Sunday, 8 June 2014

256. Tirumular tore Sattaimuni's work. Why?

Verse 256
இந்த நூல் பத்து நூற் கவிதான் அப்பா
ஏக நிரா மயமான மணியைச் சொன்னேன்
தந்த நூல் இந்த நூல் தன்னைப் பாடி
தரணிவுள்ளோர்பிழைக்க வென்று குகைக்குள் வைத்தேன்
விந்தைநூல் சட்டை முனி தீக்ஷை அப்பா
வெளியாகச்சொன்னநூல் கிழித்தார் மூலர்
முந்த நூல் ஆயிரத்தில் மொழிந்தேன் பாரு
முறையோடு சரக்கு வைப்பு ஞானம் தானே.

Translation:
This work of ten hundred verses, son
I spoke about the mani, the singlet, the untethered one
The work granted by that, this work, singing it
I concealed it within the cave for people to save themselves
Sattaimuni Deekshai is a wonderful book, Son
The book that revealed it explicitly, Mular tore it
In the previous work of thousand, I told
Properly about the stock of things.
Commentary:
Agatthiyar says that in this book of thousand verses he has described about the Divine, the jewel, the singleton, the completely independent one and that he has kept this knowledge concealed in a cave.  The cave refers to the ajna cakra.  Thus, the esoteric knowledge that Agatthiyar is imparting is for those who are serious persuing wisdom.  To impress upon us that this knowledge is not for casual viewers he says that when Sattai muni tried to tell this to all and sundry through his book, sattai muni deekshai, Tirumular tore it and destroyed it lest it should fall into the hands of the undeserving.  Agatthiyar mentions that this is the reason for him revealing all these principles in a concealed fashion in his previous work of Agatthiyar jnanam 1000 as ‘sarakku vaippu’ or ‘storehouse or list of things that should be known’.  From this verse we realize how much the Siddhas storve to protect the knowledge from the wrong people and how special this knowledge is.


அகத்தியர் தான் இந்த ஆயிரம் பாடல்கள் கொண்ட நூலில் ஒன்றேயான சோதியைப் பற்றி, நிராமயத்தைப் பற்றி, அருவ உருவ நிலையான மணியைப் பற்றிப் பாடியுள்ளதாகக் கூறியுள்ளார்.  மேலும், தான் இந்த ஞானத்தை குகையில் ஒளித்து வைத்ததாகக் கூறுகிறார்.  குகை என்பது ஆக்ஞா சக்கரத்தைக் குறிக்கும்.  இந்த ஞானத்தை வெளிப்படையாக வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு, உண்மையான தேடல் இல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதை நமக்குப் புரியவைக்க சட்டைமுனியைப பற்றிக் கூறுகிறார். சட்டை முனி தனது தீட்சை என்னும் நூலும் இந்த விஷயங்களை விரிவாக அனைவருக்கும் புரியும் படி விளக்கிறார் என்றும் அதைக் கண்ட திருமூலர் அதைக் கிழித்துப் போட்டார் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  அதனால்தான் இந்த ஞானத்தைத் தான் சரக்குவைப்பு என்று மறைத்துக் கூறியுள்ளதாக இங்கே அகத்தியர் குறிப்பிடுகிறார். 

No comments:

Post a Comment