Wednesday, 14 May 2014

224. Pujandar returns somehow...

Verse 224
பரமான பரமகைலாச வாசன்
பார்த்திருப்போம் ஆலிலைமேற் பள்ளியாகி
தரமான புசண்டமும் நீ இந்த வேளைச்
சக்கரத்தைப் பிரளொட்டார் தவத்தினாலே
துரமாக எவ்வாறோ திரும்பப் போவார்
சூக்ஷமதை நான் அறிவேன் பின்எதோ தான்
வரமான வரமளித்த ஞான வாழ்வே
வசிட்டர்போய் அழைத்துவரத் தகும் என்றாரே

Translation:
The Para the dweller of parama kailasa!
We will see (him) while remaining on the banyan leaf reclined
You the Pujanda, at this time
Due to the austerities that prevent the wheel from spinning
Will somehow return
I know this subtlety, then what is there?
The life of wisdom who grated the boon of boons!
It will be fitting for Vasishta to go and invite him” he said.

Commentary:
Vishnu is having this conversation in the assembly where the Lord, the dweller of the Parama Kailasa remains.  He says that while he, Vishnu, is reclining on the banyan leaf he has seen Pujandar returning somehow due to his austerities, without entering his stomach during the deluge.  He knows that subtley but he asks whether there is something more here.  He suggests that it will be proper for Vasishta, the Sage, to go and invite Pujandar to the assembly so that he can explain what was happening.


பரமனாகிய கைலாச நாதர் இருக்கும் சபையில் விஷ்ணு பேசுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.  விஷ்ணு, தான் ஆலிலையில் பள்ளி கொள்ளும்போது தவத்தில் சிறந்தவரான புஜண்டர் எவ்வாறோ பிரளயத்தில் சிக்கிக் கொள்ளாமல் போவதைத் தான் பார்த்ததாகவும் அந்த சூட்சுமம் தனக்குத் தெரியும் என்றும் அதை விளக்க புஜண்டரை அழைக்க விசிஷ்டர் செல்வதே முறையாக இருக்கும் என்றும் கூறுகிறார்.  பிரளயத்தின்போது உலகமே அழிந்தாலும் புஜண்டரும் அகத்தியரும் அழிவதில்லை என்றொரு கருத்து நிலவுகிறது.  மார்க்கண்டேயரும் பிரளயத்தின்போது இருந்தாலும் அவரும் ஒரு குறிப்பட்ட தடவை மட்டுமே பிரளயத்தைப் பார்க்கிறார். 

No comments:

Post a Comment