Tuesday 20 May 2014

232. Manifested world, Siva and Sakti cease to exist and become...

Verse 232
புசண்டர் எனக்குச் சொல்லியது
உரைஎன்றீர் உந்தனுக்குப் பக்தி போச்சு
உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு
பரை என்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்
பரமசிவன் தான்என்றும் பேறும் பெற்றீர்
இரைஎன்றால் வாய்திறந்து பக்ஷி போல
எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள்
நரை என்ற வாரதனைச் சொன்னே னானால்
நிசம் கொள்ளா தந்திரங்கம் நிசம் கொள்ளாதே

Translation:
You who told me to talk, lost your faith
For those who are associated with you, the mind got lost
If you say talk, you will not remain seeking the Divine (parai)
You got the glory, as Paramasiva
Like the bird that opened its mouth for food
Everyone died as is
If I tell you the manner of aging
This assembly will not accept the truth, not become true

Commentary:
 Pujandar tells Siva that at the end of the eon he lost faith (or buddhi?)  and so associatd with Siva lost their mind.  This may refer to the two modifications, mind and buddhi.  Pujandar says that the parai will not be sought.  Parai is the Divine with the form, it is the Divine in the form of the manifested world.  This is an important point.  The world comes into existence it makes an impression on the conscience.  Kashmir Saivam says that anything that does not form an impression on the conscience does not exist.  Pujandar tells in this verse that the modification of the mind that contribute to conscience namely buddhi and manas cease to exist.  Thus the manifested world is not recognized, it is not sought.  Hence, Pujandar is saying that Parai will not be sought.  Siva then attains the state of Paramasiva or the action-free state, the state that preceds Siva and Sakti.  He says that every one died without a word, like a bird that opens its mouth for food.  The prana leaves their body and they fall down with their mouth open.  Pujandar remarks that if he tells the truth no one will accept it because it is hard to digest, not pleasant to hear.


புஜண்டர் சிவனிடம் அவர் யுகத்தின் முடிவில் பக்தியை இழந்துவிடுவார் என்கிறார், அது பக்தியா புத்தியா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது ஏனெனில் இதனை அடுத்து அவர் சிவனுடன், விழிப்புணர்வுடன் தொடர்பு கொண்டவர்கள் ஜீவன்கள் மதியை, புத்தியை இழந்துவிடுவார்கள் என்கிறார்.  இவ்விரு வரிகளும், ஜீவன்கள் மனம், புத்தி, அகங்காரம் என்ற விழிப்புணர்வைச் சார்ந்த மனதின் மாறுபாடுகளை இழந்துவிடுவர் என்று பொருள் படும்போலத் தோன்றுகிறது.  இவ்வுலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் விழிப்புணர்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலொழிய இருப்பைப் பெறுவதில்லை என்று கூறுகிறது.  பரை என்பது இறைவனின் உருவ நிலையைக் குறிக்கும்.  இவ்வுலகம் இறைவனின் உருவ நிலையின் வெளிப்பாடே. பிரளயத்தின்போது இந்த புலன்களால் காணப்படும் உலகம் இருப்பதில்லை, அதனால் ஒருவரும் பரை என்னும் உருவ நிலையில் இருப்பதில்லை.  இறைவனும் சிவன் சக்தி என்ற இருமை நிலையிலிருந்து பரமசிவன் என்ற ஒருமை நிலையை அடைகிறார். உயிர்கள் அனைத்தும் வாயைத் திறந்தபடி இறந்திருப்பார் என்கிறார் புஜண்டர்.  அவர்களது உடலிலிருந்து பிராணன் பிரிந்திருக்கும்.  இந்த உண்மையை தான் கூறினால் யாரும் கேட்க விரும்பமாட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment