Thursday 5 June 2014

254. Pujandar talked about it every eon and I was granted Pothigai...

Verse 254
கேளப்பா மணி யூடே தம்பதுள்ளே
கிருபையுடன் சொக்கிநிற்போம் முனிவர் சித்தர்
வாளப்பா புசண்டருக்கு அந்த வேளை
வைத்தபடி யுகந்தோறும் சொல்லானார்
கோளப்பா எந்தனுக்குப் பொதிகை ஈந்தார்
குருமணிபோல் காவியத்தைப் பகரச் சொன்னார்
ஆளப்பா அதனாலே பத்து நூறு
அர அரா அம்பத்தில் கடை போட்டேனே. 

Translation:
Listen, within the mani within the pillar
We will remain with enchantment and grace, the muni and siddhas
Quietude. Pujandar at that time
He started saying it every eon.
Think about this, he granted me pothigai
He told me to compose the Kavya like the gurumani
Hence, ten hundred
Ara araa!  I spread a shop in the fifty.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that during pralaya all the souls, the munis and siddhas, will remain in an enchanted state within the mani-the jewel, and within the pillar-the sushumna.  He says that while Pujandar talks about this state every eon,  Agatthiyar was granted the Pothigai.  Pothigai, as we saw before, refers to the spot in the body from where the nadis branch out.  It is close to the muladhara cakra or the southern part of the body.  Thus, Agatthiyar is the ‘aga+ thee’ the fire inside, the  fire of kundalini in the muladhara.  He was bid to take care of the south.  This fact may be the idea behind the story that Siva, during his wedding with Sakti, the union of kundalini Sakti with the Super conscious state in sahasrara, told Agatthiyar to go south and balance the world, the world being the human body, the microcosm. 

Agatthiyar says further that he was bid to compose the kavya, the meijnana, the book of wisdom like the gurumani.  Gurumani is the principle which reveals the truth about everything, the one that removes the darkness of ignorance.  He says that hence, he composed this work of thousand verses, in other words, spread the shop of knowledge from where people can obtain wisdom.

It is very interesting how our ancestors and siddhas preserved esoteric knowledge by interweaving it with a tale or a purana.  This has ensured that the knowledge is not lost over time and for a watchful soul this knowledge is revealed at the appropriate time.  

பிரளய காலத்தில் அனைவரும், முனிவர், சித்தர் ஆகியோரும்கூட மணியில், தம்பத்தில் மயங்கிய நிலையில் இருப்பார் என்கிறார் அகத்தியர். அதாவது, அவரவரது விழிப்புணர்வு நிலைக்கேற்ப அவர் சுழுமுனையில் ஒரு இடத்தில் தங்குவார்.  தானும்கூட தம்பத்தில் மணியில் இருப்பேன் என்று அகத்தியர் கூறுகிறார்.  பிரளயத்தின்போது புலத்தியருக்கு அதைப் பற்றிப் பேசும் வேலை தரப்பட்டது என்றும் தனக்குப் பொதிகை அளிக்கப்பட்டதென்றும் அகத்தியர் கூறுகிறார்.  பொதிகை என்பது மூலாதாரத்துக்கு அருகில் நாடிகள் பிரியும் இடத்தைக் குறிக்கும் என்று நாம் முன்னமே பார்த்தோம்.  இந்தக் கருத்தில்தான் சிவபெருமானின் திருமணத்தின்போது, அதாவது குண்டலினி சக்தி சஹஸ்ராரத்தை அடையும்போது, சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு, உடலின் தென்திசையான மூலாதாரத்துக்குச் சென்று, உலகை, சிற்றண்டமான உடலை, சமன்படுத்துமாறு கூறப்பட்டார் போலும்.

அதைத் தவிர தனக்கு இந்த காவியத்தை, குருமணியைப் போன்ற, அஞ்ஞானம் என்னும் இருட்டை விலக்கும் குருவைப் போன்ற, மெய்ஞ்ஞானகாவியத்தை இயற்றுமாறு பணியப்பட்டது என்று அகத்தியர் மேலும் கூறுகிறார்.  அதற்காகத்தான் ஆயிரம் பாடல்கள் கொண்ட இந்த காவியத்தை இயற்றினேன், ஞானத்தைத் தரும் இந்த கடையைப் பரப்பினேன், என்று அகத்தியர் கூறுகிறார்.


நமது முன்னோர்கள் சூட்சுமமான கருத்துக்களை அழியாமல் காக்க அவற்றை ஒரு கதையாக, புராணமாகப் புனைந்ததைக் காண விந்தையாக உள்ளது.  காலத்தின் அழிவிலிருந்து காக்கப் பட்ட இந்த ஞானம் தகுதியானவர்களுக்கு, தகுந்த சமயத்தில் சித்தர்களால், குருக்களால் வெளிப்படுத்தப்படுகிறது. 

2 comments:

  1. \\ந்தக் கருத்தில்தான் சிவபெருமானின் திருமணத்தின்போது, அதாவது குண்டலினி சக்தி சஹஸ்ராரத்தை அடையும்போது, சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு, உடலின் தென்திசையான மூலாதாரத்துக்குச் சென்று, உலகை, சிற்றண்டமான உடலை, சமன்படுத்துமாறு கூறப்பட்டார் போலும்.\\\

    பல நாள் குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்தது நன்றி.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ!

    ReplyDelete