Monday, 26 May 2014

238. Dissolution ends and creation begins

Verse 238
கேளப்பா சிவம் ஓடி அண்டம்  பாயும்
கிருபையுடன் அண்டமது திரும்பிப் பாயும்
கோளப்பா அண்டமது தம்பத் தூண்தான்
குருவான தசதீக்ஷை ஒன்றும் ஆச்சு
மீளப்பா தங்கமது விளங்கும் செய்கை
மேலும் இல்லை கீழுமில்லை நானும் காணேன்
ஆளப்பா நரைத்த மாடேறு வோனை
அண்ணல் கோ இன்றளவும் அறிந்திலேனே

Translation:
Listen Son!  The Sivam will run and enter the space
The space, with mercy, will reverse and flow
Consider, Son, the space/universe, it is none other than the pillar
It became the guru, the dasadeeksha
See Son, the action of the percious one/golden one, returning
Not above not below, I do not see it.
The person, the one who rides the old bull/ the one who climbs the wealth
The Lord, the King, I do not know till date.

Commentary:
Pujandar says that Sivam, the consciousness will merge with the supreme space.  This is the ultimate state of dissolution.  Now creation starts.  The space now flows back.  It becomes the pillar, the sushumna nadi, the dasadeeksha or the secret behind the letters a and u.  Pujandar exclaims that he has never seen such an action in the world above or below, it is unique and extraordinary.

The last two lines are very interesting.  Pujandar says ‘naraittha maadu eruvonai’.  This expression can be interpreted as “the one who climbs the old cattle”.  This refers to Lord Siva who is shown on top of the bull Nandi.  Nandi also means ‘nan thee’ or the ‘good fire’.  The fire here is the fire of kundalini.  The one who climbs the good fire is consciousness which Siva represents.  The term ‘maadu’ also means wealth.  The wealth here is Super conscious state.  Pujandar may be saying that it is hard to comprehend the consciousness that climbs to the supreme state.  This state is the king, the ultimate Lord.

புலன்களால் அறியப்படும் உலகின் கடைசி நிலையான சிவம் அல்லது பரவுணர்வு முடிவில் அண்டம் அல்லது பரவெளியில் புகுந்து எங்கும் நிறைந்ததாக மாறும்.  இதுவே பிரளயத்தின் கடைசி புள்ளி.  இதனை அடுத்து சிருஷ்டி துவங்கும்.  அண்டம் தூண் அல்லது சுழுமுனை நாடியாகும்,அதுவே தச தீட்சை அல்லது அ மற்றும் உ என்ற மிக உயர்ந்த தத்துவமாகும்.  இந்த தங்கமான செய்கையைத் தான் எங்கும் கண்டதில்லை என்று புஜண்டர் வியக்கிறார். 


இப்பாடலின் கடைசி இரண்டு வரிகள் முக்கியமானவை.  புஜண்டர் தான் “நரைத்த மாடேறுவோனைக் கண்டதில்லை” என்கிறார்.  இத்தொடர் ‘வயது முதிர்ந்த மாடு- காலகாலமாக இருக்கும் நந்தியைக் குறிக்கலாம்.  நந்தீ என்பது நன்+தீ என்று பிரிந்து நல்ல அக்னி குண்டலினி அக்னி என்று பொருள்படும்.  நந்தீயின் மேல் ஏறுபவன் சிவன் பரவுணர்வு.  அதுவே அனைத்துக்கும் மேலான பொருள்.  இது காண்பதற்கு அரிது என்று புஜண்டர் கூறுகிறார்.  

No comments:

Post a Comment