Wednesday, 25 June 2014

268. Merge in the Jnana Jyothi!

Verse 268
வாசி சுழி காணவென்றால் அடியில் ஊது
மைந்தனே நடுமூலம் அறிந்து ஊது
ஊசி சுழி காணவென்றால் சுழியில் ஊது
உண்ணாக்கினால் மறித்து அலைந்திடாதே
வீசு புகழ் மூன்றெழுத்தும் முன்பின் மாறும்
மெய்ஞ்ஞான சுழி திறந்தால் பிரமை தீரும்
பூசிதமாய் புருவமையம் உற்றுப் பாரு
பிரபை ஒளி வீசுகின்ற சுடரில் சேரே

Translation:
To see the whorl of the vaasi blow at the bottom
Son, blow in the middle
To see the needle like whorl blow in the whorl
Block with the uvula and stop roaming (become still)
The glorious three letters will change their order
When the whorl of true wisdom opens, delusion will be relieved
Look carefully at the middle of the brow as if performing worship
Join the flame that shines brilliantly with aura.

Commentary:
During vaasi yoga or breathing practice, the breath should be directed through the sushumna nadi.  Agatthiyar says that one should do this knowing the base, the muladhara cakra.  The term 'nadu moolam' refers to the manipuraka chakra. The whorl mentioned in line 3 refers to ajna.  The sushumna nadi is said to have three concentric tubes the inner most being needle-like chitrangini nadi.  Agatthiyar has referred to this as a hairline bridge (so thin) and as the stock of the lotus.  After directing the breath through the sushumna the uvula is blocked by turning the tongue up.  Thoughts must be stilled.  Then the door of true wisdom will open, realization will happen.  Agatthiyar says that the glorious three letters will change their order.  The three letters are akara, ukara and makara.  During creation the single letter of om transforms into akara-the Divine, ukara- the limited soul and makara-the creative power or maya.  Up on gaining expertise in kundalini yoga the three letters will become one or akara, no more distinction no separations.  Everything will be in the state of oneness.  The yogi experiences this in the ajna cakra.  Hence, Agatthiyar tells Pulatthiyar to merge in this state of consciousness, the flame of consciousness by looking at the middle of the brow.


வாசி யோகத்தின்போது மூச்சு சுழுமுனை நாடியில் பாய வேண்டும்.  இதற்கு ஒருவர் மூலாதார சக்கரத்தின் அடியை, அதில் உள்ள திறப்பை அறிந்து அதனுள் மூச்சைச் செலுத்தவேண்டும்.  இந்த வாசல் ஒரு லிங்க வடிவில், சுயம்பு லிங்கம் என்ற பெயரில் குண்டலினியால் ஒரு பாம்பைப் போல சூழப்பட்டு உள்ளது என்று முன்பு பார்த்தோம்.  இரண்டாம் வரியில் உள்ள 'நடு மூலம்' என்ற சொல்லுக்கு மூலாதாரத்தின் நடுவு, சுழுமுனை நாடியின் நடுவு அல்லது நடுவில் உள்ள சக்கரம் அதாவது புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மற்றும் மூலாதார சக்கரம் ஆகியவற்றை அறிந்து ஊது என்று பொருள் கூறலாம்.  சுழுமுனை நாடி ஒன்றினுள் ஒன்றாக மூன்று குழல்களைக் கொண்டது என்று கூறப்படுகிறது.  இதில் அனைத்துக்கும் உள்ளே இருப்பது மிக மெல்லிய சித்ரங்கிணி நாடி.  அகத்தியர் முன்பு இந்த நாடியை மயிர்ப்பாலம் என்று அழைத்துள்ளார்.  இதனைத் தாமரைத் தண்டு என்றும் கூறுவார்.  இந்த நாடியில் மூச்சைச் செலுத்தும்போது மூலாதாரத்தில் உள்ள கதவு திறந்து குண்டலினி மேல் நோக்கிப் பாய்கிறது.  அப்போது நாவால் உண்ணாக்கை மூடவேண்டும்.  எண்ணங்களின் அலைச்சல் தடை செய்யப்படவேண்டு.  அப்போது புகழ் வாய்ந்த மூன்றெழுத்துக்கள் இடம்மாறும் என்கிறார் அகத்தியர்.  இந்த மூன்றெழுத்துக்கள் அ உ ம என்பவை.  உலகம் தோன்றும்போது ஒரே எழுத்தான ஓம்காரம் அகார உகார மகாரமாக உருமாறி உலகமாகக் காட்சியளிக்கிறது.  லயத்தின்போது இந்த மூன்று எழுத்துக்களும், மகார உகார அகாரங்கள் ஒரே எழுத்தாக அகாரமாக மாறுகின்றன.  இந்த ஒருமை நிலையை அந்த யோகி ஆக்ஞா சக்கரத்தில் காண்கிறார்.  அதனால் அகத்தியர் புலத்தியரை ஆக்ஞா சக்கரத்தை, புருவத்தின் மத்தியை உற்று நோக்கி பிரபையுடன் கூடிய சுடரில் கலக்குமாறு கூறுகிறார்.  

No comments:

Post a Comment