Thursday, 8 May 2014

217. All the knowledge he got from Manonmani

Verse 217
புகட்டினாள் தச தீக்ஷை மகிமை தன்னை
பூரணப்பால் எனக்களித்து அகங்கள் தோறும்
சகட்டினாள் சகல சித்தும் ஆடச் சொன்னாள்
சந்திரபுட் கரணிதன்னில் ஸ்நானம் சொன்னாள்
புகட்டினாள் உலகம்எலாம் முக்கோணத்தில்
பரஞானம் சிவபோதம் விழலாய்ச் செய்தாள்
அகட்டினாள் ஐவர்களை ஈன்றாள் அம்மன்
அவ்வருமை சொல்ல இனி அடிதான் கேளே.

She taught the glorious dasa deeksha
Offering the fully complete essence to me in all the loci
She taught and made all the mystical accomplishments dance
Made me bathe in the Chandra pushkarni
She taught me about all the universes in the triangle
She made the wisdom about parajnana and sivabodham very common
Whe removed the five and birthed (the five), the Mother,
Listen to that glory below.

Commentary:
The supreme mother Manonmani taught Agatthiyar the esoteric dasadeeksha or the initiation of the 8 and 2, the a and u, about Siva and Sakti.  She granted him the fully complete essence the supreme accomplishment in all the loci, the cakras so that he attained all the siddhis.  Chandra pushkarni means the water body of the moon.  This is the ambrosia that descends upon attainment of kundalini siddhi. 

Incidentally, the temple tank in SriRanganatha Temple in Srirangam, Tiruchirapallai is called Chandra Pushkarni to refer to this concept only.  The temple itself is constructed to represent the stages of kundalini yoga with the event, vaikunta ekadasi festival of opening of the threshold to heaven, indicating the soul reaching the threshold of wisdom, the sahasrara.  The Chandra pushkarni is near this door in the temple.

The triangle referred to here may mean the middle triangle of the Sricakra which is the supreme yantra for worshipping Sakti.  The SriCakra is a representation of the cosmos, its creation and dissolution.  We will elaborate on this if Agatthiyar wills in a verse later.  For now suffice to say that he may be referring to any of this.  In the case of fire oblations, homa, if the altar is created in a triangular shape and fire started in it, it is called Sivaagni.  The performer of the homa offers everything to his fire with attitude of Sivoham (Saundarya lahari verse 33- Siva vakkiyam is posting translations of Saundarya Lahari verses.).

Agatthiyar says that when this supreme knowledge was imparted to him the wisdom about the Divine and about Siva became very familiar to him.  He adds that Manonmani or the state of Supreme consciousness removed the ‘five’.  They may be the five elements, five subtle qualities, five senses, five organs of action and five sheaths or koshas.  Thirumular in his Tirumandiram gives another interpretation this ‘five.’ (verse 1224).  He says the locus of Manonmani is the ‘kodhandam or the staff’, the fifty will abide, she is the paraapara and para and she performs the five actions.  The staff is the sushumna nadi.  The fifty are the fifty letters of the Sanskrit alphabet, in other words, the nada or the sound which is the origin of these letters, words and all forms of sound.  The paraapara is the formless-form of the Divine, that is, it exists in both the states, having a form and being formless.  The five actions are creation, sustenance, dissolution, concealment and grace.  When Agatthiyar says she removed the five, Manonmani removed the effects of these five actions, that is, granted him a deathless state and true wisdom which is not concealed by any limitations, meijnanam.
Agatthiyar says that he will explaining the supreme knowledge in the subsequent verses.

 
மனோன்மணி அம்மன் தனக்கு தச தீக்ஷை அதாவது 8,2 எனப்படும் அ, உ அல்லது சிவசக்தியைப் பற்றிய ஞானத்தை அளித்தாள், தனக்கு எல்லா சக்கரங்களிலும் சித்தியை அளித்தாள், தன்னை சந்திர புஷ்கரணியில் நீராடச் செய்தாள் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  சந்திர புஷ்கரணி என்பது சஹாஸ்ராரத்திலிருந்து இறங்கும் அமிர்தத்தைக் குறிக்கும்.

இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள புஷ்கரணி, சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.  அந்தக் கோவிலும் குண்டலினி யோகத்தின் பல நிலைகளைக் குறிப்பதாக அமைக்கப்படுகிறது.  அக்கோவிலின் முக்கியமான திருவிழாவான வைகுண்ட ஏகாதசி பரமபதவாசல் திறப்பு, ஜீவன் சஹஸ்ராரத்தை அடைந்து அங்குள்ள வாசலைத் திறந்து பரவெளியை அடைவதை விளக்கும் ஒரு சடங்காகும்.

இப்பாடலில் குறிப்பிடப்படும் முக்கோணம் என்பது தேவியை வழிபடப் பயன்படுத்தும் உச்ச யந்திரமான ஸ்ரீசக்கரத்தைக் குறிக்கலாம்.  அதன் மத்தியில் இருப்பது முக்கோணமும் பிந்துவுமே.  ஸ்ரீவித்யா உபாசனையின் ஒரு வகையான காதி சம்பிரதாயத்தை அகத்தியர் ஏற்படுத்தினார் என்றும் ஹாதி சம்பிரதாயத்தை லோபாமுத்திரா ஏற்படுத்தினார் என்றும் ஒரு கருத்து ஒன்று நிலவுகிறது. அகத்தியர் அனுமதித்தால் இதைப் பற்றி விரிவாக வேறொரு இடத்தில் பார்க்கலாம். 

ஹோமம் செய்யும்போது முக்கோணமாக குண்டத்தை அமைத்து அதில் அக்னியை வளர்த்தால் அது சிவாக்னி எனப்படும்.  இந்த ஹோமத்தைச் செய்பவர் இந்த அக்னியில் அனைத்தையும் சிவோஹம் என்ற மனப்பாடுடன் சமர்ப்பிக்கிறார் என்று சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் 33 குறிப்பிடுகிறது (சிவவாக்கியர் என்னும் முகநூல் முகவரியில் சௌந்தர்யாலஹரியின் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டு வருகிறது)

அகத்தியர் தனக்கு மனோன்மணி அம்மன் இந்த ஞானத்தை அளித்தவுடன் பரஞானம் சிவபோதம் அனைத்தும் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியனவாக ஆயின என்று கூறுகிறார்.  இந்த ஞானத்தை அளித்த மனோன்மணி ‘ஐவரை’ விலக்கினாள் என்கிறார் அகத்தியர்.  இந்த ஐவர் ஐந்து பூதங்கள், அவற்றின் ஐந்து குணங்கள், ஐந்து கர்ம இந்திரியங்கள், ஐந்து ஞான இந்திரியங்கள் அல்லது ஐந்து கோசங்கள் எனப்படும் உடல்கள் ஆகியவையாக இருக்கலாம். 
ஐவர் என்பதற்கு திருமூலர் மற்றுமொரு விளக்கத்தைத் தருகிறார்.  திருமந்திரம் 1224ல் அவர் ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி, ஆகிய ஐம்பதும் உடனே அடங்கிடும், ஆகும் பராபரையோடு அப்பரை அவள், ஆகும் அவள்ஐங் கருமத்தன் தானே.  கோதண்டம் என்பது குண்டலினி பயணிக்கும் சுழுமுனை நாடி. ஐம்பது என்பது அனைத்து சப்தங்களுக்கும் ஆதாரமான சம்ஸ்கிருத எழுத்துக்கள் ஐம்பது.  இந்த எழுத்துக்கள் ஒரு மொழியைச் சேர்ந்தவை மட்டுமல்ல, அவை உலகம் உண்டாவதற்கான தத்துவங்களைக் குறிக்கின்றன என்று நாம் நந்திகேச காசிகாவில் பார்த்தோம் (www.scribd.com).  பராபரை என்பது இறைவனை உருவ அருவ நிலை, பரை என்பது உருவ நிலை.  மனோன்மணியே ஐந்து கர்மங்களுக்கும் காரணம்.  இந்த கருமங்கள்- படைத்தல், காத்தல் ,அழித்தல், மறைத்தல், அருளால் என்பவை.  இவ்வாறு அகத்தியர் ஐந்து என்று குறிப்பிட்டது இந்த ஐந்து கருமங்களையும் குறித்து, மனோன்மணி தனக்கு இறவா நிலையையும் எதனாலும் மறைக்கப்படாத ஞானத்தையும், மெய்ஞ்ஞானத்தையும் அளித்தாள் என்று குறிப்பதாகக் கொள்ளலாம்.

இதைப் பற்றி தான் கீழே விளக்கப் போவதாகக் கூறி அகத்தியர் இப்பாடலைத் தலைக்கட்டுகிறார்.

No comments:

Post a Comment