Saturday, 7 June 2014

255. Realized souls will walk in the path of the axle

Verse 255
கடை போட்டேன் சிவ யோகி ராஜ யோகி
கற்றுணர்ந்த தவத்தோர்க்குக் கடையில் வந்து
விடை கூட்டும் மனோன்மணியைத் தொழுது போற்றி
மெய்ஞ்ஞானக் காவியத்தை விரித்துப் பார்த்து
தடை ஓட்டி விடத்தாண்டா இந்த நூலில்
சமயமதம் தனை அறுத்து நன்றாய்ச் சொன்னேன்
நடை கூட்டி அச்சுமட்டம் நடந்தாப் போலே
நல்ல சுகம் நல்ல சுகம் இந்த நூலே

Translation:
I spread the shop, the siva yogi, raja yogi,
For those who are learned and realized, for them to come to the shop and
To spread the meijnana kaviyam/ see it in detail
To chase away the obstacles, for this purpose, in this book
Cutting asunder the religious fanaticism I explained well
Increasing the speed and walking up to level/speed of the axle
Good pleasure, good pleasure, this book.

Commentary:
Agatthiyar calls himself the siva yogi and raja yogi and says that he is spreading this shop, the meijnanam, for the sake of realized souls.  He wishes them to come to his shop and open up the meijnanam after worshipping kundalini sakti, mana unmaniand get all their obstacles removed.  , Agatthiyar says that he has explained all several concepts in detail so that their delusion due ot religion and spirituality will be cut away. 
The axle mentioned in this verse may refer to the cakras.  They are depicted as wheels to indicate that they spin in opposite directions taking the consciousness up or down.  The kundalini sakti that emerged through these cakras constitute the anga peeta lingam, as we saw before. 

தன்னை சிவ யோகி, ராஜ யோகி என்று கூறும் அகத்தியர் தான் தனது கடையை, மெய்ஞ்ஞானத்தை, கற்று உணர்ந்த ஜீவன்களுக்காகப் பரப்பியுள்ளதாக அகத்தியர் கூறுகிறார்.  அது அவர்கள் பயணப்படும் ஞானத்தை நோக்கிய பாதையில் உள்ள தடைகளை விலக்கும் என்கிறார் அவர்.  தான் இந்த நூலில் எல்லா விஷயங்களையும் விரிவாக விளக்கியுள்ளதாகவும் அதனால் சமயம் மதம் ஆகியவை ஏற்படுத்தும் குழப்பங்களை அறுத்துவிடலாம் என்றும் அவர் கூறுகிறார்.  மக்கள் அச்சு மட்டம் நடப்பார்கள் என்பது அவர்கள் அச்சுக்களைப் போன்ற சக்கரங்களின் மத்தியில் தமது விழிப்புணர்வைச் செலுத்தி ஞானப்பாதையான சுழுமுனையில் நடப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார். அங்க பீட லிங்கம் என்று அகத்தியர் சக்கரங்களையும் அவற்றின் ஊடே குண்டலினி  சக்தி எழுவதையும் அவர் முன்னர் குறிப்பிட்டுள்ளார்.  

No comments:

Post a Comment