Verse
233
கொள்ளாமல்
போறதுண்டோ மௌன யோகி
கோடியிலே
உனைப் போல ரிஷியைக் காணேன்
உள்ளாக
ரிஷி ஒருவர் இல்லா விட்டால்
உக
வார்த்தை ஆருரைப்பார் யாருங் காணேன்
விள்ளாமல்
தீராது முனிவரே கேள்
மெய்ஞ்ஞானம்
பரம் புகுந்து அருள் மெய்ஞ்ஞானி
தள்ளாமல்
முனி நாதர் எல்லோர் கேட்க
சாற்றிடீர்
முனி நாதா சாற்றிட்டீரே
Translation:
Will
one refrain from accepting it, you silent yogi!
I
have not seen a rishi like you even in a million
If
there is no rishi like you
Then
who will tell the truth? I do not see anyone else
It (the doubt) will not go away unless clarified,
so Muni! Listen
Entering
the Supreme that is true wisdom, you the truly wise, please grace us,
Without
out rejection so that everyone can hear
Please
elaborate muni the lord, please tell.
Commentary:
This
is an important verse which explains the name of this work. This verse, which is fashioned as a
conversation between Siva and Pujandar, tells us that Pujandar was revealing
the truth, the meijnanam about laya by remaining
in the state of meijnanam and realizing the truth. Thus, this work contains concepts that were
revealed while the Siddha was in the state of true wisdom.
Siva
tells Pujandar that Pujandar is the only one who could explain this great
experience, that process of laya or dissolution. He reiterates that he does not see anyone
else who could do this and unless it is explained in detail the doubts will not
get cleared. Siva requests Pujandar to
explain in detail, the dissolution.
இப்பாடல்
இந்த நூலின் பெயரை விளக்குகிறது.
புஜண்டருக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக இருக்கும்
இதில் புஜண்டரை மெய்ஞ்ஞான முனி என்று அழைக்கும் சிவபெருமான் அவரை மெய்ஞ்ஞான பரத்தில்
புகுந்து இந்த மெய்ஞ்ஞானத்தைக் கூறுமாறு கேட்கிறார். இதன் மூலம் இந்த நூலில் குறிப்பிடும்
கருத்துக்கள் ஒரு சித்தர் மெய்ஞ்ஞான நிலையில் இருந்தபோது கூறப்பட்டது என்று நமக்குத்
தெரிவிக்கப்படுகிறது.
இந்த
கருத்துக்களை புஜண்டரால் மட்டுமே விளக்க முடியும் என்று கூறும் சிவபெருமான் இந்த
விஷயத்தைப் பற்றிய சந்தேகம் விளக்கினாலன்றி தீராது என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment