translation:
Ye
poor souls who wither uttering “defilement, defilement”!
When
the pure lady/ the lady with religious impurity is remaining, where did defilement
go?
You
recite countless Vedas emerging from submersion, like a tortoise,
Defilement
came together and became the exalted gurus who advise.
The thoomai
in this verse is the thudakku that Pujandar/Agatthiyar is mentioning
here.
He says when the
lady with the religious impurity is present, eternally, where did the
defilement go, is it correct to denounce something as religious impurity. The thoomai came together and became the life
forms, the gurus, the words etc.
Pujandar says that
Vaalai is the origin and guru of the five- the five elements, qualities, five
states of consciousness. She is the Adi,
primal one, mulam- origin, cause of everything.
She is the one who remains in the sushumna nadi, the stick that touches
both the termini, the muladhara and the sahasrara. She is the little maiden, the vaalai.
முந்தைய
பாடலில் கூறிய மாதுவைப் பற்றி இப்பாடலில் விளக்குகிறார் புஜண்டர். அவர் தமது வார்த்தைகளை மிக விசேஷமாகத்
தேர்ந்தெடுத்துள்ளார். ஒவ்வொரு வரியும்
முலம் என்று முடிகிறது. அது அனைத்துக்கும்
மூலம் அவள் என்று குறிப்பதுடன் மூலாதாரத்தில் அவள் இருக்கிறாள் என்றும்
குறிக்கிறார். அவள் இடப்பாகத்தில்
இருக்கிறாள் என்கிறார் புஜண்டர்.
இடப்பாகம் என்பது உடலில் இடது பகுதி மற்றும் இடா நாடி என்றும்
பொருள்படும். சிவனின் அர்த்தநாரி
உருவத்தைப் பற்றி நாம் முன்பே பார்த்தோம். அது ஆண்மையும் பெண்மையும் ஒன்று சேர்ந்திருக்கும்
நிலையைக் குறிக்கும், அல்லது ஒருமை நிலையான பரமசிவம், சிவமும் சக்தியுமாக, பிரகாச
விமர்ச நிலையாக சித் ஆனந்த நிலையாகப் பிரியும் நிலையைக் குறிக்கும். புஜண்டர் வாலையை அனைத்து உயிர்களையும்
பெற்றெடுத்த தாய் என்கிறார். அதனை அடுத்து
வருவது துடக்கு அல்லது தீட்டு. துடக்கு
என்பது ஒரு பிறப்போ இறப்போ வயதுக்கு வந்தாலோ ஏற்படுவது. உலகத்தாய் எல்லா உயிர்களையும் தொடர்ந்து
தோற்றுவிப்பதால் நிரத்தரமாக துடக்குடன் இருப்பவள். இதை சிவவாக்கியர்
தூமை
தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான
பெண்ணிருக்க தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல
மூழ்கிவந்து அநேக வேதம் ஓதுறீர்
தூமை
திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே (49)
இப்பாடலில்
வரும் தூமை என்பது துடக்கு.
வாலை
அனைத்துக்கும் மூலம், ஐந்துக்கும் குரு- பஞ்சபூதங்கள், அவற்றின் தன்மாத்திரைகள்,
ஐந்து விழிப்புணர்வு நிலைகள் ஆக்கியவற்றிற்கு அவளே மூலம். அவள் கொம்பான சுழுமுனை நாடியில் கடைக்கோடியான
மூலாதாரத்தில் இருக்கிறாள்.
No comments:
Post a Comment