Verse 265
சுத்திப் பார் ஞானமது எங்கே
என்று
சுழன்றலைந்துப் போகாதே
சூக்ஷம் கேளு
வித்திப் பார் பிரகஸ்பதிபோல்
பிறப்பை தானும்
வீசுமடா நோட்டத்தில் காணும்
உண்மை
பத்திப் பார் அதுவல்லோ சூழின
நாட்டம்
பாடரிது ஞானமிது பரிந்து
நாட்டே.
Translation:
Whirling, see where wisdom
is.
Do not lose yourself
spinning and roaming around, listen to the subtlety
Plant the mind firmly and see
creation like Bruhaspathi
It will blow, the truth will
become visible up on noticing
Hold it and see, this is the
dance of the whorl
It is the wisdom that is
hard to sing about, establish it with interest.
Commentary:
As a continuation of the
previous verse, Agatthiyar tells Pulatthiyar to ‘sutru’ and see where the locus
of wisdom is present. ‘Sutru’ means both
roam around and spin. Agatthiyar is
advising Pulatthiyar to spin through the wheels, the cakras- make the
consciousness roam around through the cakras and try to locate the site of
wisdom. However, Pulatthiyar is not to lose himself roaming too much or
whirling too much. In the previous verse
Agatthiyar mentioned ‘if the rice is overcooked it will lose its taste’ that is
indulging in kundalini yogam too much is not good. Hence, with control Pulatthiyar is to look
for the site of wisdom and identify it with the help of mental eye. Then the play of creation, the dance of the
kundalini the whorl will become visible.
Agatthiyar is advising Pulatthiyar to plant this experience, the hard to
describe phenomenon within himself with interest.
முந்தைய பாடலின்
தொடர்ச்சியாக அகத்தியர் இப்பாடலில் புலத்தியரை ஞானத்தின் இருப்பிடத்தைச் சுற்றிப்
பார்க்குமாறு கூறுகிறார். இங்கே சுற்றுவது
என்பது சக்கரங்களில் விழிப்புணர்வை மேவச் செய்து உணருவது. ஆனால் இந்த முயற்சியில் சுற்றி அலைந்து தன்னை
இழந்துவிடவேண்டாம், பயனற்று விழிப்புணர்வை பயணிக்கச் செய்யவேண்டாம், தேவையற்ற
இலக்குகளை அடைய முயற்சிக்கவேண்டாம், என்று அகத்தியர் அவருக்கு
அறிவுறுத்துகிறார். இதைத்தான் முந்தைய பாடல் ‘சோறு அளிந்தால் ருசிக்காது’ என்று
அவர் கூறினார். இவ்வாறு மனக்கண்ணால் ஞானத்தின்
இடத்தை நோக்கினால் அது சுழி அல்லது குண்டலினி சக்தியின் நடனம், உலகப் படைப்பு அதன்
காரியம் என்பது புலப்படும். இந்த அறிவு
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இதை
உணர்ந்து ஆர்வத்துடன் இந்த உணர்வை தன்னுள் நாட்டிக்கொள்ளுமாறு அகத்தியர்
புலத்தியருக்கு அறிவுறுத்துகிறார்.
No comments:
Post a Comment