Sunday 18 May 2014

230. How Pujandar came to the Rudra Sabha

Verse 230
வந்தேனே என்றுரைத்த வர்மத்தைக் கொண்டு
வசிட்டரும் வாய் உலர்ந்து காலும் பின்னி
இந்தேனே முனிநாதர் சரணம் காரும்
எழுந்து சிவன் சபை நாடி முனிவர் வந்தார்
மைந்தனே ஈன்றருளும் கடவுள் நாதர்
மாமுனிவன் வாயெடுக்கப் புசண்டர் சொல்வார்
சிந்தனே ஈஸ்வரனே வந்தேன் ஐயா
சிவ சிவா இன்னதென்று செப்பி டீரே 

Translation:
You said you will come, through the Varma
Vasishta with his mouth drying and legs twisting
Salute to you Muninatha!  Saranam! 
Muni got up and came to Siva sabha
When the Lord said, “Son!  Please grant it”
The great muni opens his mouth, Pujandar started his speech.
“Lord, the one in the mind (Siddha) the Isvara, I am here
Sivasivaa!  You tell me the topic.”

Commentary:
This verse is very interesting.  One wonders where the Rudra sabha was and how Pujandar went there.  Agathiyar leaves us a clue when he says Pujandar came to the Sabha through Varmam.  Varmam, though thought of only as a martial art today, is about special pressure points in the body that alter one’s state of consciousness.  We can safely think that when Pujandar says that he is going to the Rudra sabha he is referring to an altered state of consciousness through varmam.  The next lines adds credence to this theory as Agatthiyar says Vasishta almost swooned from this experience, his conversation with Pujandar. 
Besides many other fields Agatthiyar is considered the father of Varma kalai.  It was a medical system developed by the Siddhas where pressure points in the body are manipulated to cure various diseases.   
The conversation between Pujandar and Isa must be happening in this state of supra consciousness.

Besides the six cakras there are three knots or granthis, the brahma granthi above muladhara and svadhistana, the Vishnu granthi above manipurakam and anahatha and the Rudra granthi above vishuddhi and ajna.  When the yogi crosses the Rudra granthi he must be in the Rudra sabha and varmam seems to be helping in this process.

வசிஷ்டர் அழைத்து புஜண்டர் வருவதாகச் சொன்ன ருத்திர சபை எங்கே உள்ளது, எவ்வாறு அங்கே புஜண்டர் சென்றார் என்ற நமக்குள் எழும் கேள்விகளுக்கு அகத்தியர் ஒரு குறியை நமக்குத் தருகிறார்.  புஜண்டர் வர்மத்தினால் வருவேன் என்று கூறியதாக உரைக்கும் வசிஷ்டர் தனது வாய் உலர கால்கள் பின்ன புஜண்டரை வணங்கினார் என்று அகத்தியர் கூறுகிறார்.  வர்மம் என்பது தற்காலத்தில் ஒரு தற்காப்புக் கலையாகக் கருதப்பட்டாலும் சித்தர்கள் அதை ஒரு வைத்திய முறையாகவும் ஆன்மீக முறையாகவும் பயன்படுத்தினர்.  இந்த கலை சிவனிடமிருந்து பார்வதிக்கும் அவரிடமிருந்து நந்தி தேவருக்கும் அவரிடமிருந்து அகத்தியருக்கும் வழிவழியாக வந்தது என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.  கோரக்கர், குதம்பைச் சித்தர் மற்றும் பலர் வர்மத்தைப் பற்றி பல நூல்களை இயற்றியுள்ளனர்.  அதனால் புஜண்டர் வருவேன் என்று கூறியது இந்த வர்மமுறையினால், உயர்விழிப்பு நிலையில் என்று பொருள் கொள்ள வேண்டும்.  அவ்வாறு ருத்திர சபைக்கு வந்த அவர் ஈசனை வணங்கி தான் எதைப் பற்றி கூறவேண்டும் என்று வினவுகிறார்.

உடலில் உள்ள ஆறு சக்கரங்களைத் தவிர மூலாதாரம் ச்வாதிஷடானத்துக்கு மேலே பிரம்ம கிரந்தி என்ற முடிச்சும் மணிபூரகம் அனாஹதத்துக்கு மேல் விஷ்ணு கிரந்தியும் விசுத்தி ஆக்ஞாவுக்கு மேல் ருத்திர கிரந்தியும் உள்ளன.  இந்த ருத்திர கிரந்தியைக் கடந்தவர் ருத்திர சபையை அடைகிறார் போலும்.

No comments:

Post a Comment