Sunday 1 June 2014

249. Siva raja yogam

Verse 249
சொல்வாளே சிவராச யோகம் கேளு
சுருக்கமாய்ப் புலத்தியனேஉனக்காம் இந்நூல்
சொல்வாளே வங் என்று உள்ளே வாங்கி
சுகமாகச் சிங் என்று நடுவே தாங்கி
சொல்வாளே மங் கென்று சுழியில் மாட்டி
சுகமாகச் சுடர் மணியில் சொக்கி நின்றால் பின்
சொல்வாளே இது வாசி யோகம் அய்யா
சூக்ஷமடா ஆதி சக்தி கொலுவு தானே

Translation:
She will tell Siva raja yogam listen
Briefly, Pulathiya!  This composition/book is for you
She will say, taking in (inhaling) with vang
Holding it with cing in the middle
She will say mang tethering it in the whorl
If remained enchanted in the jewel of effulgence, later
She will say this is vaasi yogam, Sir
Subtlety, Hey!  Verily the court of the primal power

Commentary:
Agatthiyar describes the siva raja yogam in this verse.  He says that it is vaalai, the young maiden who established it and will reveal it to the life forms.  She will teach this yoga as uttering vang during inhalation, cing during exhalation with a pause in the middle, the kumbaka.  It is uttering mang while fixing the consciousness in the muladhara and remaining enchanted in the guru mani.  This is vasi yogam.  This is the primal force, the subtlety.


அகத்தியர் சிவ ராஜயோகத்தை இப்பாடலில் விளக்குகிறார்.  அதை உள் மூச்சின்போது வங் என்றும் வெளி மூச்சின்போது சிங் என்றும் இடையில் கும்பகம் எனப்படும் மூச்சுத்தடையுடனும் செய்ய வேண்டும்.  கவனத்தை மூலாதாரத்தில் வைத்து மங் என்று கூறி குருமணியில் நிலைத்திருந்தால் அதுவே சிவராஜ யோகம் என்கிறார்.  இதுவே சூட்சுமம், ஆதி சக்தி என்கிறார்.

No comments:

Post a Comment