Wednesday 11 June 2014

258. See with mind's eye

verse 258

கேளப்பா முதல் எழுத்து முதலே யாகும்
கெடியான நடு எழுத்து நடுவதாகும்
ஆளப்பா  கடைஎழுத்துக் கடையதாகும்
அர அரா மூன்றெழுத்தும் வாலை ஆகும்
கோளப்பா ஒன்றுமில்லை இரண்டைக் கேளு
குணமாக விட்டதுவும் விடாது மாகும்
தாளப்பா மனக்கண்ணால் விழித்தெழுத்தைப் பாரு
சம்சயங்கள் ஒன்றுமில்லை தவத்துள் ளோரே

Translation:
Listen Son! The first letter is first only
The firm middle letter is the middle one
Son! The last letter is the last only
Ara araa!  The three letters are vaalai
Hold it son! Not one, listen to the two
It is that which left and that which did not leave- qualitatively
Be patient, see the letter opening the eye of the mind,
There are no doubts, the Austere One!

Commentary:
The three letters mentioned here are a u and ma.  A or the akara is the first letter, the origin of everything, the Divine.  The middle letter u represents the Jiva, the middle one in the triad-pathi or lord, pasu or jiva and pasam or attachment.  The last letter is ma or maya that holds everything together. Agatthiyar says that all the three letters represent the kundalini sakti.  The akara is consciousness moving in the sushumna, the ukara in the ida and makara in the pingala.  “Not one but two” means not the singlet state but that of siva and sakti. The next line, that which left and that which did not leave, means several concepts.  It means ‘the soul or consciousness that does not leave and the body that leaves’, ‘the muladhara that was left and the sahasrara that was not left’, it means the lower consciousness that left and the higher consciousness that did not leave’ etc.    These principles could be perceived only through the eye of discretion.  This will be clear knowledge without any doubts.


இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று எழுத்துக்கள் அ உ ம.  அ அல்லது அகாரம் இறைவனைக் குறிக்கும்.  இறைவனே அனைத்துக்கும் முதலாவான்.  நடுவெழுத்தான உகாரம் ஜீவனைக் குறிக்கும்.  அது பதி, பசு, பாசம் என்ற மூன்றினுள் நடுவில் இருப்பது.  இந்த மூன்றில் கடைசியில் இருப்பது மகாரம்.  மகாரம் பாசத்தைக் குறிக்கும்.  தோற்றக் கிரமத்தில் கடைசியில் தோன்றுவது பாசம்.  இந்த மூன்று எழுத்துக்களுமே வாலை என்கிறார் அகத்தியர்.  அதாவது அகாரம் சுழுமுனையிலும் உகாரம் இடையிலும் மகாரம் பிங்களையிலும் செயல்படுகின்றன.  ஒன்றல்ல இரண்டு என்பது ஒருமைநிலையான பரமசிவனல்ல, இருமையான சிவனும் சக்தியுமான நிலை.  விட்டதும் விடாததும் என்பது பல பொருட்களைக் குறிக்கும்.  விட்டது என்பது மூலாதாரம் விடாதது என்பது சஹஸ்ராரம்.  அல்லது விட்டது என்பது உடல், விடாதது என்பது விழிப்புணர்வு.  இந்த உண்மைகள் ஒருவருக்கு ஞானக்கண்ணைத் திறந்து பார்த்தால்தான் புலப்படும்.  அப்போது எவ்வித சந்தேகமும் இருப்பதில்லை.

No comments:

Post a Comment