Wednesday 18 June 2014

264. Senseless cattle, see around

Verse 264

ஏறடா பிரம்மாவுக் கொன்றே சொட்டு
இதன் பிறகு மாயோர்க்கு இரண்டே சொட்டு
கூறடா ருத்திரக்கு மூன்றே சொட்டு
கோகோகோ கண்டமத்தில் நாலே சொட்டு
மாறடா பாசம் எல்லாம் மனக் கண்ணாலே
மகத்தான சுழிமேவி மணியில் கூட்டு
சோறடா அளிந்தாக்கால் ருசிதான் போச்சு
சுரணைகெட்ட மாடுகளே சுத்திப் பாரே

Translation:
Climb son, for Brahma one drop
After this, for Mayon two drops
Say son, for Rudra three drops
Ko!Ko!Ko! In the throat four drops
Change attachment, pervade, through the mental eye
The gracious sushumna, join it with the jewel
When the rice is overcooked its taste is lost
Senseless cattle, look around.

Commentary:
This verse describes the path that the kundalini sakti takes during its ascent.  The deity of the svadishtana cakra is Brahma.  Agatthiyar says one drop for Brahma.  May be he means the first step is svadishtana cakra.  The next step is the navel cakra.  The deity for this cakra is Mayon or Vishnu.  The third step is the heart cakra.  The deity for this cakra is Rudra.   The fourth cakra is the throat cakra.  This is the fourth step.  At this stage all the attachments leave the person.  After this the consciousness is merged with the mani.  This should be done only up to a particular limit.  If it is overdone then the bliss is lost.  Agatthiyar says that if the rice is overcooked it loses its taste.  He calls people senseless cattle, shameless cattle and tells them to look around. Even though this terms looks like an insult one wonders whether Agatthiyar is really insulting people here.  Being senseless may mean being senseless of the world but being sensitive of the Divine, the cattle, which means those who have that wealth, should travel through the cakras and see/enjoy the bliss.


இந்தப் பாடலில் அகத்தியர் குண்டலினி சக்தியின் பாதையைப் பட்டியலிடுகிறார்.  இந்தப் பாதையின் முதல் படி ஸ்வாதிஷ்டானம். அதன் அதிபதி பிரம்மா.  இதற்கு முதல் சொட்டு என்கிறார் அகத்தியர்.  அதுவே முதல் படி என்கிறார் போலும்.  இதனை அடுத்த படி நாபிச் சக்கரம்.  இதன் அதிபதி மாயோன் அல்லது விஷ்ணு.  மூன்றாவது படி அனாஹத சக்கரம்.  அதன் அதிபதி ருத்ரன்.  இதனை அடுத்த படி விசுத்தி.  இதற்கு நான்கு சொட்டு என்கிறார் அகத்தியர்.  இந்த நிலையில் எல்லா பற்றுகளும் விலகிவிடுகின்றன.  இதனை அடுத்து விழிப்புணர்வு மணியுடன் சேருகிறது.  ஆனால் இந்த பயிற்சி ஒரு அளவுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட வேண்டும்.  இல்லாவிட்டால் ஆனந்தம் ஏற்படாது.  சோறு அளிந்துவிட்டால் ருசிக்காது என்கிறார் அகத்தியர்.  அவர் மக்களை சுரணை கெட்ட மாடுகள் என்று அழைத்து அவர்கள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிறார்.  சுரணை கெட்ட மாடுகள் என்பது அவதூறைப் போலத் தோன்றினாலும் உண்மையில் அகத்தியர் மக்களைத் திட்டுகிறாரா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.  சுரணை அற்று இருத்தல் என்பது உலக சுரணை அற்று பரவுணர்வு பெற்று, அந்த சம்பத்தைப் பெற்ற அவர்கள் சக்கரங்களில் சுற்றிப் பார்க்கவேண்டும் அதாவது குண்டலினி சக்தியை மேலே எழுப்பி மீண்டும் கீழே இறக்கி பரவுணர்வை ஒரு துளியாவது அனுபவிக்கவேண்டும் என்று அவர் கூறுகிறாரோ என்று தோன்றுகிறது. 

No comments:

Post a Comment