Sunday, 1 June 2014

248. Pujandar returns and Siva raja yogam

Verse 248
புசண்டர் பதிக்குச் சென்றார் ராசயோகம்

பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று
புகழ்ந்துவிட்டுப் புஜண்டரும் தன் பதிக்குச் சென்றார்
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம்
கம்ப மணி வாலை கொலுக் கூடம் அப்பா
நாரணத்தில் நின்றிலங்கும் மௌன வாலை
நாட்டினாள் சிவ ராசா யோகம் கேளு
ஆரணத்தி பூரணத்தி அருள் மெய்ஞ்ஞானி
ஆதி சத்தி வேத முத்தி அருள் சொல்வாளே

Translation:
Saying that this is the story that happened in the past
Praising it, Bhujanda went to his place
I described this wisdom in the cause/kaaranam
Sir/Son, the jewel of the pillar is vaalai's court
The silent vaalai who remains gloriously in the naaranam (limited soul)
She established the Siva raja yoga, Listen
The perfect one, the grace, the truly wise one
The primal power, the terminus of knowledge/Veda she will utter grace.

Commentary:
Agatthiyar concludes his narration by saying that Pujandar went for his residence after praising it as, “this is what happened in the past”.  He also mentions that he has described this in the work kaaranam.  It may also mean that he has established this knowledge in the cause, the Divine.  He says that this is the hall of audience of vaalai, the jewel of the pillar.  She is the vaalai who remains and operates within the limited souls.  Agatthiyar says that she established the siva raja yogam.  He describes this yoga in the next verse.  The term naaranam is interesting.  Naaram means assemblage of jivatma. The term Narayana means one who has the naaram, Jivatma, as his ayanam- the abode. It also means, ‘one who is the abode of limited souls- the ayanam for the naaram’.  Agatthiyar says that Vaalai remains within the naaranam and operates there.  This shows that the primary Shakti of Narayana is also vaalai, the kundalini Shakti who takes different forms as Lakshmi, Sarasvathi, Bala etc.

புஜண்டர் இவையனைத்தையும் “முன்னே இதுதான் நடந்தது என்று கூறிப் போற்றிவிட்டு தனது இடத்துக்குப் போனார் என்று கூறி அகத்தியர் தனது கதையை முடிக்கிறார்.  மேலும், தான் இதைப் பற்றி காரணத்தில் கூறியதாக அல்லது இவையனைத்தும் காரணத்தில் இருக்கிறது என்று வகுத்ததாகவும் கூறுகிறார்.  வாலைக் கன்னியின் கொலு மண்டபம் சுழுமுனை என்னும் மணிக்கம்பம் என்கிறார்.  வாலையே சிவ ராஜயோகத்தை நாடியதாகக் கூறி அதைப் பற்றி மேலும் விளக்குகிறார்.  இந்த வாலை நாரணத்தில் இருப்பவள் என்றும் அவர் கூறுகிறார்.  நாரணம் என்பது ஜீவகூட்டத்தைக் குறிக்கும்.  நாராயண என்னும் சொல் இந்த கருத்தில் ஏற்பட்டதுதான்.  நாரங்களுக்கு அயனமாக இருப்பவன் அல்லது ஜீவ வர்க்கத்துக்கு இருப்பிடமாக இருப்பவன் அல்லது தான் ஜீவவர்க்கத்தை இருப்பிடமாகக் கொண்டவன் என்றும் இந்த சொல் பொருள்படும்.  இவ்வாறு நாரணங்களுள் வாலை இருக்கிறாள் என்று கூறுவது  அவளே நாராயணனின் சக்தி ஆதி சக்தி என்பது புரிகிறது.  தானே லட்சுமி, சரஸ்வதி என்பவர்களாக இருக்கிறாள் என்பது தெரிகிறது.

No comments:

Post a Comment