Monday, 2 June 2014

251. Pujandar lists all that he talked about

Verse 251
சொன்னேனே மார்க்கண்டன் திறமும் சொன்னேன்
திருமாலும் சிவன் உரைத்த வாறும்சொன்னேன்
சொன்னேனே அம்பலங்கள் வகுப்புச் சொன்னேன்
சூக்ஷ சிவ சக்கரத்தின் குறியும் சொன்னேன்
சொன்னேனே சிவ வாலை மூலம் சொன்னேன்
சுருக்காக மந்திரத்தின் திறமும் சொன்னேன்
சொன்னேனே நேய கால சுகமும் சொன்னேன்
சுத்த வான் நின்றபடி சொன்னேன் காணே.

Translation:
I told about Markandan's expertise.
I also revealed the words of Tirumal and Sivan
I described the types of arenas
I also told about the signs of Siva cakra
I told, About the origin, siva vaalai,
I also told briefly about the capacity of mantra
I told about favorable times and pleasure
I revealed (all these) while remaining in the pure space.

Commentary:
Pujandar continues to tell Vasishtar about the concepts he taught him.  He says that he told the expertise of Markandeyar. Puranas say that Markandeyar got a boon from Lord Siva that he would never die.  He is said to be living in the Himalayas.  Pujandar says that he told Vasishta the details about Vishnu and Siva’s words, about the Siva cakra, about Vaalai, the capacity of the namacivaya mantra, about good times and about nature of wish.  He says that he mentioned all those while remaining in the pure space.  It may also be ‘suttuvaan’ or the roaming one.  This refers to the prana, the vital breath that wanders in the microcosm and the macrocosm.  It is not mere air but the lifeforce that enters a body along with air.  This would also refer to consciousness which wanders all over the body and outside in the Supreme space as well.


இப்பாடலில் புஜண்டர் தான் வசிஷ்டருக்கு சிவராஜ யோகம், மார்க்கண்டேயரின் திறம், சிவ சக்கரம், வாலையின் தன்மை, விஷ்ணு, சிவன் ஆகியோரின் சொற்கள், மந்திரத்தின் தன்மை, நல்ல நேரம், விருப்பம் ஆகியவற்றைப் பற்றிக் கூறியுள்ளதாகவும் அவற்றைத் தான் சுத்த வானில் நின்றுகொண்டு கூறியதாகவும் சொல்கிறார். சுத்த வான் என்பது பரவேளியைக் குறிக்கும்.  அதை சுத்துவான் என்று கொண்டால் பிராணனையோ விழிப்புணர்வையோ குறிக்கும்.  பிராணன் காற்றுடன் சித்தாகாசத்திலும் போராகாசத்திலும் சுத்துகிறது.  விழிப்புணர்வும் அவ்வாறே.  புலத்தியர் இச் சொல்லை முந்தைய பாடல் ஒன்றில் பிராணன் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment