Verse 250
தான்
என்ற தாய் உரைத்த யோகம் சொன்னேன்
தருவான
அண்டத்தில் வாரும் சொன்னேன்
தேன்என்ற
ஒடுக்கமோடு விளைவும் சொன்னேன்
சிவ
சிவா தம்பநெறி திறமாய்ச் சொன்னேன்
ஊன்
என்ற அதினுடைய அழகும் சொன்னேன்
ஓஓஓ
முப்பாழும் வெளியும் சொன்னேன்
பான்
என்ற சண்டரிட குணமும் சொன்னேன்
பரிந்தழைத்த
வசிட்ட முனி புலன் சொன்னேனே
Translation:
I revealed the yogam taught by the mother,
I told you about the tree in the universe and the six
I told you about honey the abidance and its effects
Siva sivaa! I told
about the method of the pillar, expertly
I told you about the beauty of the body
O O O I told you about the triple voids and the supreme
space
I told you about the qualities of the querulous
The Vasishta muni who called me so lovingly! I told you the clues.
Commentary:
In this verse Pujandar seems to be taking leave of
Vasishta. He lists or summarizes all the
concepts he had taught Vasishta so far. He told him
about the Siva Raja Yogam taught by Vaalai, the kundalini sakti. He revealed
the tree, the sushumna that remains during the pralaya and the six centers or cakras. He explained the manner in which
this pillar appears, how the fire of kundalini along with the five letters,
namacivaya ride it and reach the terminus during dissolution. He pointed out the beauty about the body, the
triple spaces of creation and the supreme space and the five qualities, senses
etc that battle constantly with the soul.
Pujandar tells Vasishta that he has given clues about all these
concepts. That means, he has revealed
the knowledge and now it is up to Vasishta to experience it through practice.
இப்பாடலில்
புஜண்டர் வசிஷ்டரிடமிருந்து விடைபெறுகிறார்.
தான் இதுவரை வசிஷ்டருக்குக் கூறியவற்றை அவர் பட்டியலிடுகிறார். வாலை கற்றுக்கொடுத்த சிவ ராஜ யோகம், மரத்தின்
தன்மையும் ஆறு ஆதாரங்களும், தம்பத்தின் தன்மை, எவ்வாறு குண்டலினி அக்னியுடன்
பஞ்சாட்சரங்கள் மேலே எழும்புகின்றன, உடலின் அழகும் முப்பாழ், பரவெளி ஆகியவற்றின்
தன்மை, எப்போதும் போராடும் ஐவர் ஆகியவற்றைப் பற்றித் தான் வசிஷ்டருக்கு குறி
கொடுத்ததாக புஜண்டர் கூறுகிறார். இதனால்,
வசிஷ்டர் அவற்றைத் தனது பயிற்சியின் மூலம் உணர வேண்டும் என்பது புரிகிறது.
No comments:
Post a Comment