Thursday 15 May 2014

227. Everything abides in the five letters

Verse 227
பெத்தோரே என்றுரைத்தீர் வசிட்டரே நீர்
பிறந்திறந்து எட்டாங்கால் பிறந்து வந்தீர்
சத்தான சத்துகளும் அடங்கும் காலம்
சக்கரமும் திரும்பிவிட்டால் சமையம் வேறாம்
சித்தானப் பஞ்சவர்கள் ஒடுங்கும்போது
சேரவோ ரிஷி முனிவர் சித்தரோடு
முத்தான பஞ்செழுத்தில் ஒடுக்கம் ஆவார்
முத்துமணிக் கோடிஇன்றான் முளைத்திட்டீரே.

Pujandar’s statement to Vasishtar

You said, I am the one who attained it, Vasishta!
You were born and died and came here due to eight. 
The time when all the existence (sath), the essence of existence abides
When the wheel turns the time is different
The five who are awareness, when they abide
Is it to join with rishi, muni and Siddhas?
They will abide in the pearly five letters
You just emerged today, the pearly jewel.

Commentary:
Pujandar is telling Vasishta that creation and dissolution happen due to akara, the divine in the manifested form.  During dissolution the sath or existence of everything that exists, abide.  The five who are awareness are the pancha kartha or the five actors- Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva, also abide with the rishi and muni- evolved souls during dissolution  These deities represent the different states of consciousness of the singular divinity.  Thus, Kakapujandar is talking about different types of souls.  They all abide in the five letters, namasivaya which represents various principles including the states of consciousness.  Kakapujandar tells Vasishta that we also emerged so, from the jewel, the akara.


சிருஷ்டியும் லயமும் அகாரத்தினால் நடைபெறுகின்றன என்று வசிஷ்டரிடம் கூறுகிறார் புசண்டர்.  லயத்திம்போது இருப்பைப் பெற்றிருக்கும் எல்லாம் லயமடைகின்றன.  கால சக்கரம் சுழன்று லயத்தை சிருஷ்டியாக மாற்றுகிறது.  ஐந்து என்று இங்கு குறிப்பிடப்படுவது பஞ்ச கரத்தாள் எனப்படும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் மற்றும் சதாசிவன்.  இவர்கள் ஐந்து உணர்வு நிலைகளைக் குறிக்கின்றனர்.  இவர்களே உலகின் தோற்றத்துக்குக் காரணம்.  இவர்கள் லயத்தின்போது ரிஷி முனிவர்களுடன் சேர்கின்றனர்.  அனைவரும் ஐந்தெழுத்தான நமசிவாயவில் லயமடைகின்றனர்.  இந்த பஞ்சாட்சரம் பல்வேறு தத்துவங்களை, உணர்வு நிலைகள் உட்பட, குறிக்கின்றன.  வசிஷ்டரும் அவ்வாறுதான் தோன்றினார் என்று பாடலை முடிக்கிறார் புசண்டர்.


No comments:

Post a Comment