Tuesday, 6 May 2014

214. I will not visit a temple- is it correct to say this? Agatthiyar says no!

Verse 214
தோரப்பா இவ்வளவும் செய்வார் உண்டு
துடுக்கான கபடகுரு கண்டு தேறு
சீரப்பா உலகோர்கள் சூழ்ந்துக் கொண்டால்
சிவ சிவா வாரன் என்பார் சாந்த யோகி
சாரப்பா நிஜங்கள் என குருதான் அப்பா
சகலமும் காஷிஎன்றே திரிவாரப்பா
வாரப்பா மனத்துடுக்கு ஞானி என்றால்
வாறதில்லை கோவிலுக்கென் றிருப்பார் காணே

Translation:
See son, there are several who do all these
Recognize the deceitful and verbally sharp guru
When surrounded by worldly people
A peaceful guru will say, “Siva Siva!  I will take leave”
He is the true guru
They will roam around as a witness, considering everything as only a sight
However, if it is a jnani who is sharp mentally
He will say, “I will not come to temple.”

Translation:
This is a very interesting verse where Agatthiyar breaks a myth that many of us hold.  It is common to hear from those who claim to be spiritually mature that they will not visit a temple.  Agatthiyar says that this is not correct.  This is only fussing.  A true saint will not claim any superiority by saying that he will not visit a temple.  He will go everywhere but with an attitude that everything is only a sight to behold.  He will not visit a temple seeking a benefit or considering that the Divine resides only there.  For him a temple or a sacred water body is not something that should be consciously ignored, they are all only sights.  He will perceive them with as a witness.  He will not entertain any crowd.  When a group assembles near him he will quietly take leave and go away.  On the other hand, a guru who is verbally sharp, not a good one, will publicly declare that he will not go to a temple.


இப்பாடலில் அகத்தியர் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கூறுகிறார்.  நம்மில் அறிவு ஜீவிகள் என்று தம்மை நினைத்துக்கொள்ளும் பலர் அனைவரும் அறியும் விதமாக, “நான் கோயிலுக்கெல்லாம் போகமாட்டேன்” என்று கூறுவர்.  அகத்தியர் இந்த செயலைத் தவறென்று சுட்டிக் காட்டுகிறார்.  ஒரு சாந்த குரு தன்னைச் சுற்றி கும்பல் சேர்க்கமாட்டார்.  தம்மை மக்கள் அணுகினால், “நான் சென்று வருகிறேன்” என்று விடைபெற்றுவிடுவர்.  ஆனால் ஒரு வாய்த் துடுக்கும் மனத்துடுக்கும் உடைய குரு தன்னைச் சுற்றி கும்பலைச் சேர்த்துக்கொண்டு, “நான் கோயிலுக்கு வரமாட்டேன்” என்று அறிவிப்பர்.  இதற்கு மாறாக ஒரு உண்மையான குரு கோயில் குளம் அனைத்துக்குச் செல்வார். ஆனால் ஒரு பலனை வேண்டியோ அங்கே மட்டும்தான் இறைவன் இருக்கின்றான் என்று எண்ணியோ போகமாட்டார். அவருக்கு அனைத்தும் ஒரு காட்சிப் பொருளே.  அவர் சாட்சி மனோபாவத்திலிருந்து இவ்வுலகைப் பார்ப்பார், அனைத்திலும் ஈடுபடுவார்.

No comments:

Post a Comment