Thursday 29 May 2014

243. Devi's great action

Verse 243
தேவி வயணம்
பிறந்துதையா இவ்வளவும் எங்கே என்றால்
பெண் ஒருத்தி தான் அதிலே நின்ற கோலம்
சுரந்துதையா இவ்வளவும் அந்த மாதா
சூக்ஷமதே யல்லாது வேறொன்றில்லை
கரந்தானே உலகம் எலாம் மதனப் பாலைக்
காலடியில் காக்கவைத்து சகல ஜெந்தும்
இறந்துதையாஇவ்வளவும் செய்த மாது
எங்கே என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி

Translation:
The greatness of Devi

If asked where from all these emerged, 
The form of a lady who stood in all these.
That mother exuded all these
It is the subtlety, none other,
He hid all the worlds by placing the milk of desire
At the base of the feet.  All the life forms
Died.  The lady who did all these
If questioned, “where?” she is within you, the maiden.

Commentary:
Pujandar explains that everything in the universe emerged from Devi, the creative aspect of the Divine.  Not only she created all these from herself, she also remains within them.  Thus, Divine is both immanent and transcendent.  This verse shows us that Pujandar subscribes to the philosophy, that the Absolute is the material cause as well as the willing cause of the universe.  Some philosophies state that Divine is only the willing cause and prakriti or primordial matter is the material cause and it is distinct from the divine.  Pujandar refutes that theory through this verse.  He further adds that this is the subtlety, the essence.  After creating everything the Divine hid everything, knowledge about all these, by making the souls get distracted by desire for physical pleasures.  Pujandar calls this as madana paal between the legs thus meaning the sexual fluid.  Due to this desire all the life forms go through birth and death, samsara.  When one questions where this lady is now, Pujandar says that she is within oneself. She is a maiden because she has not joined her consort Siva at sahasrara.  She remains in the mooladhara.


உலகில் உள்ள அனைத்தும் தேவியிடமிருந்து தோன்றின என்கிறார் புஜண்டர்.  தேவி அனைத்தையும் தன்னிடமிருந்து சுரக்கிறாள், தானும் அவற்றுள் நிற்கிறாள்.  இது மிக சூட்சுமமான விஷயம் என்கிறார் புஜண்டர்.  சில சம்பிரதாயங்கள் இறைவன் உலகின் நிமித்த காரணம் அதாவது அது தோன்றவேண்டும் என்ற சங்கல்பத்துக்கு மட்டுமே காரணம்.  உலகம் உருவாவதற்கு பிரகிருதியே உபாதான காரணம், கருப்பொருள் (raw material) என்று கூறுகின்றன.  இப்பாடலில் புஜண்டர் அந்த கூற்றை மறுக்கிறார்.  இறைவனே உலகம் தோன்றவேண்டும் என்று எண்ணுபவன், அதற்கு ஆரம்பப் பொருளாகவும் இருப்பவன் என்று அவர் கூறுகிறார்.  இறைவன் அனைத்தையும் படைத்த பிறகு அவற்றைப் பற்றிய உண்மையை உயிர்களிடமிருந்து மறைத்துவிடுகிறான்.  அதற்கு மதனப்பால் அல்லது உடலுறவில் ஆசை என்பதை ஏற்படுத்தியுள்ளான்.  இதனால் உயிர்கள் தங்களது உண்மை நிலையை மறந்துவிட்டு உடலின்பத்தைத் தேடி ஓடுகின்றன, முடிவில் இறப்பைத் தழுவுகின்றன.  இவையனைத்தையும் படைத்த மாது, வாலை எங்கே இருக்கிறாள் என்று கேட்டால் புஜண்டர் அவள் அனைவருள்ளும் இருக்கிறாள் என்கிறார்.  அவள் கன்னி ஏனெனில் தனது சுவாமியான சிவத்துடன் சேராது தனியாக மூலாதாரத்தில் இருக்கிறாள்.  

No comments:

Post a Comment