Wednesday, 28 May 2014

242. Creation Civayanama

Verse 242
பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே
பரம் நிற்கும் சுடர் வீசி இப்பால் கேளு
நிறத்திலே சுடரதனில் யகாரம் காணும்
நிறையான யகாரத்தில் வகாரம் காணும்
வரத்திலே வகாரத்தில் சிகாரம் காணும்
வரும்போலே சிகாரத்தில் மகாரம் காணும்
நரத்திலே மகாரம் அதில் நகாரம் காணும்
நன்றாகப் பூமி அப்போ பிறந்துதன்றே

Translation:
Within the Divine with form the mani will emerge, within the mani.
The divine will remain blowing its effulgence towards this side.  Listen
In the effulgence, the yakaara will appear
Within the fully complete yakaara the vakaara will appear
In the boon, the vakaara the cikaara will appear
Within the cikaara the makaara appears
In the Jiva, the makaara, the nakaara will appear
The earth emerged well then.

Commentary:
Once the Divine with the form appeared the jewel or the mani appeared. Mani is a very interesting word.  It means a jewel as well as time.  One can also interpret this to mean “the concept of time, one of the limitations, appeared”.   The divine remains within this mani spreading its effulgence in the manifested world.  Pujandar calls this world as ‘ippaal’ or this side as opposed to appal or the supreme space the unmanifested Absolute.  In this manifested space, all the principles appear sequentially in the order ya,va, ci, ma, na.  These five letters represent everything in the manifested world, the five elements, their qualities, five senses of action, five senses of knowledge, five states of consciousness, five sheaths or kosa, five faces of Siva.  Pujandar concludes the verse saying, "thus the earth was born" to indicate this idea.


உருவமுள்ள இறைமை, பரம் தோன்றியவுடன் அதிலிருந்து மணி பிறந்தது.  மணி என்பது பிந்து என்றும் காலம் என்றும் பொருள்படும்.  இவ்வாறு பரத்திலிருந்து நேரம் என்னும் ஒரு கஞ்சுகம் அல்லது விழிப்புணர்வைக் குறுக்கும் ஒரு தத்துவம் தோன்றியது என்றும் இதற்குப் பொருள் கூறலாம். பிரளயத்தைப் பற்றிக் கூறும்போது அனைத்தும் மணியுள் புகுந்தன என்பது அனைத்தும் காலதத்துவத்தைக் கடந்தன என்றும் பொருள்படும்.  இந்த மணியினுள் பரம் தனது சுடரை வீசியவாறு இருந்தது.  அந்த சுடரிலிருந்து உலகம் தோன்றியது என்பதைக் குறிக்க சுடரிலிருந்து ய,வ,சி, ம, நகாரம்  தோன்றின என்கிறார் அவர்.  நமசிவய என்பது லயத்தையும் சிவயநம என்பது உலகின் சிருஷ்டியையும் குறிக்கும்.  இந்த ஐந்தெழுத்துக்களும் பஞ்ச பூதங்கள், அவற்றின் குணங்கள், ஐந்து கர்மேந்திரியம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து கோசங்கள், ஐந்து விழிப்புணர்வு நிலைகள், சிவனின் ஐந்து முகங்கள் என்று உலகில் உள்ள அனைத்துமாக இருக்கின்றன.  இதைக் குறிக்க புஜண்டர் "இவ்வாறு பூமி தோன்றியது என்கிறார்.  ஒவ்வொரு எழுத்தும் முந்தைய எழுத்திலிருந்து தோன்றியது என்று குறித்து சிருஷ்டி கிரமத்தை அவர் விளக்குகிறார். 

No comments:

Post a Comment