Verse
218
கேளப்பா
ஈசன் ஓர் காலந்தன்னில்
கிருபையுடனே
சபையில் இருக்கும்போது
வாளப்பா
மால் அயன் தன் முகத்தை நோக்கி
வந்தவா
ரெவ்வகையோ சென்ற தேதோ
கோளப்பா
ஜெயகாலம் மால் அயன்தான் எங்கே
குருநம
சிவயம் எங்கே நீங்கள் எங்கே
ஆளப்பா
ஐவர்களும் ஒடுக்கம் எங்கே
அறிந்தெனக்கு
இந்த வகை உரை சொல்வீரே
Translation:
Listen
Son! Once when Isa,
with
his mercy, remained in the court,
free,
asked Maal and Brahma, looking at their face
What
is the way of emergence, the way of going away
Consider,
where are Maal and Brahma during the time of victory (dissolution)
Where
is Guru namacivaya, where are you?
The
‘five’ where do they abide?
Explain
this to me after knowing these through your knowledge.
Commentary:
Agatthiyar
is beginning to tell us an episode involving Isa, Brahma and Vishna. It seems, at one time when Isa was in his
court with Brahma and Vishnu he asked them to explain from their knowledge the
way of emergence and dissolution, the status of Brahma and Vishnu at the time
of dissolution, the position of Guru namacivaya or super conscious state and
the ‘fives’. The five can be any one or
all of the following: the five elements, their qualities, the organs of action
and knowledge, the five sheaths etc.
அகத்தியர்
இப்பாடலில் நமக்கு ஒரு கதையைச் சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் ஈசன் பிரம்மா விஷ்ணுவுடன் தனது
சபையில் இருக்கும்போது அவர்களிடம் சிருஷ்டி, லயம், அப்போது பிரம்மாவும் விஷ்ணுவும்
இருக்கும் இடம், குரு நமசிவய அல்லது விழிப்புணர்வு, ஐவர் ஆகியவைகள் இருக்கும் நிலை
ஆகியவற்றைத் தனக்கு அவர்களது அறிவுக்குத் தெரிந்த வரை விளக்குமாறு கேட்டார். ஐவர் என்பது பஞ்ச பூதங்கள், தன்மாத்திரைகள்,
கர்மேந்த்ரிய ஞானேந்திரியங்கள், பஞ்ச கோசங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக அல்லது
அனைத்துமாக இருக்கலாம்.
No comments:
Post a Comment