Wednesday, 4 June 2014

253. Everything abides in Sivam

Verse 253
சொல்லுவேன் புலத்தியனே அறிவுள்ளோனே
தூண்டி மிகக் கேளாட்டால் யானும் சொல்லேன்
அல்லுமே பகலான சோதி சோதி
அம்மணியில் போய்மறைவோம் அந்த நாளில்
கல்லுமே குகைதொரும் இருப்பதேது
காத்து மலையேது சிவன் தான் போகில்
வில்லுமே அம்பதுபோல் மணியில் புக்கி
மெம்மணிபோய் சிவம் புக்கும் மேலும் கேளே

Translation:
I will tell you Pulatthiya! The wise one
Unless inquired deeply I will not tell
Night and day, the effulgence, effulgence
We will disappear in that mani/jewel
Stones, caves- what remains?
Air, mountain- where are they?  Even Sivan is gone
Like the bow and arrow, abiding in the mani
The true jewel, mani, will abide in Sivam.  Listen some more.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that this is secret knowledge and that he will reveal it only when inquired persistently.  He says everything including himself will enter the mani or the effulgence, the formless form of the Divine.  He remarks that nothing that is distinct exists at this stage.  Everything merges within the formless form of the Divine, the flame.  The flame or the mani merges with Sivam the supreme state of formlessness of the Divine.  We have already seen that the Divine exists in this formless state initially. When manifestation starts, the Divine exists as formless form- one that has a form but that which cannot be described.  This is the roopa arupa form.  This then becomes parai, the one with a form, the form of the universe- the roopa state.
Thus, everything merges with the allpervading, supreme state of  consciousness.


பிரளயத்தின்போது அகத்தியர் எங்கே இருப்பார் என்ற புலத்தியரின் கேள்விக்கு அகத்தியர் இங்கே பதிலிறுக்கிறார்.  இந்த பதிலை ஒருவர் விடாமல் கேட்டால்தான் தான் கூறுவேன் என்று தொடங்கும் அகத்தியர் தானும் மணியில் புகுவேன் என்கிறார். அனைத்துப் பொருட்களும் இந்த மணியில் புகும்.  மணி சிவத்தில் புகும் என்கிறார் அவர்.  அரூபம், ரூப அரூபம் மற்றும் ரூபம் என்ற மூன்று நிலைகள் இறைவனுக்கு உண்டு.  இவற்றில் அரூப நிலை உலகம் தோன்றுவதற்கு முன் இருப்பது.  இந்த நிலை மணி அல்லது ரூப அரூப நிலையை அடைகிறது.  மணி என்பது சோதி.  சோதிக்கு ஒரு உருவம் உண்டு என்ற நாம் அறிகிறோம் ஆனால் அது இதுதான் என்று சுட்டிக்காட்ட முடியாத, விளக்க முடியாத உருவம்.  இதனை அடுத்து ஏற்படுவது ரூப நிலை.  இதையே அகத்தியர் பரை என்கிறார்.  இதை சம்ஸ்கிருத நூல்கள் அபரா, பராபரா, பரா என்று அழைக்கின்றன.  இவ்வாறு புலன்களால் உணரப்படும் உலகம் இறைவனின் அருவ நிலையில் லயமடைகின்றன.  

No comments:

Post a Comment