வாழ்வென்றால்
இது வாழ்வு ஞான வாழ்வு
மற்றதெல்லாம்
சமுசார மாய்கை வாழ்வு
பாழ்
என்றால் எது பாழு முப்பாழப்பா
பாழ்
அறிந்தால் அவன் யோகி ஞான யோகி
ஆழ்
என்றால் விடுவானோ கோழிதன்னை
அரகரா
பொங்கல் இட்டு ஆனபோது
வேழ்
என்றால் இது வேள்வி சுடரின் வேள்வி
வெள்ளாட்டி
பயல்களை நீ தள்ளி நில்லே
Translation:
Life, this is life,
the life of wisdom,
All the rest are
life of maya
What is paazh? Only muppaazh
The one who knows is
the yogi, the jnana yogi
If said leave, will
he leave the chicken
Ara araa! What is a gruel ritual?
Yaga, this is yaga,
the yaga of the flame
You stand away from
charlatans.
Commentary:
Agatthiyar says that
reading the meijnanam and living a life of austerity seeking the Divine with
the help of a guru is the supreme life.
All other lives, seeking worldly pleasures and other minor benefits are
only a life of maya. He says that those
who know the paazh are only true yogis, the yogis of wisdom. We already saw what paazh is. It is the supreme space where creation and
dissolution occurs. The three types of
paazh are the maya paazh, bodha paazh and the upasantha paazh. Agatthiyar says that one who has the
resolution to experience the Divine will not stop until he gets it. This is like the one who will not stop from
cutting the chicken that is to be offered in the gruel offering ritual. Agatthiyar says realizing meijnanam is the true
yaga, the yoga of the flame, the Divine.
One should not lose focus by associating with useless people but stay focused
and reach the end, the realization.
மெய்ஞ்ஞானத்தைப்
படித்துணர்ந்து ஒரு குருவின் உதவியுடன் அதில் கூறியவற்றைக் கடைப்பிடித்து வாழும்
வாழ்வே நல்ல வாழ்வு மற்றவை அனைத்தும் மாயையால் பீடிக்கப்பட்ட வாழ்வே என்கிறார்
அகத்தியர். மேலும் அவர் முப்பாழைப் பற்றி
அறிந்தவனே ஞான யோகி என்றும் இறையுணர்வைப் பெறும்வரை ஒருவர் தனது முயற்சியை
நிறுத்துக்கூடாது என்றும் பொருள்படுமாறு பொங்கல் படையல் செய்யும் ஒருவன் கோழியை
அறுக்காமல் நிறுத்துவானா என்று கேட்கிறார்.
மெய்ஞ்ஞானத்தை அறிவதே உண்மையான வேள்வி, இறைமையைக் குறித்த வேள்வி என்று
கூறும் அகத்தியர் ஒருவர் தனது கவனத்தைச் சிதற விடாது வீணர்களுடன் காலத்தைக்
கழிக்காது இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
No comments:
Post a Comment