Sunday, 1 June 2014

247. Devi- the granter of grace

Verse 247
தேவியிடத்தில் அருள் பெறுதல்

அருள் ஈவாள் சுடர்மணியை மாலை பூண்டு
அர அரா சின்மயத்தின் நீறு பூசி
பொருள் ஈவாள் மூவருக்கும் பூரணப்பால்
புகழாக ஆட்டிவைத்தாள் புலத்தியா கேள்
சுருள் ஈவாள் அவர் வாக்கு ஏவல் சொல்லி
சூக்ஷம் எல்லாம் உயிர்களுக் கிடங்க வேறாய்
திருள் ஈவாள் தாயான சிறிய வாலை
சிவ சிவா சிவ சூக்ஷ பூர்வ முற்றே

Translation:
Receiving grace from Devi
She will grant grace, wearing the garland of jewel of the flame (sudar mani)
Ara araa!  Adorning the sacred ash of the embodiment of consciousness
She will grant essence/meaning/material for the Triad, the essence of the state of perfection
She made them dance gloriously, Pulatthiya listen
She will grant the whorl/grace commanding their words
Will all the subtlety, being different from all the life forms
She will grant, The mother, The little vaalai
Siva sivaa!  Being the subtlety of siva, being the antecedent of everything.

Commentary:
Agatthiyar says that it is Vaalai who would grant grace.  She will do so wearing the garland of sudar mani, adorning the sacred ash of counsiousness.  That is, she is in the state of supreme consciousness.  Saying that she adorns the sacred ash of consciousness is interesting.  The ash, the end product, occurs when the fire burns.  Here the ash is produced from the burning fire of kundalini.  The triad may refer to the triple qualities of satva, rajas, tamas or the holy triad of Brahma, Vishnu and Siva or the three types of consciousness beings- devas, humans and animal.  She will make them exist, dance the dance of life.  She will command their actions, their words and their life granting them her grace or the whorl, the kundalini sakti.  Even though she is material and willing cause of the manifested universe and the indweller of everything she is different from them.  She is the ultimate state of consciousness while they are all entities with limited consciousness.  She is the essence of Siva.  Kashmir Saivam says that Sakti is the I consciousness or ahantha of Siva.  Thus, she is the Siva knowing his own existence.  She is the primal one.

சிறு குமரி, வாலை, சுடர்மணியைப் பூண்டவளாக சின்மயம் என்னும் நீறைப் பூண்டவளாக அருளை வழங்குகிறாள் என்கிறார் அகத்தியர்.  நெருப்பு இருந்தால்தான் நீறு தோன்றும்.  இங்கு நெருப்பு குண்டலினி அக்னி.  அதன் கார்யப் பொருள் நீறு. 

மூவர் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற மும்மூர்த்திகள்அல்லது சத்துவம் ரசஸ் தமஸ் என்ற முக்குணங்கள், மனிதர், தேவர், மிருகங்கள் என்ற மூன்று வித உயிரினங்கள் ஆகியவற்றில் ஏதுவாகவேனும் இருக்கலாம். இந்த மூவரை ஆட்டுவிப்பவள், அவர்களது சொல் செயலாக இருப்பவள் வாலை.  அவள் உயிர்களுக்கு சுருளை அதாவது குண்டலினி சக்தியை அருளுகிறாள்.  உலகம் தோன்றுவதற்கான காரணமாக அவள் இருந்தாலும், உயிர்களைத்தினுள்ளும் உறைபவளாக அவள் இருந்தாலும் அவள் இந்த உயிர்களைவிட வேறானவள்.  அவள் எல்லையற்ற துரியாதீத பரவுணர்வு, உயிர்கள் அனைத்தும் குறுக்கம் பெற்ற விழிப்புணர்வை உடையவை.  அகத்தியர் அவளே சிவ சூட்சுமம் என்கிறார்.  சக்தி சிவனின் “நான்” என்னும் உணர்வு, அவரது அகந்தை என்று நூல்கள் கூறுகின்றன.  அவளே அனைத்துக்கும் ஆதியானவள், எல்லாவற்றிற்கும் முற்பட்டவள்.

No comments:

Post a Comment