Saturday, 31 May 2014

246. Kalyani will grant meijnanam

Verse 246
வணங்கி அவர் வாய் புதைந்து நின்றார் பின்னே
மாது கல்யாணி என வசனித்தார்கள்
வணங்கினார் தேவரொடு முனிவர் தாமும்
மற்றும் உள்ள தேவர்களும் நவபடாளும்
வணங்கினார் அடிகெஜம் திகிரி எட்டும்
வாரிதியும் சேடனுமால் அயனுமூவர்
வணங்கினார் மிக வணங்கித் தொழுதாரப்போ
வாலை அவள் மெய்ஞ்ஞானம் அருள் ஈவாளே 

Translation:
Saluting, they stood respectfully covering their mouths
They called her the lady, Kalyani
Devas along with munis worshipped her
Other devas and the nine/new troups
They saluted her a foot, a hand measure and the eight mountains/peaks
The oceans, the Sesha, Mal, Brahma-the triad
They worshiped her greatly and praised her.  Then
Vaalai, She will grant the grace of meijnanam (true wisdom)

Commentary:
It is Vaalai who will grant one the meijnanam, the true wisdom.  Pujandar describes a scene when all the life forms worship the maiden, the Sakti.  He lists all those who worship her and calls her Kalyani, the auspicious one.  Not only the life forms but the inanimate objects also worship her- the oceans, the mountains, everything.  She is the object of veneration of the holy triad of Adisesha, Vishnu and Brahma.  It is interesting that Adisesha is included in the list.  There is an opinion that it is Adisesha who supports the earth.  However, Adisesha indicates the path of the kundalini sakti. His five heads refers to the five types of Prana.  The imagery of Vishnu reclining on Adisesha with Sakti pressing his feet indicates that Divinity lies on the lap of prana that flows through the sushumna nadi through which the kundalini sakti also travels.   Lakshmi at his feet indicates the sakti in the muladhara.  Lakshmi pressing Vishnu’s feet is referred to in Tamil, ‘kaalaip piditthu vishunuvudan irukkiraal’ she is remaining with Vishnu holding the kaal.  The kaal refers to the foot as well as prana.  So holding on to the prana, through the prana, Lakshmi, the Sakti, remains with Vishnu the male principle.  Thus, it is Vaalai or the Sakti who confers meijnanam, the true wisdom about everything.

மெய்ஞ்ஞானத்தை அருளுவது வாலைத்தான்.  புஜண்டர் அனைவரும் அவளை வணங்கும் காட்சியை இங்கே குறிப்பிடுகிறார்.  தேவர்களும், முனிவர்களும் எல்லாவிதமான உயிர்களும் அவளை வணங்கி கல்யாணி, மங்களமானவள் என்று போற்றுகின்றனர். சேதனர்கள் மட்டுமல்லாமல் அசேதனமும் அவளை வணங்குகிறது.  எட்டு திகிரிகளும் கடல்களும் எல்லா அளவுகளும் அவளை வணங்குகின்றன. 
ஆதிசேஷன், திருமால் மற்றும் அயனும் அவளை வணங்குகின்றனர்.  ஆதிசேஷனே உலகைத் தாங்குவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.  உலகம் என்பது சிற்றண்டம் பேரண்டம் என்ற இரண்டையும் குறிக்கும்.  உடலில் ஆதிசேஷன் என்பது சுழுமுனை நாடியையும் அவனது ஐந்து தலைகளும் மூச்சுக்காற்றும் ஐவகைப் பிராணனையும் குறிக்கின்றன.  ஆதிசேஷனின் மடியில் திருமால் லட்சுமி தேவி அவரது காலைப் பிடித்தபடி இருக்க யோக நித்திரையில் இருக்கிறார் என்பது கடைக் கோடியில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி கால் எனப்படும் பிராணனைப் பிடித்துக்கொண்டு மேலே சுழுமுனை நாடியின் வழியாக ஏறி இறையுணர்வை விஷ்ணுவை அடைகிறது என்பதைக் குறிக்கிறது.  இவ்வாறு வாலை, சக்தியே மெய்ஞ்ஞானத்தை அருளுகிறாள் என்கிறார் புஜண்டர். 


No comments:

Post a Comment